கௌண்டி சம்பியன்ஷிப் தொடரிலிருந்து விலகும் மெத்திவ் வேட்

92

இங்கிலாந்தில் வருடாந்தம் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கௌண்டி சம்பியன்ஷிப் தொடரிலிருந்து அவஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வீரர் மெத்திவ் வேட் உபாதை காரணமாக வெளியேறியுள்ளார். 

கொரோனா வைரஸ் எதிரொலி: டி20 உலகக் கிண்ணம் நடைபெறுமா?

கொரோனா வைரஸ் பாதிப்பினால் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் ………

விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான மெத்திவ் வேட் சமரெஸ்ட் அணிக்காக இம்முறை ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இவர் அந்த அணிக்காக 7 போட்டிகளில் விளையாட வேண்டும் என அணியால் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.  

எனினும், அவருக்கு கணுக்காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக தொடரிலிருந்து முழுமையாக வெளியேறவுள்ளதாக அறிவித்துள்ளார். எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் காரணமாக, கௌண்டி கிரிக்கெட் தொடரில் இவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்கெனவே எழுந்திருந்தது

இந்தநிலையில் தனது வெளியேற்றம் தொடர்பில் கருத்து மெத்திவ் வேட், “இதுவொரு மிகப்பெரிய இழப்பு. கௌண்டி கிரிக்கெட்டில் உள்ள சவாலை  எதிர்கொள்ள காத்திருந்தேன். எனினும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வைத்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர், தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை  ஏற்பட்டுள்ளது

மெத்திவ் வேட் இதுவரையில் 148 போட்டிகளில் விளையாடி 7916 ஓட்டங்களை பெற்றுள்ளார். அதேநேரம் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணிக்காக இவர் தொடர்ச்சியாக விளையாடி வருகின்றார்

ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் போட்டி 2021 வரை ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ……….

இதேவேளை, சமரெஸ்ட் அணிக்காக T20 ப்ளாஸ்ட் தொடரின் 2 போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் இணைக்கப்பட்டுள்ளார். அதேநேரம், கௌண்டி சம்பியன்ஷிப்புக்கான இரண்டாவது பாதிக்காக மற்றுமொரு வெளிநாட்டு வீரரை இணைக்க, இந்த அணி எதிர்ப்பார்த்துள்ளதாக அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்தின் கௌண்டி சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் மாதம் 12ம் திகதி நடைபெறவிருக்கின்ற போதும்,  கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<