சனத் ஜயசூரிய, அப்ரிடி, அக்தார், முரளி ஒரே அணியில்

535

முன்னாள் முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்காக ஓமானில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள லெஜன்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் ஆடும் ஆசிய லயன்ஸ் அணியின் வீரர்கள் விபரம் வெளியிடப்பட்டிருக்கின்றது.

மீண்டும் நடைபெறவுள்ள லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடர்

2022ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 18ஆம் திகதி அல் அமெரோட் மைதானத்தில் ஆரம்பமாகும் இந்த லெஜன்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் ஆசிய லயன்ஸ் அணி அடங்கலாக இந்தியா மற்றும் உலக பதினொருவர் XI ஆகியவற்றின் லெஜன்ட்ஸ் அணி என மொத்தம் மூன்று அணிகள் பங்கெடுக்கின்றன.

அதன்படி இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஆசிய லயன்ஸ் அணியில் இலங்கை கிரிக்கெட் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட நட்சத்திரமும், சகலதுறைவீரருமான சனத் ஜயசூரிய இடம்பெற்றுள்ளதோடு, பாகிஸ்தான் முன்னாள் வேகப்புயல் சொஹைப் அக்தாருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

இவர்கள் தவிர பாகிஸ்தான் முன்னாள் அதிரடி நட்சத்திரம் சஹீட் அப்ரிடி, இலங்கையின் முன்னாள் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் ஆகியோரும் ஆசிய லயன்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கின்றனர்.

மொத்தம் 16 முன்னாள் வீரர்கள் கொண்டதாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஆசிய லயன்ஸ் அணியில் சமிந்த வாஸ், ரொமேஷ் களுவிதாரன, திலகரட்ன டில்ஷான், யூனூஸ் கான் போன்ற முன்னணி வீரர்களும் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் நடைபெறவுள்ள லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடர்

அத்தோடு இந்த ஆசிய லெஜன்ட்ஸ் அணி இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் முன்னாள் வீரர்களுடன் சேர்த்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவற்றின் முன்னாள் வீரர்களையும் கொண்டதாக அமைகின்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க