நிரல்படுத்தல் போட்டியில் இலங்கை அணிக்கு மீண்டுமொரு வெற்றி

278

ஆசிய விளையாட்டு விழாவில் 13 தொடக்கம்16 இடங்களுக்கான நிரல்படுத்தல் அரையிறுதிப் போட்டியில் நேபாள அணியை எதிர்கொண்ட இலங்கை கரப்பந்தாட்ட அணி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, 13-14ம் இடங்களுக்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

குழுநிலையில் இடம்பெற்ற கடைசிப் போட்டியில் சீன அணியிடம் 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்த இலங்கை அணி காலிறுதிக்கான வாய்ப்பை தவறவிட்டிருந்தது. பின்னர் மாலைத்தீவுகள் அணிக்கு எதிரான 13-20 இடங்களுக்கான நிரல்படுத்தல் போட்டியில் 3-1 செட் கணக்கில் வென்று, 13-16 இடங்களுக்கான நிரல்படுத்தல் அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற 13-16 இடங்களுக்கான நிரல்படுத்தல் போட்டியில் இலங்கை அணி, ஆரம்ப செட்டில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. சிறப்பாக செயற்பட்ட நேபாள அணி முதல் செட்டை 25-23 என கைப்பற்றியது.

இலங்கை அஞ்சலோட்ட அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி

எனினும் அடுத்த செட்களில் அபாரமாக ஆடிய இலங்கை அணி, நேபாள அணிக்கு நெருக்கடி கொடுத்தது. இரண்டாவது செட்டை 25-16 என இலகுவாக கைப்பற்றிய இலங்கை அணி, அடுத்த இரண்டு செட்களையும் 26-24 மற்றும் 25-21 என கைப்பற்றி, போட்டியை 3-1 என வெற்றிகொண்டது.

இலங்கை அணி, மலேசிய அணிக்கு எதிரான முதல் நிரல்படுத்தல் போட்டி மற்றும் இன்றைய நேபாள அணிக்கு எதிரான போட்டி என்ற இரண்டு போட்டிகளிலும், முதல் செட்டில் தோல்வியடைந்த பின்னர், போட்டியை வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கை அணி, 13-14 ஆம் இடங்களுக்கான இறுதிப்போட்டியில் நாளை (31) விளையாடவுள்ளது.


நிரல்படுத்தல் போட்டியில் மாலைத்தீவுகளை வீழ்த்திய இலங்கை கரப்பந்து அணி

ஆசிய விளையாட்டு விழாவின் கரப்பந்தாட்ட போட்டித் தொடரில் காலிறுதிக்கான வாய்ப்பை தவறவிட்ட இலங்கை ஆடவர் அணி, 13-20 வரையிலான நிரல்படுத்தல் போட்டியில் மாலைத்தீவுகள் அணியை 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தியுள்ளது.

குழுநிலையில் இடம்பெற்ற கடைசிப் போட்டியில் சீன அணியிடம் 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்த இலங்கை அணி காலிறுதிக்கான வாய்ப்பை தவறவிட்டிருந்தது. இந்த நிலையில் அணிகளுக்கான நிரல்படுத்தல் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை கரப்பந்தாட்ட அணிக்கு முதல் வெற்றி

இந்தோனேசியாவில் இடம்பெற்று வரும் ஆசிய …

இதன்படி 13-20 வரையிலான இடங்களுக்கான நிரல் படுத்தல் போட்டியில் இலங்கை அணி மாலைத்தீவுகள் அணியை எதிர்கொண்டு விளையாடியது.

போட்டியின் ஆரம்பம் இலங்கை அணிக்கு மோசமானதாக அமைந்தது. இலங்கை அணிக்கு கடும் சவாலை கொடுத்த மாலைத்தீவுகள் அணி முதல் செட்டை 25-16 என கைப்பற்றி வெற்றிபெற்றது. இதனால் அடுத்த செட்களில் இலங்கை அழுத்தத்திற்கு மத்தியில் விளையாட நேரிட்டது.

