டெஸ்ட் அரங்கில் கால்பதிக்கும் ஆப்கானிஸ்தான் முதலில் சந்திக்கும் அணி இந்தியா!

774

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அண்மையில் டெஸ்ட் வரம் பெற்றுக்கொண்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தாம் பங்குபற்றவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் பிரபல இந்திய அணியை சந்திக்கவுள்ளது. இதன்படி, 2018 இல் இந்திய அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் பிறகு இத்தொடர் வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது

வரலாறு படைக்க எமக்கு சிறந்த வாய்ப்பு – திசர பெரேரா

இலங்கை அணி எந்த திசையில் பயணிக்கப்போகிறது என்பதை..

இந்நிலையில், டெல்லியில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற பிசிசிஐ யின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் இந்திய அணியின் எதிர்கால சுற்றுப்பயணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதுடன், அதுதொடர்பிலான அறிவிப்புகளும் வெளியாகி இருந்தன.

இதில் இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய கிரிக்கெட் சபைகளின் இணக்கத்துக்கு அமைய, அடுத்த வருடம் முடிவதற்கு முன் இரு அணிகளும் டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.  

இது குறித்து இந்திய கிரிக்கெட் சபையின் தற்காலிக பொதுச் செயலாளர் அமிதாப் சௌதிரி கருத்து வெளியிடுகையில்,

ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவை சந்திக்க இருந்தது. எனினும், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவு நீடித்து வருவதால் அவ்வணியுடனான முதல் டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கு நாம் தீர்மானித்தோம். அதன்படி, இந்தியாவில் நடைபெறவுள்ள இப்போட்டி குறித்து திகதியை விரைவில் அறிவிப்போம்எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஆதிப் மஷால் கருத்து தெரிவிக்கையில், இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியாக அமையவுள்ளது. எமது கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்த பிசிசிஐக்கு நன்றி என்றார்.

ஹத்துருசிங்க விலகியதை அடுத்து பங்களாதேஷ் அணிக்கு புதிய தலைவர்

கிரிக்கெட் அரங்கில் அண்மைக்காலமாக பல…

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் நிலவி வருகின்ற தீவிரவாதத் தாக்குதல்களைக் கருத்திற்கொண்டு அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்கின்ற சர்வதேச போட்டிகளை நடாத்துவதற்கு பொதுவான மைதானமாக இந்தியாவின் கிரேட்டர் நொய்டா மைதானத்தை வழங்குவதற்கு பிசிசிஐ நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி, குறித்த மைதானத்தில் அயர்லாந்து அணியுடனான போட்டிகளில் அவ்வணி விளையாடியிருந்தது.

அதனையடுத்து இவ்வருடம் நடைபெற்ற .பி.எல் T-20 தொடரிலும், ஆப்கானிஸ்தான் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் முதற்தடவையாக மொஹமட் நபி மற்றும் ராஷித் கான் ஆகிய வீரர்களுக்கு விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு அந்நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு முன்நின்று உதவிசெய்த பிசிசிஐ, அவ்வணி பங்கேற்கவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடரை நடத்த முன்வந்துள்ளமை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பையும், நன்மதிப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இதேவேளை, அண்மைக்காலமாக ஒரு நாள் மற்றும் T-20 அரங்கில் பிரபல அணிகளுக்கு சவாலளிக்கும் வகையில் விளையாடி வந்த ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு கடந்த ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது.

இதனையடுத்து பாகிஸ்தான் அணியுடன், எதிர்வரும் மே மாதம் தமது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதாக அயர்லாந்து கிரிக்கெட் சபை முன்னதாக அறிவித்திருந்தது.

அதேபோல ஆப்கானிஸ்தான் அணி, தமது முதல் டெஸ்ட் போட்டியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஜிம்பாப்வே அணியுடன் விளையாடுவதாக அறிவித்திருந்து. எனினும், மார்ச் மாதம் ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளைக் கருத்திற்கொண்டு அந்த தொடரை பிற்போடுவதற்கு இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாதனைகள் மூலம் இந்தியாவுடனான கடனைத் தீர்த்த இலங்கை அணி

செப்டெம்பர் 6 புதன்கிழமை இலங்கைத் தீவுக்கு சுற்றுலா..

