நெகிழ்ச்சியூட்டும் இலங்கை வலைப்பந்து அணியின் செயல்பாடு

182

2023ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடும் பொருட்டு இலங்கையின் தேசிய வலைப்பந்து குழாமானது மாலபே நகரில் அமைந்துள்ள மரியா வயோதிபர் இல்லத்தில் ஒரு நாள் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தது.           

16 பேராக குறைக்கப்பட்ட இலங்கை வலைப்பந்து அணி

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் மரியா வயோதிபர் இல்லத்தில் காணப்படும் 12 வயோதிப தாய்மார்களுக்கும் 02 உதவியாளர்களுக்கும் தேவையான வசதிகள், தேசிய வலைப்பந்து அணிக் குழாம் மூலமாக செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

குறித்த வயோதிபர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு இந்த நிகழ்ச்சித் திட்டம் வாயிலாக உணவுப் பொதிகள் வழங்கப்பட்டதோடு, அவர்களது வாழ்க்கை தரத்தினை விருத்தி செய்வதற்கு தேவையான செயற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. அத்துடன் அவர்களின் உள ஆரோக்கியத்திற்கான விடயங்களும் கவனிக்கப்பட்டிருந்தன.

அத்தோடு தேசிய வலைப்பந்து குழாம், குறித்த வயோதிபர் இல்லத்தில் காணப்பட்ட தாய்மார்களுக்கு உணவுப் பொருட்களுக்கு மேலதிகமாக அவர்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்ற தேவையாக இருந்த பொருட்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவற்றோடு இந்த நிகழ்ச்சி திட்டத்தின் நோக்கங்களாக பின்வரும் விடயங்களும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

  • வயோதிபர்களை பராமரித்து அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தேவையான பாதுகாப்பான சூழலை உருவாக்கி, அவர்களது பயணத்தினை இறுதி வரை தொடர உதவுதல்.
  • சமூக தனிமைப்படுத்தல் உருவாக்கும் அழுத்த நிலைமைகளை எதிர்கொள்வதற்கு தேவையான உளரீதியான ஆதரவினையும், அவர்களுக்கு தேவையான தோழமையினையும் வழங்குதல்
  • மரியா வயோதிபர் இல்லத்தில் இருப்பவர்களின் ஊட்டத்தினை விருத்தி செய்யும் உணவுப் பொருட்கள், உடைகள் மற்றும் ஏனைய தேவைகள் என்பவற்றினைப் பூர்த்தி செய்தல்.

நல்ல விடயமாக அமைந்த இந்த நிகழ்ச்சி திட்டத்திற்குரிய அனைத்து பொருட் செலவுகளையும் தேசிய வலைப்பந்து குழாத்தின் உறுப்பினர்கள் பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் விளையாட்டு செய்திகளுக்கு<<