தென்னாபிரிக்காவை மட்டுப்படுத்திய இலங்கை வளர்ந்துவரும் அணி

483

தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியுடனான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை வளர்ந்து வரும் அணியால் அந்த அணியை 216 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த முடிந்துள்ளது. இதில் இரு கைகளாலும் பந்துவீசும் இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

தென்னாபிரிக்காவுடனான முதல் மோதலில் இலங்கை வளர்ந்து வரும் அணி வெற்றி

தென்னாபிரிக்க வளர்ந்துவரும்…

ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இன்று (02) ஆரம்பமான நான்கு நாட்கள் கொண்ட இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணித்தலைவர் டோனி டி சொர்சி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

எனினும், துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 18 ஓட்டங்களை பெற்றிருந்தபோதே அணித் தலைவரின் விக்கெட்டை இழந்தது. ஆரம்ப வீரராக வந்த டி சொர்சி வலதுகை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு கமகேவின் பந்துக்கு 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் வேகமாக ஆடிய ரியான் ரிக்கெல்டன் 58 பந்துகளில் 51 ஓட்டங்களை பெற்றபோது அவரது விக்கெட்டையும் கமகே சாய்த்தார். இந்நிலையில் மத்திய வரிசையில் வந்த வீரர்கள் எவரும் நின்றுபிடித்து ஆடவில்லை. முதல் வரிசையில் வந்த ககிசோ ரபுலான நிதானமாக ஆடியபோதும் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் முன்னாள் தலைவர் கமிந்து மெண்டிஸின் பந்துக்கு ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் கடைசி வரிசையில் வந்த க்ரகோரி மஹ்லெக்வானா (29) மற்றும் நந்ரே பேர்கர் (31) இருவரும் தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணிக்காக இரண்டாவது மற்றும் மூன்றாவது அதிகூடிய ஓட்டங்களை பெற்று அந்த அணியை கௌரவமான நிலைக்கு அழைத்து வந்தனர்.

அணிக்கு முழுமையாக பங்களிக்க முடியாமல் மைதானத்திலிருந்து வெளியேறிய திக்வெல்ல

இலங்கை – தென்னாபிரிக்க…

இதன்படி தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணி 64.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 216 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இதன்போது, இலங்கை வளர்ந்துவரும் அணிக்காக சிறப்பாக பந்துவீசிய 19 வயது சுழல் வீரர் கமிந்து மெண்டிஸ் 8.3 ஓவர்களில் 32 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை அணிக்காக இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் கமகே மற்றும் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் நிசல தாரக்க தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி தருவாயில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை வளர்ந்து வரும் அணி 6 ஓட்டங்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. லஹிரு மலிந்த 5 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இந்நிலையில் அணித்தலைவர் கௌஷால் சில்வா மற்றும் சதீர சமரவிக்ரம ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 49 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். எனினும், 43 பந்துகளில் 34 ஓட்டங்களை பெற்றிருந்த கௌஷால் சில்வா ஆட்டமிழக்க இன்னும் 14 ஓட்டங்களை பெறுவதற்குள் சமரவிக்ரமவும் 25 ஓட்டங்களுடன் ஸ்டம்ப் செய்யப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார்.

பிரியாவிடை போட்டிக்காக காத்திருக்கும் லசித் மாலிங்க

தனது வெளிப்படையான, நேரடியாகப்…

சமரவிக்ரமவின் ஆட்டமிழப்போடு முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதன்படி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸை ஆடும் இலங்கை வளர்ந்து வரும் அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 69 ஓட்டங்களை பெற்றுள்ளது. இளம் வீரர் பெதும் நிஸ்ஸங்க 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார்.

இலங்கை அணி தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியை விடவும் இன்னும் 147 ஓட்டங்களால் பின்தங்கியபோதும் தொடர்ந்து 7 விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில் அந்த அணியால் வலுவான முன்னிலை ஒன்றை பெற வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நாளை (03) தொடரும்.

போட்டியின் சுருக்கம்

 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<