2021இல் இங்கிலாந்து செல்லும் இலங்கை அணி

435
 

எதிர்வரும் 2021இல் இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணை இன்று (18) வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி இலங்கையில் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது

இந்நிலையில் .சி.சி இன் 2020 – 22 உலகக் கிண்ண ஒருநாள் தொடருக்கான சுப்பர் லீக் சுற்றின் ஓர் அங்கமாக அடுத்த ஆண்டு ஜுலை மாதம் இலங்கை அணி இங்கிலாந்து சென்று 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது

இதற்கான போட்டி அட்டவணை இன்று (17) இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

>>Video – இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்த இளம் வீரர்கள் | Sports Roundup – Epi 140<<

இதன்படி, ரோயல் லண்டன் போட்டித் தொடர் என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்தத் தொடரின் ஒரு போட்டியில் வென்றால் .சி.சி இன் உலகக் கிண்ண சுப்பர் லீக் தொடருக்கான விதிகளின் படி அணிக்கு 10 புள்ளிகள் வழங்கப்படும்.

எதுஎவ்வாறாயினும், ஜூன் மாதம் இலங்கை அணி T20i தொடரிலும் இங்கிலாந்து அணியுடன் விளையாடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

எனினும், லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிச்சுற்று குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படாததால் அது தொடர்பான அட்டவணை தற்போது வெளியிடப்படவில்லை

அட்டவணையில் இடம்பெற்றுள்ள தொடர்களுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>2021 ஜனவரியில் இலங்கை வரவுள்ள இங்கிலாந்து அணி<<

இதுஇவ்வாறிருக்க, இலங்கை அணியுடனான ஒருநாள் தொடருக்குப் பிறகு ஜூலை மாதம் பாகிஸ்தான் அணி தலா 3 ஒருநாள், T20i போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்துடன் விளையாடுகிறது. இதன்பிறகு இந்தியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.  

இதனிடையே, இலங்கை அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு முன் இந்தியாவுடன் சொந்த மண்ணில் 3 ஒருநாள் மற்றும் 5 T20i கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அடுத்த வருடம் நடைபெறவுள்ள .பி.எல் தொடருக்குப் பிறகு இந்திய அணி மேற்கொள்ளவுள்ள முதலாவது வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும்.

அதனைத்தொடர்ந்து இலங்கையில் 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ண T20 தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கைஇங்கிலாந்து ஒருநாள் தொடர்

முதலாவது ஒருநாள் போட்டி, ஜுன் 29ஆம் திகதி (டர்ஹம்)

2-வது ஒருநாள் போட்டி, ஜுலை முதலாம் திகதி (கியா ஓவல்)

3-வது ஒருநாள் போட்டி, ஜுலை 4ஆம் திகதி (பிரிஸ்டல் கவுண்டி மைதானம்)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<