நீச்சல் போட்டிகளில் தேசிய சாதனையை முறியடித்த அகலங்க, கிரன்

85

தெற்காசிய விளையாட்டு விழாவில் கடந்த இரண்டு நாட்களிலும் 4 தங்கங்களை வென்றிருந்த இலங்கை நீச்சல் அணியால் இன்றைய தினம் (7) எந்தவொரு தங்கப் பதக்கத்தையும் வெற்றிக்கொள்ள முடியவில்லை.

தேசிய சாதனையுடன் தங்கம் வென்ற மெதிவ் அபேசிங்க

தெற்காசிய விளையாட்டு விழாவில் இன்றைய தினம் (6) நடைபெற்ற நீச்சல் போட்டிகளில்…

எவ்வாறாயினும், இன்றைய தினம் அகலங்க பீரிஸ் மற்றும் கிரன் ஜாசிங்க ஆகியோரின் தேசிய சாதனைகளுடன் இலங்கை 3 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வெற்றிக்கொண்டது.

ஆண்களுக்கான 100 மீற்றர் பின்னோக்கிய (Backstroke) நீச்சல் போட்டியில் அகலங்க பீரிஸ் இன்றைய தினத்துக்கான இரண்டாவது வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இவர், போட்டி தூரத்தை 54.14 செக்கன்களில் கடந்ததுடன், தன்னுடைய முன்னைய சாதனையான 56.99 என்ற செக்கன்கள் சாதனையை முறியடித்தார்.

இவருக்கு முதல் பெண்களுக்கான 800 மீற்றர் சாதாரண நீச்சலில் (freestyle) போட்டியிட்ட  ரமுதி சமரகோன் போட்டித் தூரத்தை 9.34.42 நிமிடங்களில் கடந்து இன்றைய தினத்துக்கான முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார். அதேநேரம், இன்றைய தினம் இறுதியாக நடைபெற்ற பெண்களுக்கான 50 மீற்றர் சாதாரண நீச்சலில் பங்குபற்றிய பக்தி கருணாசேன போட்டித் தூரத்தை 26.81 செக்கன்களில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இன்றைய தினத்தின் மற்றுமொரு தேசிய சாதனையை கிரன் ஜாசிங்க நிகழ்த்தியிருந்தார். ஆண்களுக்கான 50 மீற்றர் ப்ரெஸ்ட்ரொக் (Breaststroke) நீச்சல் போட்டியில் இவர், வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தாலும், போட்டித் தூரத்தை 28.79 செக்கன்களில் நிறைவுசெய்திருந்தார்.

இதற்கு முன்னர் 2016ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய சம்பியன்ஷிப்பில் கிரன் ஜாசிங்க போட்டித் தூரத்தை 30.03 செக்கன்களில் நிறைவுசெய்து சாதனையை பதிவுசெய்திருந்தார். 

Photos: Day 06 | South Asian Games 2019

ThePapare.com | Dinushki Ranasinghe | 06/12/2019 Editing and re-using images…

அதேவேளை, இந்த வெண்கலப் பதக்கத்தை தவிர்த்து, இலங்கை அணி இன்றைய தினம் மேலும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது. ஆண்களுக்கான 400 மீற்றர் தனிநபர் கலப்பு நீச்சல் போட்டியில் ரவீன் சேனாரத்ன (4.46.67), ஆண்களுக்கான 100 மீற்றர் பின்னோக்கிய நீச்சலில் செவிந்ர டி சில்வா (56.11), பெண்களுக்கான 50 மீற்றர் ப்ரெஸ்ட்ரொக் நீச்சல் போட்டியில் ரமுதி சமரகோன் (34.21) மற்றும் பெண்களுக்கான 50 மீற்றர் சாதராரண நீச்சலில் சந்து செவிந்து (27.03) ஆகியோர் வெண்கலப் பதக்கங்கங்களை வென்றிருந்தனர்.

தெற்காசிய விளையாட்டு விழா கொடர்பான மேலதிக தகவல்களை படிக்க