இலங்கை 2023-27ம் ஆண்டுவரை விளையாடவுள்ள தொடர்களின் அட்டவணை

ICC Future Tours Programme 2023-2027

172
 

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC), டெஸ்ட் உரிமத்தை பெற்றுள்ள நாடுகளுக்கான 2023 தொடக்கம் 2027ம் ஆண்டுவரையிலான எதிர்கால போட்டித் தொடர்களுக்கான (FTP) திட்டம் இன்று (17) வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இலங்கை கிரிக்கெட் அணியானது 2023ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதுடன், 48 ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளது. அத்துடன், இருதரப்பு மற்றும் முத்தரப்பு தொடர்களென 51 T20I போட்டிகளில் இலங்கை அணி இந்தக்காலப்பகுதியில் விளையாடவுள்ளது.

ஆசியக்கிண்ணத்துக்கான ஆப்கானிஸ்தான் குழாம் அறிவிப்பு

  • 2023ம் ஆண்டு 5 டெஸ்ட் போட்டிகள்
  • 2024ம் ஆண்டு 9 டெஸ்ட் போட்டிகள்
  • 2025ம் ஆண்டு 4 டெஸ்ட் போட்டிகள்
  • 2026ம் ஆண்டு 6 டெஸ்ட் போட்டிகள்

இதில் 2026ம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்து ஐசிசி T20 உலகக்கிண்ணத்தொடரை இலங்கை அணி நடத்தவுள்ளதுடன், 2027ம் ஆண்டு தென்னாபிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வே நடத்தும் T20 உலகக்கிண்ணத்திலும் விளையாடவுள்ளது.

இலங்கை அணி விளையாடவுள்ள தொடர்களின் அட்டவணை

2023

காலம் எதிரணி வெளிநாடு அல்லது இலங்கை போட்டி வகைகள்
ஜனவரி இந்தியா வெளிநாடு 3 ஒருநாள் & 3 T20I
ஜனவரி/பெப்ரவரி ஆப்கானிஸ்தான் இலங்கை 3 ஒருநாள்
மார்ச்/ஏப்ரல் நியூசிலாந்து வெளிநாடு 2 டெஸ்ட், 3 ஒருநாள் & 3 T20I
ஏப்ரல் அயர்லாந்து இலங்கை 1 டெஸ்ட் & 2 ஒருநாள்
ஜூலை/ஆகஸ்ட் பாகிஸ்தான் இலங்கை 2 டெஸ்ட்
செப்டம்பர் ஆசியக்கிண்ணம் பாகிஸ்தான் ஒருநாள்
ஒக்டோபர்/நவம்பர் ஐசிசி உலகக்கிண்ணம் இந்தியா ஒருநாள்

 

2024

காலம் எதிரணி

 

வெளிநாடு அல்லது இலங்கை போட்டி வகைகள்

 

ஜனவரி ஜிம்பாப்வே இலங்கை 3 ஒருநாள் & 3 T20I
ஜனவரி/பெப்ரவரி ஆப்கானிஸ்தான் இலங்கை 1 டெஸ்ட்& 3 T20I
பெப்ரவரிமார்ச் பங்களாதேஷ் வெளிநாடு 2 டெஸ்ட், 3 ஒருநாள் & 3 T20I
ஜூன் ஐசிசி T20 உலகக்கிண்ணம் மே.தீவுகள் T20I
ஜூலை இந்தியா இலங்கை 3 ஒருநாள் & 3 T20I
ஆகஸ்ட்/செப்டம்பர் இங்கிலாந்து வெளிநாடு 2 டெஸ்ட்
செப்டம்பர்/ஒக்டோபர் நியூசிலாந்து இலங்கை 2 டெஸ்ட்
ஒக்டோபர்/ நவம்பர் மேற்கிந்திய தீவுகள் இலங்கை 3 ஒருநாள் & 3 T20I
நவம்பர்/டிசம்பர் தென்னாபிரிக்கா வெளிநாடு

 

2 டெஸ்ட்
டிசம்பர்/ஜனவரி நியூசிலாந்து வெளிநாடு

 

3 ஒருநாள் & 3 T20I

2025

காலம்

 

எதிரணி வெளிநாடு அல்லது இலங்கை போட்டி வகைகள்
ஜனவரி/பெப்ரவரி அவுஸ்திரேலியா இலங்கை 2 டெஸ்ட்
பெப்ரவரி ஐசிசி சம்பியன்ஷ் கிண்ணம் பாகிஸ்தான் ஒருநாள்
ஜூன்/ஜூலை பங்களாதேஷ் இலங்கை 2 டெஸ்ட், 3 ஒருநாள் & 3 T20I
ஆகஸ்ட்/செப்டம்பர் ஜிம்பாப்வே வெளிநாடு 3 ஒருநாள் & 3 T20I
செப்டம்பர் ஆசியக்கிண்ணம் முடிவுசெய்யப்டவில்லை T20I
ஒக்டோபர்/நவம்பர் அயர்லாந்து இலங்கை 3 ஒருநாள் & 3 T20I
நவம்பர்/டிசம்பர் பாிஸ்தான் வெளிநாடு 3 ஒருநாள் & 3 T20I

2026

காலம் எதிரணி வெளிநாடு அல்லது இலங்கை போட்டி வகைகள்
ஜனவரி/பெப்ரவரி இங்கிலாந்து இலங்கை 3 ஒருநாள் & 3 T20I
பெப்ரவரி ஐசிசி T20 உலகக்கிண்ணம் இந்தியா/இலங்கை T20I
மார்ச் ஆப்கானிஸ்தான் வெளிநாடு 3 ஒருநாள் & 3 T20I
ஜூன்/ஜூலை மே.தீவுகள் வெளிநாடு 2 டெஸ்ட், 3 ஒருநாள் & 3 T20I
ஆகஸ்ட் இந்தியா இலங்கை 2 ஒருநாள்
செப்டம்பர் இங்கிலாந்து வெளிநாடு 3 ஒருநாள் & 3 T20I
ஒக்டோபர் பாகிஸ்தான் வெளிநாடு 3 T20I
ஒக்டோபர்/நவம்பர் பாகிஸ்தான்/இங்கிலாந்து – முத்தரப்பு தொடர் வெளிநாடு 4 ஒருநாள்
நவம்பர் பாகிஸ்தான் வெளிநாடு 2 டெஸ்ட்
டிசம்பர்/ஜனவரி இந்தியா வெளிநாடு 3 ஒருநாள் & 3 T20I

 

2027

காலம் எதிரணி வெளிநாடு அல்லது இலங்கை போட்டி வகைகள்
ஜனவரி/பெப்ரவரி நியூசிலாந்து வெளிநாடு 2 டெஸ்ட், 3 ஒருநாள் & 3 T20I
பெப்ரவரி/மார்ச் தென்னாபிரிக்கா இலங்கை 2 டெஸ்ட்

 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<