இதேவேளை, அடுத்த வருடம் நடுப்பகுதியில் இங்கிலாந்துக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, அயர்லாந்து அணியுடன் 2 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் அல்லது T- 20 போட்டியில் விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இப்போட்டிகள் அயர்லாந்தின் மலஹைட் மைதானத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், போட்டித் திகதி குறித்து பிறகு அறிவிக்கப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அத்துடன், குறித்த கூட்டத்தில் மேலும் பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

பாகிஸ்தானின் கோரிக்கை நிராகரிப்பு

இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்வைத்துள்ள கோரிக்கை இந்தியாவில் இடம்பெற்ற குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது. இந்திய அரசு அனுமதி அளித்தால் மாத்திரமே இருதரப்பு தொடர் குறித்து சிந்திக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆனால், எதிர்வரும் 5 வருடங்களுக்கான .சி.சியின் போட்டி அட்டவணையில் பாகிஸ்தான் அணியுடன் இருதரப்பு போட்டிகளில் இந்தியா விளையாட முன்வராவிட்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அவ்வாறான போட்டி அட்டவணையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நஜாம் சேதி தெரிவித்தார்.  

அரசியல் தலையீடு மற்றும் எல்லைப் பிரச்சினைகள் காரணமாக இவ்விரு நாடுகளுக்குமிடையில் 2014 முதல் எந்தவொரு இருதரப்பு போட்டித் தொடர்களும் நடைபெறவில்லை.

இந்திய அணியின் கண்களை திறந்துவிட்ட இலங்கை அணியின் வெற்றி

நடைபெற்று முடிந்திருக்கும் சுற்றுலா இலங்கை மற்றும்..

எனினும், பிசிசிஐயினால் வெளியிடப்பட்டுள்ள புதிய கால அட்டவணையில் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுடனான தொடர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

306 போட்டிகளில் விளையாடும் இந்தியா

இந்திய கிரிக்கெட் அணி 2019 முதல் 2023 வரை 306 சர்வதேசப் போட்டிகளில் விளையாடவுள்ளது. இது முந்தைய காலத்தை விட 84 போட்டிகள் குறைவாகும். இதில் 81 போட்டிகள இந்தியாவில் நடைபெறவுள்ளன. இது கடந்த அட்டவணையை விட 30 போட்டிகள் அதிகமாகும்.

2020இல் சர்வதேச போட்டிகள் இல்லை

.பி.எல். தொடரின்போது வெளிநாட்டு அணிகளுக்கு இடையிலான இருநாட்டு சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெறுவதை நிறுத்துவதற்கும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு முதல் .சி.சியின் டெஸ்ட் லீக் தொடர் நடைபெறவுள்ளது. டெஸ்ட் சம்பியன்ஸ் லீக் தொடர் நடைபெற்றாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச தொடர்களை நடத்தவும் .சி.சி. சம்மதம் தெரிவித்துள்ளது.  

இதில் இந்தியாவில் .பி.எல். தொடர் நடைபெறும்போது ஏனைய வெளிநாட்டு அணிகளுக்கு இடையில் தொடர் நடத்தப்படக்கூடாது என்பதையும் இந்தியா எடுத்து வைத்துள்ளது. அப்படி நடத்தாவிட்டால் அனைத்து நாட்டு வீரர்களும் .பி.எல். தொடரில் பங்கேற்க முடியும். தொடரின் பாதிலேயே வெளியேறும் நிலைமை ஏற்படாது.

பெரும்பாலான கிரிக்கெட் சபைகள் தற்போது .பி.எல். தொடரின்போது இருநாடுகளுக்கு இடையிலான தொடரை நடத்துவதில்லை. ஆனால், இங்கிலாந்து கிரிக்கெட் சபை மட்டும் ஏப்ரல், மே மாதத்தில் கிரிக்கெட் தொடரை நடத்துகிறது. இங்கிலாந்து மட்டும் சம்மதித்தால், .பி.எல். தொடரின்போது எந்தவொரு வெளிநாட்டு தொடரும் நடைபெறாது.

2020இற்குள் இந்திய கிரிக்கெட் சபையின் விருப்பத்திற்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை சம்மதம் தெரிவிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் 2020இல் இருந்து உலகளவில் .பி.எல். நடத்தப்படும்போது ஏனைய சர்வதேசப் போட்டிகள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.