தென் கொரியாவிடம் 8 கோல்களுடன் தப்பித்த இலங்கை அணி

68
Sri Lanka vs South Korea

தென் கொரியாவின் ஹ்வாசியோங்கில் உள்ள ஹ்வாசியோங் அரங்கில் இடம்பெற்ற, 2022 பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியின் இலங்கைக்கு எதிரான முதல் கட்ட ஆட்டத்தில் தென் கொரிய அணி 8-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தோல்வியினால், தமது தொடர்ச்சியான மூன்றாவது தோல்வியை பதிவு செய்துள்ளது இலங்கை அணி. 

ஏற்கனவே, இடம்பெற்ற துர்க்மெனிஸ்தான் அணிக்கு எதிரான மோதலை 2-0 எனவும், வட கொரியாவுக்கு எதிரான மோதலை 1-0 எனவும் இழந்த இலங்கை அணி, இன்று (10) H குழுவில் உள்ள பலம் மிக்க அணியான தென் கொரியாவை சந்தித்தது. 

தென் கொரியாவை சமாளிக்குமா இலங்கை?

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு கட்டாரில் இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் தமது முதல் இரண்டு மோதல்களையும் கடும் போராட்டத்தின்

போட்டியின் முதல் 10 நிமிடங்களும் கோல்கள் இன்றி ஆடப்பட்ட நிலையில், 11ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் டொட்டன்ஹம் ஹொட்ஸ்பர் கழக வீரரும் தென் கொரிய அணியின் தலைவருமான ஹெங் மின் சொன் போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.  

மீண்டும் 18ஆவது நிமிடத்தில் சொன் பரிமாற்றிய பந்தைப் பெற்ற கிம் சின்வோக், இலங்கை கோல் காப்பாளர் சுஜான் பெரேரா தடுக்க வருவதற்குள் பந்தை கோலுக்குள் செலுத்தி இரண்டாவது கோலைப் பெற்றுக் கொடுத்தார். 

அடுத்த 3 நிமிடங்களில் கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை ஹ்வாங் ஹுசான் மிக வேகமாக ஹெடர் செய்து கோலாக்கினார். மீண்டும் 31ஆவது நிமிடத்தில் கிம் முன் ஹுவான் மத்திய களத்தில் இருந்து உயர்த்தி உள்ளனுப்பிய பந்தை கோலுக்குள் ஹெடர் செய்த கிம் சின்வோக் தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்தார். 

போட்டியின் 39ஆவது நிமிடத்தில் இலங்கையின் மத்திய கள வீரர் அமான் பைசர் வெளியேற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக சுந்தராஜ் நிரேஷ் மைதானத்திற்குள் உள்வாங்கப்பட்டார். 

ஆட்டத்தின் 40 ஆவது நிமிடத்தில் தென் கொரிய மத்திய கள வீரர் லீ கங்ஜின் வேகமாக கோல் நோக்கி உதைந்த பந்தை சுஜான் தட்டிவிட்டார். 

SOUTH KOREA v SRI LANKA | 대한민국 v 스리랑카 | Preview | FIFA World Cup 2022 Qualifiers (10th Oct)

After two respectable results against Turkmenistan and North Korea in their opening two group H encounters in the 2022 FIFA World Cup Qualification – AFC 2nd Round campaign, Sri Lanka will face off against South Korea for one of their most daunting match-ups in recent memory.

தொடர்ந்தும் தென் கொரிய வீரர்கள் கோலுக்கான அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், முதல் பாதியின் உபாதையீடு நேரத்தில், இலங்கை பின்கள வீரர் ஷலன சமீர கைகளால் பந்தை தட்டிவிட எதிரணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது. அதனை சொன் கோலாக்க, முதல் பாதி ஆட்டம் 5-0 என நிறைவடைந்தது. 

முதல் பாதி: தென் கொரியா 5 – 0 இலங்கை  

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 8 நிமிடங்களில் இலங்கை அணியின் தலைவர் கவிந்து இஷானுக்குப் பதிலாக சசன்க தில்கார களம் நுழைந்தார். 

அடுத்த இரண்டு நிமிடங்களில் கொரிய வீரர்கள் இலங்கை கோல் பரப்பில் மேற்கொண்ட வேகமான பந்துப் பரிமாற்றங்களின் பின்னர், கிம் சின்வோக் தனது ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்தார். 

அதனைத் தொடர்ந்து கிம் சின்வோக் கோல் பெட்டிக்குள் இருந்து வேகமாக உதைந்த பந்தை சுஜான் வெளியே தட்டி விட்டார். தொடர்ந்தும் தென் கொரிய தரப்பினரின் முயற்சி சுஜான் மூலம் தடுக்கப்பட்டது. 

இலங்கைக்கு எதிரான தென் கொரிய அணியில் சொன்

பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் AFC தகுதிகாண் போட்டிகளில் இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ள தென் கொரியா மற்றும் லெபனான் அணிகளின் 23 வீரர்கள் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளன.

எனினும், அடுத்த நிமிடம் ஹொங் ஷுல் உள்ளனுப்பிய பந்தை கிம் சின்வோக் கோலுக்குள் ஹெடர் செய்ய தென் கொரிய அணியின் கோல் எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது. 

தென் கொரிய வீரர்கள் தமது அணியில் அடுத்தடுத்து மாற்றங்களை செய்தனர். இந்நிலையில், மாற்று வீரராக வந்த கொங் ஷாங் குங் சக வீரர் ஹ்வாங் ஹுசானின் பந்துப் பரிமாற்றத்தைக் கொண்டு தனது முதல் கோலைப் பெற்றார். 

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் இலங்கை வீரர்கள் முழுமையாக தமது பின்களத்தில் தடுப்பாட்டத்தை மேற்கொள்ள எதிரணியினரால் எதனையும் செய்ய முடியாமல் போனது. 

எனவே, போட்டி நிறைவில் 8-0 என தோல்வியை சந்தித்த இலங்கை அணி, இந்த தகுதிகாண் தொடரில் தமது மோசமான தோல்வியை பதிவு செய்தது. 

இலங்கை அணி தனது அடுத்த மோதலில், எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பில் வைத்து லெபனான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. 

முழு நேரம்: தென் கொரியா 8 – 0 இலங்கை  

கோல் பெற்றவர்கள்  

தென் கொரியா – ஹெங் மின் சொன் 11′ & 45+5′, கிம் சின்வோக் 18′, 31′, 56′ & 64′  ஹ்வாங் ஹுசான் 21′ , கொங் ஷாங் குங் 77′ 

மஞ்சள் அட்டை பெற்றவர்கள் 

தென் கொரியா – ஹெங் மின் சொன் 

இலங்கை – கவிந்து இஷான் 23′, ஷலன சமீர 45+5′ 

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க