மீண்டும் இலங்கையில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணம்

Sri Lanka Cricket

1519
ICC

ஐசிசியின் முக்கிய உலகத்தொடர்களை எதிர்வரும் 2024ம் ஆண்டு முதல் 2031ம் ஆண்டுவரை நடத்தவுள்ள நாடுகள் தொடர்பிலான அறிவிப்பினை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) இன்று (16) வெளியிட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியா என இரண்டு நாடுகளும் இணைந்து 2026ம் ஆண்டு T20 உலகக்கிண்ணத்தை நடத்தவுள்ளன. இலங்கையில், கடந்த 2012ம் ஆண்டு T20 உலகக்கிண்ணம் நடைபெற்றிருந்த நிலையில், மீண்டும் 14 வருடங்களின் பின்னர் இந்த மிகப்பெரிய தொடர் இலங்கைக்கு திரும்புகிறது. குறித்த இந்த தொடரையடுத்து, இந்தியா 2027ம் ஆண்டு ஒருநாள் உலகக்கிண்ணத்தொடரை நடத்தவுள்ளது.

LPL தொடருடன் பங்குதாரர்களாக கைகோர்க்கும் Rario நிறுவனம்

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக மே.தீவுகளுடன் இணைந்து, அமெரிக்காக 2024ம் ஆண்டு T20 உலகக்கிண்ணத்தை நடத்தவுள்ளது. மே.தீவுகள் ஏற்கனவே, 2010ம் ஆண்டு T20 உலகக்கிண்ணத்தை நடத்தியுள்ளது.

இதன் பின்னர், 2025ம் ஆண்டு பாகிஸ்தான், சம்பியன்ஷ் கிண்ணத்தொடரை நடத்தவுள்ளது. 1996ம் ஆண்டுக்கு பின்னர், பாகிஸ்தான் நடத்தும் முதல் ஐசிசி தொடராக இது அமையவுள்ளது.

இதனைத்தொடர்ந்து 2027ம் ஆண்டு ஜிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்காவுடன் இணைந்து, முதன்முறையாக நமீபியா ஒருநாள் உலகக்கிண்ணத்தை நடத்தவுள்ளது. தென்னாபிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் கடந்த 2003ம் ஆண்டு ஏற்கனவே உலகக்கிண்ணத்தை இணைந்து நடத்தியிருந்தன.

அதேநேரம், 2028ம் ஆண்டு நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, T20 உலகக்கிண்ணத்தை நடத்தும் என்பதுடன், அதற்கு அடுத்த வருடம் (2029), இந்தியா சம்பியன்ஷ் கிண்ணத்தை நடத்துகின்றது.

இந்த சம்பியன்ஷ் கிண்ணத்தின் நிறைவுடன், 2030ம் ஆண்டு இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து போன்ற நாடுகள் இணைந்து, T20 உலகக்கிண்ணத்தை நடத்தவுள்ளடன், 2031ம் ஆண்டு இந்தியா மற்றும் பங்களாதேஷ் இணைந்து ஐசிசி ஒருநாள் உலகக்கிண்ணத்தை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<