எம்மால் இன்னும் சாதிக்க முடியும் – பானுக்க ராஜபக்ஷ

71
Bhanuka rajapaksa

துடுப்பாட்டத்தில் எமக்கு இன்னும் சாதிக்க முடியுமாக இருந்திருக்கும் என்று அவுஸ்திரேலியாவுடனான முதல் டி-20 போட்டிக்கு பின்னர் ThePapare.com இற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பானுக்க ராஜபக்ஷ தெரித்தார். 

அடிலெயிட்டில் இன்று (27) நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் அனைத்து துறைகளிலும் சோபிக்கத் தவறிய இலங்கை அணி 134 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 

இன்றைய போட்டியில் எமக்கு சாதகமாக எடுத்துக்கொள்ள பெரிதாக எதுவும் இருக்கவில்லை. எமக்கு வெற்றிபெற முடியாமல்போனது. சில விடயங்களை எம்மால் முன்கொண்டு செல்ல முடியும் என்று எதிர்பார்க்கலாம். 

வோர்னர், மெக்ஸ்வெல் அசத்த இலங்கையை இலகுவாக வீழ்த்திய ஆஸி.

சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20i தொடரின் முதல்…

குறிப்பாக நுவன் பிரதீப் நன்றாக பந்துவீசினார். லசித் மாலிங்கவும் நன்றாக பந்துவீசினார். லக்ஷான் சந்தகனும் நன்றாக பந்துவீசினார். ஆனால் ஆடுகளத்தில் நினைத்த அளவிற்கு எம்மால் சாதிக்க முடியாமல் போனது. ஏனென்றால் (டேவிட்) வோர்னரும், (ஆரோன்) பிஞ்சும் சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்றுக்கொடுத்தார்கள். பின்னர் மெக்ஸ்வல் வந்து சிறந்த முடிவுவொன்றை பெற்றுக்கொடுத்தார். 

எனவே பந்துவீச்சை நாம் மேலும் பலப்படுத்தி சரியான இலக்கிற்கு வீச வேண்டும். 

துடுப்பாட்டத்தை பொறுத்தவரை எமக்கு இன்னும் சாதிக்க முடியுமாக இருந்திருக்கும். ஆனால் அவுஸ்திரேலிய வீரர்கள் இலக்கிற்கு பந்து வீசினார்கள். அதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த போட்டிக்கு இது எமது திட்டமாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். 

தனது 33 ஆவது பிறந்தநாளில் அதிரடியாக துடுப்பாடிய டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களை பெற்றார். மறுபுறம் இலங்கை அணி வேகப்பந்து விச்சாளர் கசுன் ராஜித்த தனது 4 ஓவர்களுக்கும் 75 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்தவராக மோசமான சாதனை ஒன்றை படைத்தார்.

இந்தப் போட்டியில் தோற்றது அழுத்தத்தை விட ஓட்டங்களை குவித்து வெற்றி பெறுவதே ஆசையாக உள்ளது. அணியில் எவருக்கும் அழுத்தம் தருவதில்லை. சுதந்திரமாக விளையாடும்படியே எமக்கு கூறியிருக்கிறார்கள். என்ன பிரச்சினை என்றால், இன்றைய போட்டியில் 233 ஓட்டங்களை துரத்த வேண்டி இருந்தது. அது எந்த ஒரு துடுப்பாட்ட வீரருக்கும் அணிக்கும் இலகுவானதல்ல. ஆனால் அணியில் இருந்து எந்த அழுத்தமும் தரப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<