Home Tamil முஷ்பிகுர் ரஹீமின் சதத்துடன் வலுப்பெற்றிருக்கும் பங்களாதேஷ் அணி

முஷ்பிகுர் ரஹீமின் சதத்துடன் வலுப்பெற்றிருக்கும் பங்களாதேஷ் அணி

76
 

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவடைந்திருக்கும் நிலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி முஷ்பிகுர் ரஹீமின் சதத்துடன் வலுப் பெற்றிருக்கின்றது.

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நிறைவுக்கு வரும் போது பங்களாதேஷ் அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 318 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் களத்தில் ஆட்டமிழக்காது இருந்த லிடன் தாஸ் 54 ஓட்டங்களையும், முஷ்பிகுர் ரஹீம் 54 ஓட்டங்களையும் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் இன்று தொடர்ந்த போட்டியின் நான்காம் நாளில் 79 ஓட்டங்கள் மாத்திரமே இலங்கையினைப் விட பின்தங்கியிருந்த பங்களாதேஷ் அணி, முஷ்பிகுர் ரஹீம் மற்றும் லிடன் தாஸ் ஆகியோரின் அபார ஆட்டத்தோடு இலங்கையின் முதல் இன்னிங்ஸ் (397) ஓட்டங்களை கடந்தது. பங்களாதேஷ் அணியின் நான்காம் விக்கெட்டாக கசுன் ராஜிதவின் பந்துவீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்த லிடன் தாஸ் தன்னுடைய 12ஆவது டெஸ்ட் அரைச்சதத்தோடு 10 பௌண்டரிகள் அடங்கலாக 88 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அத்துடன் அவர் பங்களாதேஷ் அணியின் மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 165 ஓட்டங்களை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் தன்னுடைய 8ஆவது டெஸ்ட் சதத்தினை பெற்ற முஷ்பிகுர் ரஹீம் பங்களாதேஷ் அணியினை தமது அணி விக்கெட்டுக்களை பறிகொடுத்த போதும் தொடர்ந்தும் வலுப்படுத்தினார். பின்னர், முஷ்பிகுர் ரஹீமின் விக்கெட் லசித் எம்புல்தெனியவின் பந்துவீச்சில் போல்ட் செய்யப்பட்ட பறிபோக, இறுதியில் பங்களாதேஷ் அணி 170.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தமது முதல் இன்னிங்ஸிற்காக 465 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் கசுன் ராஜித 4 விக்கெட்டுக்களையும், அசித் பெர்னாண்டோ 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IPL தொடரிலிருந்து விலகி நாடு திரும்பும் வில்லியம்ஸன்

பங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸை தொடர்ந்து அவ்வணியினை விட 68 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடங்கிய இலங்கை அணி, போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றமான நிலையில் காணப்படுகின்றது.

இலங்கை அணி தற்போது பங்களாதேஷ் அணியினை விட 29 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் காணப்பட, களத்தில் தற்போது இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது காணப்படுகின்றார்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பில் தய்ஜூல் இஸ்லாம் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்


Result

Match drawn

Sri Lanka
397/10 (153) & 260/6 (90.1)

Bangladesh
465/10 (170.1)

Batsmen R B 4s 6s SR
Oshada Fernando c Liton Das b Nayeem Hasan 36 76 3 1 47.37
Dimuth Karunaratne lbw b Nayeem Hasan 9 17 0 0 52.94
Kusal Mendis c Nayeem Hasan b Taijul Islam 54 131 3 0 41.22
Angelo Mathews c Shakib Al Hasan (vc) b Nayeem Hasan 199 397 19 1 50.13
Dhananjaya de Silva c Mahmudul Hasan Joy  b Shakib Al Hasan (vc) 6 27 0 0 22.22
Dinesh Chandimal lbw b Nayeem Hasan 66 148 2 3 44.59
Niroshan Dickwella b Nayeem Hasan 3 3 0 0 100.00
Ramesh Mendis b Shakib Al Hasan (vc) 1 8 0 0 12.50
Lasith Embuldeniya lbw b Shakib Al Hasan (vc) 0 1 0 0 0.00
Vishwa Fernando not out 17 84 3 0 20.24
Asitha Fernando  b Nayeem Hasan 1 27 0 0 3.70


