ஐசிசியின் 11 போட்டித் தொடர்களை நடத்த 17 நாடுகள் விருப்பம்

380
Getty Image

2023 முதல் 2031 வரையிலான காலப்பகுதியில் நடைபெறவுள்ள ஐசிசி போட்டிகளை நடத்த இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

2023-2031 வரையான காலப்பகுதிக்கான கிரிக்கெட் போட்டிகள் குறித்து விவாதிக்க ஐசிசி கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன

2024 முதல் 2031 வரை ஆண்கள், பெண்கள் என இரு பிரிவிலும் 20 ஐசிசியின் போட்டித் தொடர்கள் நடைபெறவுள்ளன

இதில் ஆண்கள் பிரிவில் 2 ஒருநாள் உலகக் கிண்ணம், 4 டி-20 உலகக் கிண்ணம், 3 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் 2 சம்பியன்ஸ் கிண்ணம் என 8 ஐசிசியின் முக்கிய போட்டித் தொடர்கள் நடைபெறவுள்ளன

இரண்டு‌‌ ‌‌உலகக்‌‌ ‌‌கிண்ண‌‌ ‌‌தொடர்களை‌‌ ‌‌நடத்த‌‌ ‌‌இலங்கை‌ ‌தயார்‌ ‌ ‌

இந்த நிலையில், ஐசிசியின் போட்டிகளை நடத்த இலங்கை, இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஐசிசி இன்று அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, மலேசியா, நமிபியா, நியூசிலாந்து, ஓமான், பாகிஸ்தான், ஸ்கொட்லாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், ஐக்கிய அரபு இராச்சியம், அமெரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் ஐசிசியின் போட்டிகளை நடத்த ஆரம்பக்கட்ட விண்ணப்பங்களை அளித்துள்ளன

அடுத்தக்கட்டமாக கூடுதல் விபரங்களுடன் முழுமையான விண்ணப்பங்களை அனுப்புவார்கள். இதன்பிறகு ஐசிசி போட்டிகளை எங்கு நடத்துவது என்ற முடிவு எடுக்கப்படும் என ஓர் அறிக்கையில் ஐசிசி கூறியுள்ளது.

இதனிடையே, 2024 முதல் 2031 வரையான காலப்பகுதியில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணம், ஒருநாள் உலகக் கிண்ணம் மற்றும் சம்பியன்ஸ் கிண்ணம் ஆகிய போட்டித் தொடர்களை தனியாகவும், ஒன்றிணைந்தும் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை முன்வந்துள்ளது.

2024-2031 வரையில் நடைபெறவுள்ள ஐசிசியின் போட்டித் தொடர்கள்

2024 –  ஆண்கள், பெண்கள் டி-20 உலகக் கிண்ணம்

2025 –  சம்பியன்ஸ் கிண்ணம், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, பெண்கள் ஒருநாள் உலகக் கிண்ணம்

2026 – ஆண்கள்;, பெண்கள் டி-20 உலகக் கிண்ணம்

2027 – ஆண்கள் ஒருநாள் உலகக் கிண்ணம், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, பெண்கள் டி-20 சம்பியன்ஸ் கிண்ணம்

2028 – ஆண்கள், பெண்கள் டி-20 உலகக் கிண்ணம்

2029 – ஆண்கள் சம்பியன்ஸ் கிண்ணம், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, பெண்கள் ஒருநாள் உலகக் கிண்ணம்

2030 – ஆண்கள், பெண்கள் டி-20 உலகக் கிண்ணம்

2031 – ஆண்கள் ஒருநாள் உலகக் கிண்ணம், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, பெண்கள் டி-20 சம்பியன்ஸ் கிண்ணம்

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…