வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான காப்பீடுகளை வழங்கும் இலங்கை கிரிக்கெட்

44

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), 2025/26 பருவத்தில் விளையாடும் 350 விளையாட்டு வீரர்கள் மற்றும் அணிப் பயிற்சியாளர்களுக்கான (Supporting Staffs) காப்பீடுகளை (Insurance Cover) வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் புஜாரா 

2023ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட திட்டம் ஒன்றின் வாயிலாக காப்பீடு மூலம் இம்முறை 280 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 70 அணிப் பயிற்சியாளர்கள் பயன் பெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காப்பீட்டு திட்டம், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதன் பயிற்சியாளர்களுக்கு மேஜர் கழக கிரிக்கெட் தொடர்களின் போது மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பினை வழங்குவது சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும் 

இந்த ஆண்டு மூன்றாவது முறையாக காப்பீடுகளை வீரர்கள், மற்றும் பயிற்சியாளர்கள் பெறுவதோடு, குறிப்பிட்ட திட்டம் 2023ஆம் ஆண்டில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட போது வீரர்கள் மற்றும் அணிப் பயிற்சியாளர்கள் உட்பட 550 பேர் பயனடைந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.    

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<