இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இலங்கை வீரர்களுக்கான T20 லீக் தொடரின் முதல் போட்டியில் கீரின்ஸ் அணியானது 04 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் ப்ளூஸ் அணிக்கெதிராக வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
>>ஆசியக்கிண்ணத் தொடர் 2025; ஆப்கானிஸ்தான் முதற்கட்ட குழாம் அறிவிப்பு<<
கொழும்பு SSC மைதானத்தில் முன்னர் ஆரம்பித்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற துனித் வெல்லாலகே தலைமையிலான ப்ளூஸ் அணியினர் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தனர்.
இதன்படி முதலில் ஆடிய அவ்வணி பெதும் நிஸ்ஸங்க மூலம் சிறந்த ஆரம்பம் பெற்ற போதும் மத்திய வரிசை தடுமாற்றம் காரணமாக 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்கள் பெற்றது. அவ்வணிக்காக பெதும் நிஸ்ஸங்க 10 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 28 ஓட்டங்கள் எடுக்க, கீரின்ஸ் அணிக்காக சாமிக்க கருணாரட்ன 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் நுவான் துஷார, துஷ்மன்த சமீர மற்றும் ட்ரவின் மெதிவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.
>>உபாதை காரணமாக வெளியேறும் வேகப்பந்துவீச்சாளர்<<
பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 144 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கீரின்ஸ் அணியானது தடுமாற்றம் ஒன்றை காட்டியது. எனினும் சாமிக்க கருணாரட்ன பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போட்டியின் வெற்றி இலக்கை ப்ளூஸ் அணியானது 6 விக்கெட்டுக்களை இழந்து 16.5 ஓவர்களில் அடைந்து கொண்டது.
ஏற்கனவே பந்துவீச்சில் பிரகாசித்து இம்முறை சிறந்த துடுப்பாட்டத்தோடு கீரின்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்த சாமிக்க கருணாரட்ன 31 பந்துகளில் ஆட்டமிழக்காது 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்கள் பெற்றார்.
ப்ளூஸ் அணியின் பந்துவீச்சில் தசுன் ஷானக்க 3 விக்கெட்டுக்களையும், அகில தனன்ஞய 2 விக்கெட்டுக்களை கைப்பற்றிய போதும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது.
போட்டியின் சுருக்கம்
ப்ளூஸ் – 143 (19.4) பெதும் நிஸ்ஸங்க 28, சாமிக்க கருணாரட்ன 17/3
கீரின்ஸ் – 144/6 (16.5) சாமிக்க கருணாரட்ன 47*, தசுன் ஷானக்க 17/3
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















