இசிபதன மற்றும் கிங்ஸ்வுட் இறுதிப்போட்டிக்குத் தகுதி

176
U 18 semifinals

18 வயதிற்குட்பட்ட நடப்பாண்டு லீக் இறுதிப்போட்டிக்கு அணிகள் தெரிவு 

கொழும்பு, ஆனந்த பாடசாலை ரக்பி மைதானத்தில் நடைபெற்ற 18 வயதிற்குட்பட்ட மைலோ ரக்பி லீக் அரை இறுதிப் போட்டிகளுக்காக நடப்பு சாம்பியன் இசிபதன, வலுவான புனித அந்தோனியார் கல்லுரியை எதிர்கொள்ள, மற்றைய அரை இறுதிப்போட்டிக்கு சாஹிரா கல்லூரியும் கிங்ஸ்வூட் பாடசாலையும் மோதிக்கொண்டனர்.

இசிபதான எதிர் புனித அந்தோனியார் (அரை இறுதிப்போட்டி 01)

வலிமை மிக்க அணியான புனித அந்தோனியார் கல்லுரியை, நடப்பு சாம்பியன் இசிபதன அரை இறுதிப்போட்டியில் வெற்றி கொண்டது. முதற்தர போட்டிகளில் விளையாடும் வீரகள் புனித அந்தோனியார் கல்லுரிக்கு சாதகமான நிலை இருந்த போதிலும் 8-0 என்ற வகையில் தோல்வியுற்றது.

தீர்க்கமான இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணிகளும் வெற்றிக்காக ஆவேசமாக விளையாடினர். இரு அணிகளாலும் எவ்விதமான புள்ளிகளையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும் முதல் பாதி முடிவதற்கு முன்னர் சுபுன் செனவிரட்ணவால் ஒரு பெனால்டி கிக் மூலம் 03 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டார்.

முதல் பாதி நேரம்: இசிபதன 03 புனித அந்தோனியார் கல்லூரி 00

இரண்டாம் பாதி நேரத்தில் இசிப்பதன கல்லூரி மேலும் புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள கடுமையாகப் போராடியது. எனினும், புனித அந்தோனியார் கல்லூரியின் சிறந்த தடுப்பு முறையின் மூலம் இசிபதன புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளுவதற்கு தடுப்பு வீரர்கள் வாய்ப்பு வழங்கவில்லை.

எனினும், போட்டியின் 30ஆவது நிமிடத்தில் மீண்டும், சுபுன் செனவிரத்னவால், அந்தோனியாரின் தடுப்பு வீரர்களை ஊடறுத்துச் சென்று மேலும் 05 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தார். அந்தோனியார் கல்லூரி, புள்ளிகள் பெற்றுக்கொள்ளவதற்கு வாய்ப்புகள் இருந்த போதிலும், அவர்களால் எவ்விதமான புள்ளிகளையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. வெற்றிக்காக கடுமையாக போராடியது. எனினும், போட்டி இறுதியில் இசிபதன கல்லூரி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியது.

இரண்டாம் பாதி நேரம் : இசிபதன 08  புனித அந்தோனியார் கல்லூரி 00


சாஹிரா கல்லூரி எதிர் கிங்ஸ்வூட் கல்லூரி (அரை இறுதிப்போட்டி 02)

இரண்டாம் அரை இறுதிப்போட்டிக்காக மோதிக்கொண்ட கிங்ஸ்வூட் அணி, சாஹிரா கல்லூரி செய்த தவறுகளைப் பயன்படுத்தி 17-05 விகிதத்தில் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டது.

போட்டியின் ஆரம்பம் முதலே, கிங்ஸ்வூட் கல்லூரி மிக வேகமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. முதல் மூன்று நிமிடத்துக்குள், கிங்ஸ்வூட் அணியின் 08ஆம் இலக்க வீரர், சாஹிரா கல்லூரியின் தடுப்பு வீரர்களை ஊடறுத்து, ட்ரை மூலம் 05 புள்ளிகளைப் பெற்று கொண்டனர். எனினும், சாஹிரா கல்லூரி, நிஸ்ரன் நிலாம் மூலம் பெற்றுக் கொண்ட ட்ரை மூலம் இரண்டு அணிகளதும் ஸ்கோர் ஐந்துக்கு ஐந்து என்ற வகையில் சமன் செய்யப்பட்டது. மிக எளிதாக பெற்றுக் கொள்ளகூடிய கோலை வை. லான்ற்ரா விணடித்தார்.

கிங்ஸ்வூட் கல்லூரிக்கு போட்டி நேரத்தின் போது வீரர்களின் காயங்கள் காரணமாக பலவாறான மாற்றங்களை செய்ய நேரிட்டது. எனினும், சிறப்பாக ஆட்டத்தினை வெளிப்படுத்தினர், சாஹிரா கல்லூரி செய்த தவறுகளால் கிங்ஸ்வூட் கல்லூரிக்கு மேலும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட ”வின்கர்” சச்சித்ர செனவிரத்ன மேலுமொரு ட்ரை மூலம் 05 புள்ளிகளைப் பெற கிங்ஸ்வூட் அணி சாஹிரா கல்லூரியை விட 05 புள்ளிகளைப் பெற்று முன்னிலை பெற்றது.

முதல் பாதி நேரம் : சாஹிரா 05 கிங்ஸ்வூட் கண்டி 10

போட்டியின் இரண்டாம் பாதியை சிறப்பாக சாஹிரா கல்லூரி ஆரம்பித்த போதிலும், யுசரான் லான்ற் சிறப்பான ஆட்டத்தினை இம்முறை வெளிப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக, சாஹிரா கல்லூரிக்கு மேலும் அழுத்தம் கொடுக்கப்பட்டமையினால், தவறுகள் மேலும் மேலும் விடப்பட்டன. தவறுகளைப் பயன்படுத்திக்கொண்டு சசீந்த அமரசேன மிக எளிதான கோல் ஒன்றை தனதாக்கிக் கொண்டார். சாஹிரா கல்லூரி மிகவும் கடினமாக விளையாடிய போதும் அது பயனளிக்கவில்லை. போட்டியின் முடிவில் கிங்ஸ்வூட் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது. எதிர் வரும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை CR & FC விளையாட்டு மைதானத்தில், இசிபதனவும் கிங்ஸ்வுட் அணியும் மோதவுள்ளனர்.

முழு நேரம் : சாஹிரா 05 கிங்ஸ்வூட் 17