எனினும், இரண்டாவது செட்டில் சிறப்பாக ஆடிய இலங்கை அணி 25-18 என செட்டை கைப்பற்றி, போட்டியை 1-1 என சமப்படுத்தியது. தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதிவரை வெற்றியை கணிக்க முடியாத இந்த செட்டில் 27-25 என இலங்கை அணி த்ரில் வெற்றிபெற்று போட்டியில் 2-1 என முன்னேறியது. பின்னர் நடைபெற்ற நான்காவது செட்டை, இலங்கை அணி 25-15 என இலகுவாக கைப்பற்றி போட்டியின் வெற்றியை உறுதிசெய்தது.

இதேவேளை இந்த போட்டியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி, எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ள, 13-16 இடங்களுக்கான நிரல்படுத்தல் அரையிறுதி போட்டியில் விளையாடவுள்ளது.

இலங்கை எதிர் சீனா

இலங்கை கரப்பந்தாட்ட அணி, சீன அணிக்கு எதிராக நடைபெற்ற தமது மூன்றாவது குழு நிலைப் போட்டியி்ல் 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது.

Photos: Sri Lanka vs Vietnam | Men’s Volleyball (Pool E) | Asian Games 2018

ThePapare.com |23/08/2018 Editing and re-using images without …

அதேவேளை, தாய்லாந்து மற்றும் வியட்னாம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தாய்லாந்து அணி வெற்றிபெற்று, 7 புள்ளிகளுடன் குழு நிலைப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துக்கொண்டது.

இதன் அடிப்படையில் மூன்று புள்ளிகளுடன் இருந்த சீனா மற்றும் இலங்கை அணிகள் இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரம் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்ற அடிப்படையில் களமிறங்கின.

உலக தரவரிசையில் இருபதாவது இடத்திலுள்ள சீன அணிக்கு, இலங்கை அணி  (76 ஆவது இடம்) சவால் கொடுக்க முடியும் என்ற எண்ணத்துடன் களமிறங்கியது. ஆனால் இலங்கை அணியின் நம்பிக்கையை சீன அணி முதல் செட்டில் உடைத்தெறிந்தது. இலங்கை அணிக்கு கடும் சவாலை கொடுத்த சீன அணி முதல் செட்டை 10 புள்ளிகள் வித்தியாசத்தில் 25-15 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியது.

பின்னர், ஆரம்பமாகிய இரண்டாவது செட்டில் இலங்கை அணி வீரர்கள் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விறுவிறுப்பாக சென்ற இரண்டாவது செட்டை 25-20 என கைப்பற்றிய இலங்கை அணி போட்டியை 1-1 என சமப்படுத்தி மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

 சொந்த மண்ணில் இந்தோனேஷியாவை தோற்கடித்த இலங்கை அணி

எனினும் அடுத்த இரண்டு செட்களிலும் இலங்கை அணி கவனக்குறைவுடனான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பந்து பணித்தல் மற்றும் பந்தை அடித்தலில் புள்ளிகளை எதிரணிக்கு விட்டுக்கொடுத்த இலங்கை, தடுப்பிலும் மோசமாக செயற்பட்டதை காணக்கூடியதாக இருந்தது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட சீன அணி அடுத்த இரண்டு செட்களையும், 25-14 மற்றும் 25-17 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவாக கைப்பற்றி வெற்றிபெற்றது.

எவ்வாறாயினும் கடந்த கால போட்டிகளுடன் ஒப்பிடுகையில் இந்த முறை இலங்கை கரப்பந்தாட்ட அணி சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளது. முதல் போட்டியில் தாய்லாந்து அணிக்கு நெருக்கடியை கொடுத்திருந்த இலங்கை, அடுத்த போட்டியில் வியட்னாம் அணியை 3-0 என வீழ்த்தியிருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்தப் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.

இதன் அடிப்படையில் சீன அணி 6 புள்ளிகளுடன் E குழுவில் இரண்டாவது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இலங்கை அணி 3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<