இலங்கை கிரிக்கெட் வீரர்களின் ஓய்வு தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்

126
Sri Lanka Cricket Board announced New Rules
 

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) நிறைவேற்றுக்குழு இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஓய்வு பெறுவது தொடர்பில் மூன்று முக்கிய தீர்மானங்களை எடுத்திருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றது.

>> இலங்கை தொடருக்கான ஜிம்பாப்வே குழாம் அறிவிப்பு

இந்த தீர்மானங்கள் இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுக்குழு இந்த வெள்ளிக்கிழமை (07) மேற்கொண்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அந்தவகையில் புதிதாக எடுக்கப்பட்ட தீர்மானங்களில் முதல் தீர்மானத்தில் ஓய்வு பெறும் நோக்கில் உள்ள தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் மூன்று மாதத்திற்கு முன்னர் அது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இரண்டாவது தீர்மானத்தில் ஓய்வு பெற்ற வீரர்கள் வெளிநாட்டு (Franchise) தொடர் ஒன்றில் விளையாட வேண்டும் எனில், அவர்களுக்கான இலங்கை கிரிக்கெட் சபையின் அனுமதி (NOC) குறித்த வீரர்கள் ஓய்வு பெற்று ஆறு மாதங்கள் பூர்த்தியடைந்த பின்னரே வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>> மெண்டிஸ், குணத்திலக்க, டிக்வெல்ல மீதான போட்டித்தடை நீக்கம்

இதேநேரம் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் இறுதி தீர்மானத்தில் ஓய்வு பெற்ற வீரர்கள் LPL போன்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கான அனுமதி, அவர்களுக்கு குறித்த உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் ஒழுங்கு செய்யப்படும் திகதிக்கு முன்னர் நடைபெறுகின்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் 80% போட்டிகளில் விளையாடினால் மாத்திரமே வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

அத்துடன் புதிதாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு <<