20 வயதின்கீழ் ஆசியக் கிண்ண தகுதிகாண் கால்பந்து தொடரில் இலங்கைக்கு சவால்

72
 

உஸ்பெகிஸ்தானில் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 20 வயதின் கீழான அணிகளுக்குரிய  ஆசியக் கிண்ண கால்பந்து தொடரின் தகுதிகாண் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆசிய பிராந்தியத்தினைச் சேர்ந்த 44 அணிகள் தெரிவாகியிருக்கின்றன.

>> ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றுக்கான இலங்கை உத்தேச குழாம் அறிவிப்பு

இந்த தகுதிகாண் தொடரானது இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையில் நடாத்தும் விதத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த தகுதிகாண் தொடரில் பங்கெடுக்கும் அணிகள் 10 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மோதல்கள் இடம்பெறவுள்ளதோடு, ஒவ்வொரு குழுவில் இருந்தும் வெற்றியாளராக தெரிவு செய்யப்படும் அணியும், இரண்டாம் இடத்தினைப் பெறும் அணியும் 2023ஆம் ஆண்டு உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ள 20 வயதின் கீழான ஆசியக் கிண்ண கால்பந்து தொடரில் விளையாடும் வாய்ப்பினை பெறவிருக்கின்றன.

இதில் ஆசியக் கிண்ண கால்பந்து சம்பியன் பட்டத்தினை 12 தடவைகள் வெற்றி கொண்டிருக்கும் கொரிய குடியரசு அணியானது, குழு E இல் இலங்கை, மலேசியா மற்றும் மொங்கோலியா ஆகிய நாடுகளுடன் இந்த தகுதிகாண் போட்டிகளில் ஆடவிருக்கின்றது. எனவே, தகுதிகாண் போட்டிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட இலங்கை அணிக்கு மிகப் பெரும் சவால் இந்த தொடரில் உருவாக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதேநேரம், 2018ஆம் ஆண்டில் சம்பிபயன் பட்டம் வென்ற சவூதி அரேபிய அணி குழு A இல் சீனா, மியன்மார், மாலைதீவு மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் தகுதிகாண் போட்டிகளில் பங்கெடுக்க, குழு B இல் பஹ்ரைன், பங்களாதேஷ், கட்டார், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

லாவோஸ் அணியானது குழு C இல் ஜப்பான், யெமன், பாலஸ்தீன் மற்றும் குவாம் ஆகிய நாடுகளுடன் போட்டியிட குழு D இல் ஜோர்தான், சைனீஸ் தாய்பேய், சிரியா, துர்க்மெனிஸ்தான் மற்றும் வட மேரியானா தீவுகள் ஆகியவை உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

>> ஆசிய கிண்ண கால்பந்து தொடரை நடாத்த முடியாது என்கிறது சீனா

இரண்டு தடவை சம்பியன் பட்டத்தினை வென்றிருக்கும் தாய்லாந்து அணியானது, ஓமான், ஆப்கானிஸ்தான் மற்றும் பிலிபைன்ஸ் ஆகிய நாடுகள் குழு G இல் போட்டியிட, இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் குழு H இல் காணப்படுகின்றன.

மறுமுனையில் குழு I இல் லெபனான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளும், குழு J இல் ஐக்கிய அரபு இராச்சியம், கிரைக்ஸ் குடியரசு மற்றும் ஈரான் ஆகியவை பெயரிடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  • குழு A: சவூதி அரேபியா (H), சீனா, மியன்மார், மாலைதீவுகள், உஸ்பெகிஸ்தான் 
  • குழு B: கட்டார், பஹ்ரைன் (H), பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் 
  • குழு C: ஜப்பான், யேமன், பாலஸ்தீன், லாவோஸ் (H), குவாம் 
  • குழு D: ஜோர்தான் (H), சைனீஸ் தாய்பேய், சிரியா, துர்க்மெனிஸ்தான், வட மெரியானா தீவுகள்
  • குழு F: இந்தோனேசியா (H), வியட்நாம், ஹொங்கோங், டிமோர்-எஸ்டே 
  • குழு H: அவுஸ்திரேலியா, ராக் (H), இந்தியா, குவைட்
  • குழு I: தஜிகிஸ்தான் (H), கம்போடியா, லெபனான், சிங்கப்பூர்
  • குழு J: ஐக்கிய அரபு இராச்சியம், ஈரான், கிரைக்ஸ் குடியரசு (H), புரூனே தாருஸ்ஸலாம்

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<