Home Tamil சுழல் பந்துவீச்சாளர்களின் அபாரத்தால் ஒருநாள் தொடர் இலங்கை வசம்

சுழல் பந்துவீச்சாளர்களின் அபாரத்தால் ஒருநாள் தொடர் இலங்கை வசம்

1166

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி நிறைவடைந்திருக்கும் நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க அணியினை 78 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கின்றது.  

மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினையும் 2- 1 எனக் கைப்பற்றியிருக்கின்றது.  இது தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இலங்கை அணி 8 வருடங்களின் பின்னர் பெற்ற முதலாவது ஒருநாள் தொடர் வெற்றியாகப் பதிவாகியது. 

முன்னதாக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி, இலங்கையுடன் ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கிற்காக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவரும் நிலையில் தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் நிறைவுற்று தொடர் 1-1 என சமநிலை அடைந்திருக்க தொடரினை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று (07) ஆரம்பமானது.  

முதல் இரண்டு போட்டிகளிலும் பெரிதாக திறமையை காண்பிக்காத விக்கெட் காப்பாளர் மினோத் பானுக்க, பானுக்க ராஜபக்ஷ மற்றும் அகில தனன்ஜய ஆகியோர் இன்றைய போட்டியில் இருந்து நீக்கப்பட்டனர். 

எனவே, இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில், சுழல் பந்துவீச்சாளரான மகீஷ் தீக்ஷன சர்வதேச அறிமுகம் பெற தினேஷ் சந்திமால் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. 

இலங்கை அணி 

தசுன் ஷானக (தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால் (விக்கெட் காப்பாளர்), கமிந்து மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா, சரித் அசலங்க, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, மஹீஷ் தீக்ஷன, பிரவீன் ஜயவிக்ரம

தென்னாபிரிக்க அணி 

எய்டன் மர்க்ரம், ஜென்னமன் மலன், ரீசா ஹென்ரிக்ஸ், ரஸ்ஸி வென் டர் டஸன், வியான் முல்டர், ஹென்ரிச் கிலாசன் (விக்கெட் காப்பாளர்), எண்டைல் பெஹெலுக்வாயோ, கேஷவ் மஹாராஜ், காகிஸோ ரபாடா, ஜோர்ஜ் லின்டே, டப்ரைஷ் சம்ஷி

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைய முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு சிறந்த ஆரம்பம் ஒன்று அமைந்திருக்கவில்லை. இலங்கை அணியின் ஆரம்ப வீரர்களில் ஒருவராக வந்த அவிஷ்க பெர்னாண்டோ வெறும் 10 ஓட்டங்கள் பெற, ஏனைய ஆரம்ப வீரரான தினேஷ் சந்திமால் 9 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தார். 

இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றது இந்தியா

பின்னர் மத்திய வரிசையில் சரித் அசலன்க தவிர்ந்த ஏனைய அனைவரும் மோசமாக செயற்பட்டிருக்க, 50 ஓவர்கள் நிறைவில் இலங்கை கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றுக்கொண்டது. 

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் சரித் அசலன்க 2 பௌண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்கள் பெற்று கூடுதல் ஓட்டங்களை பதிவு செய்ய, தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பில் கேசவ் மஹாராஜ் 3 விக்கெட்டுக்களையும், ஜோர்ஜ் லின்டே மற்றும் தப்ரைஸ் சம்ஷி ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 204 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, வெற்றி இலக்கிற்கான பயணத்தினை சிறப்பாக ஆரம்பிக்க முயன்ற போதும் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர்களால் நெருக்கடி உருவாக்கப்பட்டது. 

பின்னர், தொடர்ந்து இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர்களான அறிமுகவீரர் மஹீஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களை தடுமாற்றத்திற்கு உள்ளாக்க, இறுதியில் தென்னாபிரிக்க அணி 30 ஓவர்களில் 125 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் படுதோல்வி அடைந்தது.

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஹென்ரிச் கிலாசன் 22 ஓட்டங்களை பெற்றதே அவர்கள் தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களாக மாறியது. 

ரவி சாஸ்திரிக்கு கொவிட்-19 தொற்று; பலர் தனிமைப்படுத்தலில்

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் அறிமுக வீரரான மஹீஷ் தீக்ஷன வெறும் 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்ற, துஷ்மன்த சமீர மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோரும் தலா 2 விக்கெட்டுக்களுடன் இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்தனர். 

