மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவிருக்கும் உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் மற்றும் டெஸ்ட் (நான்கு நாட்கள் கொண்ட) தொடர்களில் பங்கெடுக்கும் 18 பேர் அடங்கிய இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
>>மே.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி
ஜூன் மாதம் ஆரம்பமாகும் இந்த தொடர்களில் முதலாவதாக நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரும் அதன் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரும் நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் தலைவராக 26 வயது நிரம்பிய சகலதுறை வீரர் தனன்ஜய லக்சான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை குழாம்
தனன்ஜய லக்சான் (தலைவர்), ஜனிஷ்க பெரேரா, செவோன் டேனியல், ரவிந்து ரசன்த, அஹான் விக்ரமசிங்க, நிபுன் தனன்ஜய, அஞ்சல பண்டார, சொஹான் டி லிவேரா, சஹான் கோசல, ரவிந்து பெர்னாண்டோ, துலாஜ் சாமுதித, சமிந்து விஜேசிங்க, சிதும் திசநாயக்க, திலும் சுதீர, ட்ரவீன் மெதிவ்ஸ், அஷைன் டேனியல், மேலான் ஹசன்க
போட்டி அட்டவணை
நான்கு நாட்கள் தொடர்
ஜூன் 7 – 10: முதல் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட்; போட்டி (கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானம்)
ஜூன் 14 – 17: இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட்; போட்டி (கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானம்)
ஒருநாள் தொடர்
ஜூன் 21: முதல் ஒருநாள் போட்டி (சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம்)
ஜூன் 24: இரண்டாவது ஒருநாள் போட்டி (சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம்)
ஜூன் 26: மூன்றாவது ஒருநாள் போட்டி (சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம்)