Home Tamil முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி!

முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி!

Sri Lanka tour of Pakistan 2025

110
Sri Lanka tour of Pakistan 2025

ராவல்பிண்டியில் நேற்று (11) நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணியானது 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது

>>ஜனவரியில் மேற்கிந்திய தீவுகள் – ஆப்கானிஸ்தான் மோதும் T20I தொடர்<<

போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணியானது முதலில் பந்துவீச்சினைத் தெரிவு செய்தது. பின்னர் போட்டியின் ஆரம்பத்தில் பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறினர்.

பாபர் அசாம் (29), மொஹமட் ரிஸ்வான் (5) மற்றும் பக்கர் சமான் (32) போன்ற முன்னணி வீரர்கள் குறுகிய ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்ற நிலையில், பாகிஸ்தான் 24ஆவது ஓவரில் அணி 4 விக்கெட்டுக்கு 95 ஓட்டங்கள் எடுத்து நெருக்கடியில் காணப்பட்டது.

எனினும் ஐந்தாவது விக்கெட்டுக்காக இணைந்த சல்மான் அகா மற்றும் ஹுசைன் தலத் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை உருவாக்க, பாகிஸ்தான் 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டங்கள் எடுத்துக் கொண்டது.

பாகிஸ்தான் துடுப்பாட்டத்தில் சல்மான் அகா தனது இரண்டாவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 87 பந்துகளில் 9 பௌண்டரிகள் அடங்கலாக 105 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் ஹுசைன் தலத் 62 ஓட்டங்கள் பெற்றார்.  இருவரும் ஐந்தாம் விக்கெட் இணைப்பாட்டமாக 138 ஓட்டங்கள் குவித்து வலுவான அடித்தளத்தை அமைத்தனர். இறுதி நேரத்தில் அதிரடி காட்டிய மொஹமட் நவாஸ் வெறும் 23 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்கள் பெற்றார்.

>>2026 T20 உலகக் கிண்ணம்: அரையிறுதிப் போட்டிகளுக்கான மைதானங்கள் தெரிவு<<

இலங்கைத் தரப்பில், சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க சிறப்பாகப் பந்துவீசி 10 ஓவர்களில் 54 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பின்னர் 300 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, பெதும் நிசங்க (29) மற்றும் கமில் மிஷாரா (38) ஆகியோரின் துணையுடன் சிறப்பான ஆரம்பத்தினைப் பெற்றது. எனினும் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப், அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கைக்கு அதிர்ச்சி அளித்தார்.

பின்னர் மத்திய வரிசையில் சதீர சமரவிக்ரம (39) மற்றும் அணித் தலைவர் சரித் அசலங்க (32) ஆகியோர் நிலையான ஒன்றை இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்க முயன்றனர். எனினும், இலங்கை குறுகிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்தது.

இந்த நிலையில், எட்டாம் இலக்க வீரராகக் களமிறங்கிய வனிந்து ஹசரங்க தனது துடுப்பாட்டத்தால் இறுதிவரை போராடினார். ஆனால் 50 ஓவர்களில் இலங்கை அணியானது 9 விக்கெட்டுக்களை இழந்து 293 ஓட்டங்கள் மட்டும் எடுத்து போட்டியில் தோல்வி அடைந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அபாரமாக ஆடிய வனிந்து ஹஸரங்க 52 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

பாகிஸ்தான் அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 61 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, நஷீம் சாஹ் மற்றும் பாஹிம் அஷ்ரப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.

தனது சதத்தின் மூலம் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு வித்திட்ட சல்மான் அகா, ஆட்டநாயகனாகத்  தெரிவு செய்யப்பட்டார்.

Result
Pakistan
299/5 (50)
Sri Lanka
293/9 (50)
Batsmen R B 4s 6s SR
Fakhar Zaman st Kusal Mendis b Wanindu Hasaranga 32 55 2 1 58.18
Saim Ayub lbw b Asitha Fernando 6 14 0 0 42.86
Babar Azam b Wanindu Hasaranga 29 51 3 0 56.86
Mohammad Rizwan lbw b Wanindu Hasaranga 5 8 1 0 62.50
Agha Salman not out 105 87 9 0 120.69
Hussain Talat  lbw b Maheesh Theekshana 62 63 6 1 98.41
Mohammad Nawaz not out 36 23 5 1 156.52
Extras 24 (b 1 , lb 9 , nb 1, w 13, pen 0)
Total 299/5 (50 Overs, RR: 5.98)
Bowling O M R W Econ
Asitha Fernando 10 2 42 1 4.20
Dushmantha Chameera 10 1 63 0 6.30
Maheesh Theekshana 10 0 64 1 6.40
Janith Liyanage  8 0 48 0 6.00
Wanindu Hasaranga 10 0 54 3 5.40
Charith Asalanka 2 0 18 0 9.00

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Mohammad Rizwan b Haris Rauf 29 39 3 0 74.36
Kamil Mishara  c Shaheen Shah Afridi b Haris Rauf 38 36 5 1 105.56
Kusal Perera b Haris Rauf 0 1 0 0 0.00
Sadeera Samarawickrama c Babar Azam b Haris Rauf 39 48 6 0 81.25
Charith Asalanka st Mohammad Rizwan b Mohammad Nawaz 32 49 2 0 65.31
Janith Liyanage  b Naseem Shah 28 24 2 2 116.67
Kamindu Mendis b Faheem Ashraf 9 13 1 0 69.23
Wanindu Hasaranga c Babar Azam b Naseem Shah 59 52 7 0 113.46
Dushmantha Chameera c & b Faheem Ashraf 7 19 0 0 36.84
Maheesh Theekshana not out 21 18 2 0 116.67
Asitha Fernando not out 0 2 0 0 0.00
Extras 31 (b 1 , lb 3 , nb 1, w 26, pen 0)
Total 293/9 (50 Overs, RR: 5.86)
Bowling O M R W Econ
Shaheen Shah Afridi 10 0 50 0 5.00
Naseem Shah 10 1 55 2 5.50
Haris Rauf 10 0 61 4 6.10
Faheem Ashraf 10 0 49 2 4.90
Mohammad Nawaz 8 0 48 1 6.00
Saim Ayub 1 0 12 0 12.00
Hussain Talat  1 0 14 0 14.00

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<