புதிய பயிற்சியாளரை தேடும் இலங்கை வலைப்பந்து அணி

127

இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் (NFSL) தற்போது வெற்றிடமாகியுள்ள, இலங்கை வலைப்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் உதவிப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை கோருவதாக தெரிவித்திருக்கின்றது.

அடுத்த ஆண்டு ஜுலை மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள உலக வலைப்பந்து சம்பியன்ஷிப்பினை இலக்காகக் கொண்டு, இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் மற்றும் உதவிப் பயிற்சியாளர் ஆகியோர் தெரிவு செய்யப்படவிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனாகியது இலங்கை

இந்த இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பங்களை அனுப்ப விரும்புவோர், அடுத்த மாதம் (டிசம்பர்) 10ஆம் திகதிக்கு முன்னர் தங்களது சுய விபரக் கோவையினை மின்னஞ்சல் மூலமோ அல்லது பதிவுத் தபால் மூலமோ (இலக்கம்.33, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் – பழைய கட்டிடம், டொரிங்டன் பிளேஸ், கொழும்பு 07) அனுப்பிவைக்க வேண்டும்.

இதன்படி, இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கான தலைமைப் பயிற்சியாளர் மற்றும் உதவிப் பயிற்சியாளர் ஆகியோர் நியமிக்கப்பட்ட பிறகு, இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சிகள் அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைபெற உள்ளது.

இறுதியாக கடந்த 2020ஆம் ஆண்டு இலங்கை வலைப்பந்தாட்ட தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக சொமித்த டி அல்விஸ் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<