இலங்கையின் வேகப்பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொள்ளும் நியூசிலாந்து

554

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் வெலிங்டனில் நடைபெற்று வரும் முதாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து அணி, கேன் வில்லியம்சன் மற்றும் டொம் லத்தாம் ஆகியோரின் அபார ஆட்டங்களின் உதவியுடன் 2 விக்கெட்டுகளை இழந்து 311 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்ட மெதிவ்ஸ், திமுத் மற்றும் டிக்வெல்ல

வெலிங்டன் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின்…

நேற்றைய ஆட்டநேர முடிவில் 275 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை அணி, இன்றைய தினம் மேலும் 7 ஓட்டங்களை பெற்று, சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதிவரை களத்தில் இருந்த நிரோஷன் டிக்வெல்ல ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூசிலாந்து அணி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஜீட் ராவல் மற்றும் டொம் லத்தாம் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 59 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில், அரைச்சதத்தை நோக்கிய ஜீட் ராவல், லஹிரு குமாரவின் பந்து வீச்சில், டிக்வெல்லவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதன்படி, நியூசிலாந்து அணி 59 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்திருந்த போது போட்டி உணவு இடைவேளைக்காக நிறுத்தப்பட்டது.

உணவு இடைவேளையின் பின்னர் நியூசிலாந்து அணி தங்களுடைய துடுப்பாட்டத்தில் மேலும்  வலுசேர்த்துக்கொண்டது. அணித் தலைவர் கேன் வில்லியம்சன் வேகமாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினார். மறுபக்கம் டொம் லத்தாம் அரைச்சதம் கடந்தார். பாகிஸ்தான் தொடரில் ஆறு இன்னிங்ஸ்களில் 99 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்த லத்தாம் தனது வழமையான துடுப்பாட்டத்துக்கு திரும்பியிருந்தார்.

லத்தாமிற்கு அடுத்தடுப்படியாக கேன் வில்லியம்சனும் அவருடைய அரைச்சதத்தை பெற்றுக்கொள்ள இவர்கள் இருவரும் இணைந்து 100 ஓட்ட இணைப்பாட்டத்தை கடந்தனர். இதன்படி இருவரும் இணைந்து ஓட்டங்களை குவிக்க நியூசிலாந்து அணி தேநீர் இடைவேளையின் போது 175 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்திருந்தது.

இலங்கை அணியின் புதிய தலைவராக லசித் மாலிங்க

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 தொடர்களுக்கான இலங்கை அணியின்….

தொடர்ந்து தேநீர் இடைவேளையின் பின்னர் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 200 ஓட்டங்களை கடந்தது. எனினும் சதத்தை நெருங்கிய கேன் வில்லியம்சன் 93 பந்துகளுக்கு 91 ஓட்டங்களை பெற்று, தனன்ஜய டி சில்வாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எவ்வாறாயினும், இதன் பின்னர் களமிறங்கிய ரோஸ் டெய்லருடன் இணைந்து லத்தாம் இன்றைய ஆட்டநேர முடிவுவரை துடுப்பெடுத்தாடினார். லத்தாம் ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களை குவிக்க, ரோஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி, நியூசிலாந்து அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 311 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இலங்கை அணி சார்பாக லஹிரு குமார மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதேவேளை நியூசிலாந்து அணி, இலங்கை அணியை விட, 29 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

போட்டி சுருக்கம்