போட்டியின் ஆட்டநாயகனாக துஷ்மன்த சமீர தெரிவாக, தொடர் நாயகன் விருதினை இலங்கை அணியின் சரித் அசலன்க பெற்றுக்கொண்டார். 

ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) ஆரம்பமாகின்றது. 

போட்டியின் சுருக்கம் 


Result


Sri Lanka
203/9 (50)

South Africa
125/10 (30)

Batsmen R B 4s 6s SR
Avishka Fernando lbw b Keshav Maharaj 10 18 2 0 55.56
Dinesh Chandimal lbw b George Linde 9 12 1 0 75.00
Kamindu Mendis c & b George Linde 16 27 2 0 59.26
Dhananjaya de Silva c Heinrich Klaasen b Aiden Markram 31 44 2 0 70.45
Charith Asalanka c Heinrich Klaasen b Tabraiz Shamsi 47 71 2 0 66.20
Dasun Shanaka c Wiaan Mulder b Keshav Maharaj 13 12 1 0 108.33
Wanindu Hasaranga c Reeza Hendricks b Keshav Maharaj 6 10 0 0 60.00
Chamika Karunaratne lbw b Tabraiz Shamsi 16 39 1 0 41.03
Dushmantha Chameera c Janneman Malan b Wiaan Mulder 29 39 3 0 74.36
Maheesh Theekshana not out 10 26 0 0 38.46
Praveen Jayawickrama not out 2 4 0 0 50.00


Extras 14 (b 0 , lb 2 , nb 4, w 8, pen 0)
Total 203/9 (50 Overs, RR: 4.06)
Fall of Wickets 1-22 (3.6) Avishka Fernando, 2-33 (6.2) Dinesh Chandimal, 3-64 (14.2) Kamindu Mendis, 4-93 (19.5) Dhananjaya de Silva, 5-112 (24.1) Dasun Shanaka, 6-121 (26.4) Wanindu Hasaranga, 7-154 (37.2) Chamika Karunaratne, 8-166 (41.1) Charith Asalanka, 9-198 (48.2) Dushmantha Chameera,

Bowling O M R W Econ
Kagiso Rabada 8 0 46 0 5.75
Keshav Maharaj 10 0 38 3 3.80
George Linde 10 1 32 2 3.20
Aiden Markram 10 0 41 1 4.10
Tabraiz Shamsi 10 0 31 2 3.10
Andile Phehlukwayo 1 0 10 0 10.00
Wiaan Mulder 1 0 3 1 3.00


Batsmen R B 4s 6s SR
Janneman Malan c Dhananjaya de Silva b Maheesh Theekshana 18 19 2 0 94.74
Aiden Markram c Dhananjaya de Silva b Praveen Jayawickrama 2 4 0 0 50.00
Reeza Hendricks b Dushmantha Chameera 1 7 0 0 14.29
Rassie van der Dussen c Kamindu Mendis b Dushmantha Chameera 5 5 1 0 100.00
Heinrich Klaasen lbw b Maheesh Theekshana 22 30 3 0 73.33
Wiaan Mulder b Wanidu Hasaranga 2 7 0 0 28.57
Andile Phehlukwayo c Dinesh Chandimal b Charith Asalanka 17 36 2 0 47.22
George Linde c Kamindu Mendis b Wanindu Hasaranga 18 24 2 0 75.00
Kagiso Rabada c Dhananjaya de Silva b Maheesh Theekshana 8 13 1 0 61.54
Keshav Maharaj c Dinesh Chandimal b Maheesh Theekshana 15 17 2 0 88.24
Tabraiz Shamsi not out 9 19 0 0 47.37


Extras 8 (b 0 , lb 1 , nb 1, w 6, pen 0)
Total 125/10 (30 Overs, RR: 4.17)
Fall of Wickets 1-8 (1.4) Aiden Markram, 2-9 (2.5) Reeza Hendricks, 3-19 (4.1) Rassie van der Dussen, 4-45 (9.1) Janneman Malan, 5-48 (10.4) Wiaan Mulder, 6-54 (15.2) Heinrich Klaasen, 7-90 (21.1) Andile Phehlukwayo, 8-100 (23.5) Kagiso Rabada, 9-102 (24.2) George Linde, 10-125 (29.6) Keshav Maharaj,

Bowling O M R W Econ
Dushmantha Chameera 4 1 16 2 4.00
Praveen Jayawickrama 4 0 18 1 4.50
Wanindu Hasaranga 8 3 32 2 4.00
Maheesh Theekshana 10 0 37 4 3.70
Dhananjaya de Silva 3 0 18 0 6.00
Charith Asalanka 1 0 3 1 3.00



முடிவு – இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<