இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்ட மெதிவ்ஸ், திமுத் மற்றும் டிக்வெல்ல

1406

வெலிங்டன் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ள சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, இன்றைய நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணியின் புதிய தலைவராக லசித் மாலிங்க

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 தொடர்களுக்கான இலங்கை…

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன், இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணிக்கு, டிம் சௌதியின் வேகப்பந்து வீச்சு நெருக்கடியை கொடுத்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க ஒரு ஓட்டம், தனன்ஜய டி சில்வா ஒரு ஓட்டம் மற்றும் குசல் மெண்டிஸ் 2 ஓட்டங்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க, இலங்கை அணி 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் இதன் பின்னர், ஜோடி சேர்ந்த இலங்கை அணியின் புதிய உப தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் இணைந்து சிறந்த இணைப்பாட்டத்தை அணிக்கு பெற்றுக்கொடுத்தனர். இருவரும் நிதானமாக ஓட்டங்களை குவிக்க, இலங்கை அணி மதிய போசண இடைவேளையின் போது, 3 விக்கெட்டுகளை இழந்து 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து மதிய போசண இடைவேளைக்கு பின்னரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த திமுத் கருணாரத்ன தனது அரைச்சதத்தை கடந்தார். அவருடன் அஞ்செலோ மெதிவ்ஸும் அரைச்சதம் கடக்க இலங்கை அணி வலுவான நிலைக்கு முன்னேறியது. எவ்வாறாயினும், திமுத் கருணாரத்ன, நெயில் வெக்னரின் பந்துவீச்சில் 79 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்துவந்த அணித் தலைவர் தினேஷ் சந்திமால் 6 ஓட்டங்களுடன் டிம் சௌதியின் பந்து வீச்சில் வெளியேறினார்.

இவ்வாறு, விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட, சௌதியின் பந்துவீச்சில் மெதிவ்ஸ் 83 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவரின் ஆட்டமிழப்புடன் இலங்கை அணி 187 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. தொடர்ச்சியாக நிரோஷன் டிக்வெல்ல மாத்திரம் அணிக்கு போராடி ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இலங்கைக்கு மிகப் பெரிய சவாலுடன் காத்திருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி

நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தமது சுற்றுப் பயணத்தில் முதல் கட்டமாக…

மெதிவ்ஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோருக்கு அடுத்தபடியாக நிரோஷன் டிக்வெல்ல ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களை பெற்று களத்தில் உள்ளார். பந்து வீச்சில் டிம் சௌதி 5 விக்கெட்டுகளையும், நெயில் வெக்னர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஸ்கோர் விபரம்









Title





Full Scorecard

Sri Lanka

282/10 & 287/3

(115 overs)

Result

New Zealand

578/10 & 0/0

(0 overs)

Sri Lanka’s 1st Innings

Batting R B
Danushka Gunathilaka lbw by T Southee 1 9
Dimuth Karunarathne c BJ Watling b N Wagner 79 144
Dhananjaya de Silva c BJ Watling b T Southee 1 7
Kusal Mendis c A Patel b T Southee 2 4
Angelo Mathews c BJ Watling b T Southee 83 153
Dinesh Chandimal c A Patel b T Southee 6 34
Niroshan Dickwella not out 80 101
Dilruwan Perera c BJ Watling b de Grandhomme 16 38
Suranga Lakmal c H Nicholls b N Wagner 3 12
Kasun Rajitha c BJ Watling b T Boult 2 32
Lahiru Kumara c de Grandhomme b T Southee 0 8
Extras
9 (lb 7, nb 2)
Total
282/10 (90 overs)
Fall of Wickets:
1-5 (D Gunathilaka, 1.6 ov), 2-7 (D De Silva, 3.2 ov), 3-9 (K Mendis, 3.6 ov), 4-142 (D Karunarathne, 46.3 ov), 5-167 (D Chandimal, 57.2 ov), 6-187 (A Mathews, 59.3 ov), 7-223 (D Perera, 69.5 ov), 8-240 (S Lakmal, 74.2 ov), 9-275 (K Rajitha, 86.6 ov), 10-282 (L Kumara, 89.6 ov)
Bowling O M R W E
Trent Boult 27 6 83 1 3.07
Tim Southee 27 7 68 6 2.52
Colin de Grandhomme 13 2 35 1 2.69
Neil Wagner 20 2 75 2 3.75
Ajaz Patel 3 0 14 0 4.67

New Zealand ‘s 1st Innings

Batting R B
Jeet Raval c N Dickwella b L Kumara 43 70
Tom Latham not out 264 489
Kane Williamson c K Rajitha b D De Silva 91 93
Ross Taylor c D Karunarathne b L Kumara 50 88
Henry Nicholls c K Rajitha b D Perera 50 101
BJ Watling c N Dickwella b L Kumara 0 6
C de Grandhomme c K Rajitha b D De Silva 49 53
Tim Southee (runout) D Chandimal 6 14
Neil Wagner c D De Silva b S Lakmal 0 6
Ajaz Patel b D Perera 6 21
Trent Boult c N Dickwella b L Kumara 11 6
Extras
8 (lb 5, w 1, nb 2)
Total
578/10 (157.3 overs)
Fall of Wickets:
1-59 (J Raval, 22.6 ov), 2-221 (K Williamson, 59.3 ov), 3-312 (R Taylor, 84.4 ov), 4-426 (H Nicholls, 122.5 ov), 5-426 (BJ Watling, 123.6 ov), 6-499 (de Grandhomme, 138.6 ov), 7-520 (T Southee, 144.6 ov), 8-520 (N Wagner, 145.6 ov), 9-549 (A Patel, 154.5 ov), 10-578 (T Boult, 157.3 ov)
Bowling O M R W E
Suranga Lakmal 31 6 88 1 2.84
Kasun Rajitha 34 5 144 0 4.24
Angelo Mathews 4 3 1 0 0.25
Dilruwan Perera 40 1 156 2 3.90
Lahiru Kumara 31.3 2 127 4 4.06
Dhananjaya de Silva 15 0 54 2 3.60
Danushka Gunathilaka 2 1 3 0 1.50

Sri Lanka’s 2nd Innings

Batting R B
Danushka Gunathilaka lbw by T Boult 3 17
Dimuth Karunarathne c T Boult b T Southee 10 13
Dhananjaya de Silva b T Southee 0 5
Kusal Mendis not out 141 335
Angelo Mathews not out 120 323
Extras
13 (lb 2, w 8, nb 3)
Total
287/3 (115 overs)
Fall of Wickets:
1-5 (D Gunathilaka, 3.3 ov), 2-10 (D De Silva, 4.5 ov), 3-13 (D Karunarathne, 6.2 ov)
Bowling O M R W E
Tim Southee 25 8 52 2 2.08
Trent Boult 25 4 62 1 2.48
Neil Wagner 23 4 100 0 4.35
Colin de Grandhomme 13 4 24 0 1.85
Ajaz Patel 28 10 46 0 1.64
Jeet Raval 1 0 1 0 1.00

New Zealand ‘s 2nd Innings

Batting R B
Extras
Total
0/0 (0 overs)
Fall of Wickets:
Bowling O M R W E







 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<