இலங்கை அணிக்காக கரம் கொடுக்கும் தனன்ஞய – கமிந்து ஜோடி

152

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணியானது துடுப்பாட்ட சரிவில் இருந்து மீள போராடி வருகின்றது.  

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புது வரலாறு படைத்த ஒல்லி போப்

லண்டன் ஓவல் அரங்கில் இந்த வெள்ளிக்கிழமை (06) தொடக்கம் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநிறைவில் மழையின் தாக்கம் ஏற்பட்டதனால் 44.1 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டது. முதல் நாள் ஆட்டநிறைவில் குறிப்பிட்ட ஓவர்கள் அனைத்திற்கும் முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இங்கிலாந்து அணியானது 221 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. இங்கிலாந்து அணிக்காக களத்தில் ஆட்டமிழக்காது இருக்கும் ஒல்லி போப் 103 ஓட்டங்களுடன் இருக்க, ஹர்ரி புரூக் 8 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தார் 

பின்னர் நேற்று (07) தொடர்ந்த இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி ஒல்லி போப்பின் சதத்துடன் முன்னேறியது. எனினும் அவ்வணி தன்னுடைய 5ஆவது விக்கெட்டினை 290 ஓட்டங்களுக்கு பறிகொடுத்ததன் பின்னர் சரிவினை எதிர்கொள்ள 69.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் 325 ஓட்டங்களுடன் சுருண்டது 

இங்கிலாந்து தரப்பில் அதன் தலைவர் ஒல்லி போப் 2 சிக்ஸர்கள் மற்றும் 19 பௌண்டரிகள் அடங்கலாக 154 ஓட்டங்கள் எடுக்க இலங்கை அணியின் பந்துவீச்சில் மிலான் ரத்நாயக்க 3 விக்கெட்டுக்களையும் தனன்ஞய டி சில்வா, லஹிரு குமார மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றினர் 

இங்கிலாந்தினை அடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணியானது பெதும் நிஸ்ஸங்க மூலம் சிறந்த ஆரம்பத்தினைப் பெற்றுக் கொண்டது. அதிரடியாக ஆடிய பெதும் நிஸ்ஸங்க 51 பந்துகளில் 9 பௌண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்கள் எடுத்தார் 

மழையின் தாக்கத்திற்கு மத்தியில் இங்கிலாந்து முன்னிலை

பெதும் நிஸ்ஸங்கவின் விக்கெட்டின் பின்னர் குறுகிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்து இலங்கை அணியானது 93 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து ஒரு கட்டத்தில் தடுமாறியது. 

எனினும் இந்த தருணத்தில் அணித்தலைவர் தனன்ஞய டி சில்வாகமிந்து மெண்டிஸ் ஜோடி பொறுப்புடன் ஆடியதோடு அவர்கள் இலங்கை அணியினையும் சரிவில் இருந்து மீட்டனர் 

இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக கைவிடப்பட்ட போது இலங்கை 211 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது 

இலங்கை அணியின் 6ஆம் விக்கெட்டுக்காக 118 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் கமிந்து மெண்டிஸ் 54 ஓட்டங்களைப் பெற, தனன்ஞய டி சில்வா 64 ஓட்டங்களை எடுத்திருந்தார் 

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பாக ஒல்லி ஸ்டோன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்ற, ஜோஸ் ஹல் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டினார் 

போட்டியின் சுருக்கம்  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<