முக்கிய மாற்றங்களுடன் நியூசிலாந்து தொடருக்கான ஒருநாள், T20i குழாம்கள் அறிவிப்பு!

Sri Lanka tour of New Zealand 2023

2770
Sri Lanka ODI and T20I squads announced

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20i போட்டிகளுக்கான குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ள ஒருநாள் குழாத்தில் முக்கிய மாற்றமாக அனுபவ துடுப்பாட்ட வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அஞ்செலோ மெதிவ்ஸ் இறுதியாக கடந்த 2021ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20i போட்டிகளில் விளையாடியிருந்தார்.

>> சிறப்பான ஆரம்பத்தினைப் பெற்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி

அஞ்செலோ மெதிவ்ஸின் வருகையுடன் உள்ளூர் போட்டிகளில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்திவந்த சஹான் ஆராச்சிகே தேசிய அணியில் இடத்தை பிடித்துள்ளார். இவருடன் துஷ்மந்த சமீரவின் உபாதை காரணமாக, மாலிங்க பாணியில் பந்துவீசும் மதீஷ பதிரண ஒருநாள் மற்றும் T20i குழாம்களில் இடம்பிடித்துள்ளார்.

அதேநேரம் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பிரகாசிக்க தவறியிருந்த அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோருடன் உபாதைக்குள்ளாகியிருந்த அஷேன் பண்டார ஒருநாள் மற்றும் T20i குழாம்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

T20i குழாத்தை பொருத்தவரை நீண்ட நாட்கள் உபாதை காரணமாக போட்டிகளில் விளையாடாத குசல் ஜனித் பெரேரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவருடன் உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்திருந்த லசித் குரூஸ்புள்ளே மற்றும் நுவனிந்து பெர்னாண்டோ ஆகியோரும் T20i குழாத்தில் இடங்களை பிடித்துள்ளனர்.

இதேவேளை T20I உலகக்கிண்ணம், அவுஸ்திரேலிய தொடர் மற்றும் இந்திய அணிக்கு எதிரான தொடர்களில் பிரகாசிக்கத்தவறிய பானுக ராஜபக்ஷ இரண்டு குழாம்களிலிலும் இடத்தை பிடிக்கவில்லை. இவருடன் நுவான் துஷார T20i குழாத்திலிருந்து வெளியேறும் மற்றுமொரு வீரராக மாறியுள்ளார்.

மேற்குறித்த மாற்றங்களை தவிர்த்து இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20i குழாம்களில் விளையாடிய அனைத்து வீரர்களும் நியூசிலாந்து தொடருக்கான குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

அணியின் தலைவராக தொடர்ந்தும் தசுன் ஷானக செயற்படவுள்ளதுடன், ஒருநாள் போட்டிகளுக்கான உப தலைவராக குசல் மெண்டிஸ் மற்றும் T20i தொடருக்கான உப தலைவராக வனிந்து ஹஸரங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர் மார்ச் 25ம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஒருநாள் குழாம்

தசுன் ஷானக (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, நுவனிந்து பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், சரித் அசலங்க, சதீர சமரவிக்ரம, தனன்ஜய டி சில்வா, சஹான் ஆராச்சிகே, வனிந்து ஹஸரங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, லஹிரு குமார, பிரமோத் மதுசான், டில்ஷான் மதுசங்க, சாமிக்க கருணாரத்ன, மதீஷ பதிரண

இலங்கை T20i குழாம்

தசுன் ஷானக (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, நுவனிந்து பெர்னாண்டோ, குசல் பெரேரா, சரித் அசலங்க, சதீர சமரவிக்ரம, தனன்ஜய டி சில்வா, லசித் குரூஸ்புள்ளே, வனிந்து ஹஸரங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, லஹிரு குமார, பிரமோத் மதுசான், டில்ஷான் மதுசங்க, சாமிக்க கருணாரத்ன, மதீஷ பதிரண

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<