ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை T20i குழாம் அறிவிப்பு

Zimbabwe tour of Sri Lanka 2024

1454

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான 16 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தின் தலைவராக வனிந்து ஹஸரங்க மற்றும் உப தலைவராக சரித் அசலங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். 

இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது!

அதேநேரம் அனுபவ வீரர்களான குசல் பெரேரா மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ள போதும், முதற்கட்ட குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த பானுக ராஜபக்ஷ அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இலங்கை கிரிக்கெட் சபை ஏற்கனவே அறிவித்திருந்த 22 பேர்கொண்ட முதற்கட்ட குழாத்திலிருந்து ஆறு வீரர்களை நீக்கியுள்ளதுடன், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, நுவான் துஷார மற்றும் அகில தனன்ஜய ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளது. 

அதேநேரம் குழாத்திலிருந்து துனித் வெல்லாலதுகேவுடன் பானுக ராஜபக்ஷ, பிரமோத் மதுசான், சாமிக்க கருணாரத்ன, பினுர பெர்னாண்டோ மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

எவ்வாறாயினும் சுகயீனம் காரணமாக ஒருநாள் குழாத்திலிருந்து நீக்கப்பட்ட பெதும் நிஸ்ஸங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், தனன்ஜய டி சில்வாவும் 16 பேர்கொண்ட குழாத்தில் இடம்பிடித்துள்ளார். 

இலங்கை T20I குழாம் 

வனிந்து ஹஸரங்க (தலைவர்), சரித் அசலங்க (உப தலைவர்), சதீர சமரவிக்ரம, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ், தசுன் ஷானக, தனன்ஜய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க (உடற்தகுதி தொடர்பில் ஆராயப்படும்), மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, நுவான் துஷார, மதீஷ பதிரண, அகில தனஞ்சய 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<