பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான 18 பேர்கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தனன்ஜய டி சில்வா மீண்டும் உள்வாங்கப்பட்டுள்ளார். இவர் இறுதியாக 2024ஆம் ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கிண்ணத் தொடரில் விளையாடியிருந்தார்.
T20 உலகக் கிண்ணத்திற்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு
அதேநேரம் இளம் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே, முன்னாள் தலைவர் சரித் அசலங்க மற்றும் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பதிரண ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்தநிலையில் கடைசியாக நடைபெற்ற பாகிஸ்தான் தொடரில் இடம்பெற்றிருந்த பானுக ராஜபக்ஷ, பவன் ரத்நாயக்க மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
எனினும் தொடர்ந்தும் குழாத்தில் இடம்பெற்றுவந்த துஷான் ஹேமந்த அணியில் வாய்ப்பை பெற்றுள்ளதுடன், மஹீஷ் தீக்ஷனவின் பாணியில் பந்துவீசக்கூடிய இளம் வீரர் டிரவீன் மெதிவ் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இலங்கை அணி T20 உலகக்கிண்ணத்தில் தசுன் ஷானகவின் தலைமையில் களமிறங்கவுள்ளதுடன், அவரின் தலைமையில் இந்த தொடருக்கான அணி பெயரிடப்பட்டுள்ளதுடன், பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பேரேரா, வனிந்து ஹஸரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகிய முன்னணி வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை குழாம்
தசுன் ஷானக (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா, சரித் அசலங்க, ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹஸரங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, துஷான் ஹேமந்த, டிரவீன் மெதிவ், துஷ்மந்த சமீர, மதீஷ பதிரண, நுவான் துஷார, எசான் மாலிங்க
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<





















