ஓமான் அணியுடன் T20 போட்டிகளில் ஆடவுள்ள இலங்கை

515

இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தொடரில் பங்கெடுக்கவிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, அதற்கு முன்னதாக ஓமான் அணியுடன் இரண்டு T20 பயிற்சிப்போட்டிகளில் ஆடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் ஜிம்பாப்வேயில்

இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள நிலையில் குறித்த உலகக் கிண்ணத்தொடர் நடைபெறுகின்ற இடத்தின் உஷ்ண காலநிலை தன்மைக்கு ஏற்ப தம்மை தயார்படுத்திக்கொள்ளும் நோக்கிலேயே இலங்கை கிரிக்கெட் அணி, ஓமான் அணியுடன் T20 பயிற்சிப் போட்டிகளில் ஆடுகின்றது.

அந்தவகையில் இலங்கை மற்றும் ஓமான் அணிகள் மோதும் இரண்டு T20 பயிற்சிப் போட்டிகளும் ஒக்டோபர் 07ஆம் மற்றும் 09ஆம் திகதிகளில் ஓமானின் அமராத் மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

டயலொக் SLC அழைப்பு T20 லீக்கின் போட்டி அட்டவணையில் மாற்றம்!

அதேநேரம் T20 உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அதன் முதற்சுற்றில் குழு A இல் காணப்படும் நெதர்லாந்து, நமீபியா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுடன் மோதி தமது உலகக் கிண்ண பயணத்தினை ஆரம்பிக்கவிருக்கின்றமை  குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…