ஆசியக்கிண்ணத்துக்கான ஆப்கானிஸ்தான் குழாம் அறிவிப்பு

Asia Cup 2022

122

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ணத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள 17 பேர்கொண்ட குழாத்தில், அனுபவ வீரர் சமியுல்லாஹ் ஷின்வாரி சுமார் இரண்டரை வருடங்களுக்கு பின்னர் T20I போட்டியொன்றில் விளையாடவுள்ளார்.

நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடவுள்ள குமார, சீகுகே, அசலங்க!

சமியுல்லாஹ் ஷின்வாரி இறுதியாக அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற T20I போட்டியில் கடந்த 2020ம் ஆண்டு விளையாடியிருந்தார். இந்தநிலையில், மீண்டும் தேசிய அணிக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளார்.

சமியுல்லாஹ் ஷின்வாரி தற்போது நடைபெற்றுவரும் அயர்லாந்து தொடரில் விளையாடிவரும் ஷரபுதீன் அஷ்ரப்புக்கு பதிலாக அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், அஷ்ரப் மேலதிக வீரராக குவைஸ் அஹமட், நிஜாட் மசோட் ஆகியோருடன் இணைக்கப்பட்டுள்ளார். இதேவேளை முஜீப் உர் ரஹ்மான் அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், அயர்லாந்து தொடரில் விளையாடிவரும் சுழல் பந்துவீச்சாளர் நூர் அஹ்மட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக தொடர்ந்தும் மொஹமட் நபி செயற்படவுள்ளதுடன், உப தலைவராக நஜிபுல்லாஹ் ஷர்டான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுடன் ரஷீட் கான், ஹஷரதுல்லாஹ் ஷசாய் மற்றும் ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் போன்ற முன்னணி வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஆசியக்கிண்ணத் தொடர் இம்மாதம் 27ம் திகதி முதல் செப்டம்பர் 11ம் திகதிவரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளதுடன், ஆப்கானிஸ்தான் குழுநிலை போட்டிகளில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் குழாம்

மொஹமட் நபி (தலைவர்), நஜிபுல்லாஹ் ஷர்டான் (உப தலைவர்), அப்ஷர் ஷசாய், அஷ்மதுல்லாஹ் ஒமர்ஷி, பயர்ட் அஹ்மட் மலிக், பஷல் ஹக் பரூகி, ஹஷ்மதுல்லாஹ் ஷஹிடி, ஹஷரதுல்லாஹ் ஷசாய், இப்ரஹிம் ஷர்டான், கரீம் ஜெனட், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், நூர் அஹ்மட், ரஹ்மானுல்லாஹ் குர்பாஷ், ரஷீட் கான், சமியுல்லாஹ் ஷின்வாரி

  • மேலதிக வீரர்கள் – நிஜாட் மசோட், குவைஸ் அஹ்மட், சரபுதீன் அஷ்ரப்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<