Home Tamil கேன் வில்லியம்சனின் சதத்தோடு நியூசிலாந்து அணிக்கு வெற்றி

கேன் வில்லியம்சனின் சதத்தோடு நியூசிலாந்து அணிக்கு வெற்றி

138
Image Courtesy - ICC

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 25ஆவது லீக் போட்டியில், தென்னாபிரிக்க அணியினை நியூசிலாந்து 4 விக்கெட்டுக்களால் தோற்கடித்துள்ளது.

பர்மிங்கமில் நேற்று (19) ஆரம்பமான இப்போட்டி மழை காரணமாக அணிக்கு 49 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக அமைந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தென்னாபிரிக்க அணிக்கு வழங்கினார்.

இலங்கை கிரிக்கெட்டின் பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் விமானப்படைத் தளபதி நியமனம்

முன்னாள் விமானப்படை தளபதி ஏயார் சீப் மார்ஷல்……

உலகக் கிண்ணத் தொடரில் நியூசிலாந்து அணி இந்தியாவுடன் ஆடவிருந்த கடைசிப் போட்டி மழையினால் கைவிடப்பட்டது. இந்நிலையில், இந்த உலகக் கிண்ணத் தொடரில் தோல்விகள் எதனையும் சந்திக்காத நியூசிலாந்து அணி, எந்த மாற்றங்களையும் மேற்கொள்ளாமல் களமிறங்கியது.

நியூசிலாந்து அணி – மார்டின் கப்டில், கொலின் மன்ரோ, கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), ரொஸ் டெய்லர், டொம் லேதம், ஜேம்ஸ் நீஷம், கொலின் டி கிரான்ட்ஹோமே, மிச்செல் சான்ட்னர், மேட் ஹென்றி, லொக்கி பெர்குஸன், ட்ரென்ட் போல்ட்

மறுமுனையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தமது கடைசி மோதலில் முதல் உலகக் கிண்ண வெற்றியினை பெற்றுக் கொண்ட தென்னாபிரிக்க அணியில் காயமுற்ற வேகப்பந்து வீச்சாளரன லுங்கி ன்கிடி இணைந்திருந்தார்.

தென்னாபிரிக்க அணி – ஹஷிம் அம்லா, குயின்டன் டி கொக், எய்டன் மார்க்ரம், பாப் டு பிளேசிஸ் (அணித்தலைவர்), ரஸ்ஸி வன்டர் டஸ்ஸேன், டேவிட் மில்லர், அன்டைல் பெஹ்லுக்வேயோ, கிறிஸ் மொர்ரிஸ், ககிஸோ றபாடா, லுங்கி ன்கிடி, இம்ரான் தாஹிர்

இங்கிலாந்து அணியின் பலவீனங்களை அறிந்து வைத்துள்ளோம் – ருமேஷ் ரத்னாயக்க

இலங்கை கிரிக்கெட் அணி, தம்முடைய ஆறாவது உலகக்…..

இதன் பின்னர் தென்னாபிரிக்க அணி குயின்டன் டி கொக், ஹஷிம் அம்லா ஆகியோருடன் தமது  துடுப்பாட்டத்தை தொடங்கியது.

தென்னாபிரிக்க அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான குயின்டன் டி கொக் 5 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து மோசமான ஆரம்பத்தை தந்தார். இதனை அடுத்து புதிய துடுப்பாட்ட வீரராக வந்த தென்னாபிரிக்க அணியின் தலைவர்  பாப் டு பிளேசிஸ் இனால் 23 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

எனினும், தென்னாபிரிக்க அணியின் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஹஷிம் அம்லா  ஒருநாள் போட்டிகளில் பெற்ற 42ஆவது அரைச்சதத்துடன் பெறுமதி சேர்த்தார். மொத்தமாக 83 பந்துகளை எதிர்கொண்ட அம்லா 4 பெளண்டரிகள் உடன் 55 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து முன்னேறிய போட்டியில் தென்னாபிரிக்க அணியின் மத்தியவரிசை எதிர்பார்த்த ஓட்டங்களை குவிக்க தவறியது. இதனால், தென்னாபிரிக்க அணி 49 ஓவர்கள் நிறைவுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு எதிராக அவிஷ்க குணவர்தன வழக்கு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், இலங்கை……

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் ரஸ்ஸி வன்டர் டர் டஸ்ஸேன் ஒருநாள் போட்டிகளில் தனது 6ஆவது அரைச்சதத்தோடு 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அதேநேரம் எய்டன் மார்க்ரம் 38 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் லோக்கி பெர்குஸன் 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 242 ஓட்டங்களை அடைய நியூசிலாந்து அணி துடுப்பாடியது.

தொடர்ந்து களம்வந்த நியூசிலாந்து அணியின் முக்கிய முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான கொலின் மன்ரோ (9), ரொஸ் டெய்லர் (1) மற்றும் டொம் லேதம் ஆகியோர் மிகவும் குறைவான ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர். இதனால், நியூசிலாந்து அணியும் தடுமாறத் தொடங்கியது.

எனினும் நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் ஒருநாள் போட்டிகளில் தான் பெற்ற 12ஆவது சதத்தை பெற்றார். இதேநேரம், கவனமான முறையில் ஆடிய கொலின் டி கிரான்ட்ஹோமே உம் ஒருநாள் போட்டிகளில் தனது 2ஆவது அரைச்சதத்தினை பெற்றுக்கொண்டார்.

உலகக் கிண்ணத்திலிருந்து நீக்கப்பட்டார் தவான்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் உபாதைக்குள்ளாகியிருந்த…….

இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு நியூசிலாந்து அணி போட்டியின் வெற்றி இலக்கினை 48.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ஓட்டங்களுடன் அடைந்தது.

நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த அதன் தலைவர் கேன் வில்லியம்சன் 9 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 138 பந்துகளில் 106 ஓட்டங்களை பெற்றிருந்தார். கொலின் டி கிரான்ட்ஹோமே 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 47 பந்துகளில் 60 பந்துகளை பெற்றிருந்தார்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பில் கிறிஸ் மொர்ரிஸ் நியூசிலாந்து அணியின் மூன்று விக்கெட்டுக்களை சாய்த்து அழுத்தம் தந்த போதிலும் அவரின் பந்துவீச்சு வீணானனது.

போட்டியின் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் தெரிவாகினார்.

மகளிருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் திகதி அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) நடாத்தும் மகளிருக்கான….

இப்போட்டியோடு இந்த உலகக் கிண்ணத் தொடரில் தோல்விகள் எதனையும் பெறாமல் முன்னேறும்  நியூசிலாந்து அணி, தமது அடுத்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்வரும் சனிக்கிழமை (22) மன்செஸ்டர் நகரில் வைத்து எதிர்கொள்கின்றது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (23), தென்னாபிரிக்க அணி தமது அடுத்த உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானை லண்டனில் வைத்து சந்திக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<

ஸ்கோர் விபரம்

Upcoming


New Zealand

South Africa



முடிவு – நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி