இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் போராட்டம் வீண்

99
 

வீதி பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் வீதி பாதுகாப்பு உலக T20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய லெஜன்ட்ஸ் அணி, இலங்கை லெஜன்ட்ஸ் அணியினை 14 ஓட்டங்களால் வீழ்த்தி முதன்முறையாக சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.  

>> வீதி பாதுகாப்பு உலக T20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை லெஜன்ட்ஸ்<<

இன்று (21) ராய்பூர் நகரில் ஆரம்பமான இறுதிப் போட்டியில், தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் முறையே மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்க ஆகியவற்றின் லெஜன்ட்ஸ் அணிகளை வீழ்த்திய இலங்கை லெஜன்ட்ஸ் மற்றும் இந்திய லெஜன்ட்ஸ் ஆகியவை பலப்பரீட்சை நடாத்த தயாராகின.  

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் தலைவர் திலகரட்ன டில்ஷான் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய லெஜன்ட்ஸ் அணிக்கு வழங்கியிருந்தார்.  

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய லெஜன்ட்ஸ் அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை எடுத்தனர்.  

இந்திய லெஜன்ட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிரடியான அரைச்சதங்களை பூர்த்தி செய்த யூசுப் பதான் 36 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களையும், யுவ்ராஜ் சிங் 41 பந்துகளுக்கு 60 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.  

>> இளம் வீரர்களின் பங்களிப்பினால் இராணுவ கழகத்தை வீழ்த்தி சம்பியனானது SSC<< 

இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் ரங்கன ஹேரத், பர்வீஸ் மஹரூப், சனத் ஜயசூரிய மற்றும் கௌசல்ய வீரரட்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

பின்னர் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 182 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை லெஜன்ட்ஸ் அணியினர் பலத்த போராட்டத்தினை காட்டியிருந்த போதும், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் தோல்வியினைத் தழுவியது.  

இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை போராட்டம் காட்டியிருந்த வீரர்களில் கௌசல்ய வீரரட்ன 15 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்களையும், சின்தக்க ஜயசிங்க ஆட்டமிழக்காது 30 பந்துகளுக்கு 40 ஓட்டங்களையும், சனத் ஜயசூரிய 43 ஓட்டங்களையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.  

இந்திய லெஜன்ட்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தனர்.  

இப்போட்டியில் தோல்வியடைந்திருக்கும் இலங்கை லெஜன்ட்ஸ் அணியினர் 2021ஆம் ஆண்டுக்கான வீதி பாதுகாப்பு உலக T20 தொடரில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொள்கின்றது.  

போட்டியின் சுருக்கம் 

இந்திய லெஜன்ட்ஸ் – 1814 (20) யூசுப் பதான் 62, யுவ்ராஜ் சிங் 60, பர்வீஸ் மஹரூப் 161

இலங்கை லெஜன்ட்ஸ் – 1677 (20) சனத் ஜயசூரிய 43, கௌசல்ய வீரரட்ன 38, சின்தக்க ஜயசிங்க 40, யூசுப் பதான் 262, இர்பான் பதான் 292

முடிவு – இந்திய லெஜன்ட்ஸ் அணி 14 ஓட்டங்களால் வெற்றி  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<