Extras 5 (b 4 , lb 0 , nb 1, w 0, pen 0)
Total 397/10 (153 Overs, RR: 2.59)
Fall of Wickets 1-23 (7.5) Dimuth Karunaratne, 2-66 (21.2) Oshada Fernando, 3-158 (56.1) Kusal Mendis, 4-183 (65.2) Dhananjaya de Silva, 5-319 (113.1) Dinesh Chandimal, 6-323 (113.5) Niroshan Dickwella, 7-328 (116.2) Ramesh Mendis, 8-328 (116.3) Lasith Embuldeniya, 9-390 (148.5) Asitha Fernando , 10-397 (152.6) Angelo Mathews,

Bowling O M R W Econ
Shoriful Islam 20 3 55 0 2.75
Taskin Ahmed 16 1 66 0 4.12
Nayeem Hasan 30 4 105 6 3.50
Taijul Islam 48 12 107 1 2.23
Shakib Al Hasan (vc) 39 12 60 3 1.54
Batsmen R B 4s 6s SR
Mahmudul Hasan Joy  c Niroshan Dickwella b Asitha Fernando  58 142 9 0 40.85
Tamim Iqbal b Kasun Rajitha 133 218 15 0 61.01
Najmul Hossain Shanto c Niroshan Dickwella b Kasun Rajitha 1 22 0 0 4.55
Mominul Haque b Kasun Rajitha 2 19 0 0 10.53
Mushfiqur Rahim b Lasith Embuldeniya 105 282 4 0 37.23
Liton Das c Niroshan Dickwella b Kasun Rajitha 88 189 10 0 46.56
Shakib Al Hasan (vc) c Niroshan Dickwella b Asitha Fernando  26 44 3 0 59.09
Nayeem Hasan c Kusal Mendis b Dhananjaya de Silva 9 53 0 0 16.98
Taijul Islam c Chamika Karunaratne b Asitha Fernando  20 45 3 0 44.44
Shoriful Islam retired 3 11 0 0 27.27
Khaled Ahmed not out 0 4 0 0 0.00


Extras 20 (b 4 , lb 8 , nb 8, w 0, pen 0)
Total 465/10 (170.1 Overs, RR: 2.73)
Fall of Wickets 1-162 (48.5) Mahmudul Hasan Joy , 2-172 (54.4) Najmul Hossain Shanto, 3-184 (60.5) Mominul Haque, 4-385 (134.1) Liton Das, 5-385 (134.2) Tamim Iqbal, 6-421 (146.1) Shakib Al Hasan (vc), 7-439 (157.1) Mushfiqur Rahim, 8-450 (163.6) Nayeem Hasan, 9-465 (169.2) Taijul Islam, 10-465 (170.1) Shoriful Islam,

Bowling O M R W Econ
Vishwa Fernando 8 0 42 0 5.25
Asitha Fernando  26 4 72 3 2.77
Ramesh Mendis 45 10 119 0 2.64
Lasith Embuldeniya 47 9 104 1 2.21
Dhananjaya de Silva 19 2 48 1 2.53
Kasun Rajitha 24.1 6 60 4 2.49
Kusal Mendis 1 0 8 0 8.00


Batsmen R B 4s 6s SR
Oshada Fernando run out (Taijul Islam) 19 36 3 0 52.78
Dimuth Karunaratne c Mominul Haque b Taijul Islam 52 138 2 0 37.68
Lasith Embuldeniya b Taijul Islam 2 22 0 0 9.09
Kusal Mendis b Taijul Islam 48 43 8 1 111.63
Angelo Mathews c & b Taijul Islam 0 15 0 0 0.00
Dhananjaya de Silva c Mushfiqur Rahim b Shakib Al Hasan (vc) 33 60 3 1 55.00
Dinesh Chandimal not out 39 135 4 1 28.89
Niroshan Dickwella not out 61 96 0 0 63.54


Extras 6 (b 0 , lb 2 , nb 4, w 0, pen 0)
Total 260/6 (90.1 Overs, RR: 2.88)
Fall of Wickets 1-36 (11.5) Oshada Fernando, 2-39 (17.1) Lasith Embuldeniya, 3-106 (31.2) Kusal Mendis, 4-110 (35.6) Angelo Mathews, 5-143 (47.1) Dimuth Karunaratne, 6-161 (56.2) Dhananjaya de Silva,

Bowling O M R W Econ
Nayeem Hasan 23 5 79 0 3.43
Khaled Ahmed 7 2 37 0 5.29
Shakib Al Hasan (vc) 25 5 58 1 2.32
Taijul Islam 34 9 82 4 2.41
Najmul Hossain Shanto 1 0 2 0 2.00
Mehidy Hasan Miraz 0.1 0 0 0 0.00




போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<