Home Tamil அபார வெற்றியுடன் ஒருநாள் தொடரை வென்றது இலங்கை

அபார வெற்றியுடன் ஒருநாள் தொடரை வென்றது இலங்கை

179

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் குசல் மெண்டிஸ் மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோரின் அபார துடுப்பாட்டத்துடனும், பந்துவீச்சாளர்களின் பங்களிப்புடனும் இலங்கை அணி 161 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்று, தொடரை 2-0 என கைப்பற்றியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியது. அதன்படி, களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 345 ஓட்டங்களை குவித்தது.

நீண்டகால இடைவெளிக்கு பின்னர் இருதரப்பு தொடரொன்றில் மோதவுள்ள இலங்கை – மேற்கிந்திய தீவுகள்

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு….

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (அணித்தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, திசர பெரேரா, லக்ஷான் சந்தகன், நுவன் பிரதீப், இசுரு உதான

மேற்கிந்திய தீவுகள்

சுனில் அம்ப்ரிஸ், ஷேய் ஹோப், டெரன் பிராவோ, ரொஸ்டன் ஷேஸ், ஜேசன் ஹோல்டர், கீரன் பொல்லார்ட் (தலைவர்), அல்ஸாரி ஜோசப், கீமோ போல், நிக்கோலஸ் பூரன், பெபியன் அலன், ஷெல்டன் கொட்ரல்

இலங்கை அணி சார்பாக ஆரம்பத்தில் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் 100 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய குசல் பெரேரா ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆனாலும், அடுத்ததாக களமிறங்கிய குசல் மெண்டிஸ், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோவுடன் இணைந்து சிறப்பாக ஓட்டங்களை குவித்தார்.

இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்காக 239 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இந்த இணைப்பாட்டமானது இலங்கையில் வைத்து இரண்டாவது விக்கெட்டுக்காக பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாக பதிவாகியது.

தனது இரண்டாவது ஒருநாள் சதத்தை பதிவுசெய்த குசல் மெண்டிஸ் 119 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அவிஷ்க பெர்னாண்டோவும் தன்னுடைய இரண்டாவது சதத்தை கடந்து 127 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னர் களமிறங்கிய திசர பெரேரா 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, வனிந்து ஹசரங்க மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா 17 ஓட்டங்களை பெற்றனர்.

Photos : Sri Lanka Team Practice Session Before 2nd ODI

ThePapare.com | Viraj Kothalawala | 25/02/2020 Editing……

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை பொருத்தவரை ஷெல்டன் கொட்ரல் 4 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

இதேவேளை, இலங்கை அணியின் இந்த ஓட்ட எண்ணிக்கையானது ஒருநாள் போட்டிகளில் சிக்ஸர்கள் இல்லாமல் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியது.

கடினமான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 39.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களை பெற்று, 161 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை கண்டது. இதன்படி, ஓட்டங்களின் அடிப்படையில் (161) மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக பெற்ற மிகச்சிறந்த வெற்றியையும் இலங்கை அணி பதிவுசெய்தது.

மேற்கிந்திய தீவுகள் சார்பாக சிறந்த ஆரம்ப இணைப்பாட்டம் பெறப்பட்ட போதும், அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் எதிர்பார்த்த அளவில் பிரகாசிக்கவில்லை. டெரன் பிராவோ, ரொஸ்டன் ஷேஸ் ஆகியோர் ஓட்டங்களை குவிக்க தொடங்கிய போதும், மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கைக்கு செல்ல தவறியிருந்தனர். இதில், கீரன் பொல்லார்ட் வந்த வேகத்தில் ஓட்டங்கள் இன்றி, வனிந்து ஹஸரங்கவின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருக்க, களத்தில் இருந்து துடுப்பெடுத்தாடிய நிக்கோலஸ் பூரன் ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். எனினும், மேற்கிந்திய தீவுகள் அணியின் ஓட்ட வேகம் குறைவாக நகர்ந்ததன் காரணமாக அவரின் முயற்சியும் வீணாக, அணியால் வெற்றியிலக்கை அடையமுடியவில்லை.

மேற்கிந்திய தீவுகள் சார்பாக அதிபட்சமாக ஷேய் ஹோப் 51 ஓட்டங்களையும், நிக்கோலஸ் பூரன் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், நுவன் பிரதீப் 2 விக்கெட்டுகளையும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

Photos: Sri Lanka vs West Indies | 2nd ODI

ThePapare.com | Viraj Kothalawala | 26/02/2020 Editing…

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை சிறந்த துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு என அனைத்திலும் பிரகாசித்த இலங்கை அணி 2-0 என கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் முதலாம் திகதி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka
345/8 (50)

West Indies
184/10 (39.1)

Batsmen R B 4s 6s SR
Avishka Fernando c Keemo Paul b Alzarri Joseph 127 123 10 0 103.25
Dimuth Karunaratne c Fabian Allen b Sheldon Cottrell, 1 8 0 0 12.50
Kusal Perera c Shai Hope b Sheldon Cottrell, 0 1 0 0 0.00
Kusal Mendis c Shai Hope b Alzarri Joseph 119 119 12 0 100.00
Thisara Perera b Sheldon Cottrell, 36 25 4 0 144.00
Angelo Mathews b Alzarri Joseph 1 2 0 0 50.00
Dhananjaya de Silva b Sheldon Cottrell, 12 5 2 0 240.00
Wanindu Hasaranga run out (Sheldon Cottrell,) 17 10 3 0 170.00
Isuru Udana not out 17 9 2 0 188.89


Extras 15 (b 0 , lb 3 , nb 2, w 10, pen 0)
Total 345/8 (50 Overs, RR: 6.9)
Fall of Wickets 1-9 (2.2) Dimuth Karunaratne, 2-9 (2.3) Kusal Perera, 3-248 (40.2) Kusal Mendis, 4-271 (42.2) Avishka Fernando, 5-274 (42.6) Angelo Mathews, 6-303 (45.4) Dhananjaya de Silva, 7-316 (47.3) Thisara Perera, 8-345 (49.6) Wanindu Hasaranga,

Bowling O M R W Econ
Sheldon Cottrell, 10 0 67 4 6.70
Jason Holder 8 0 59 0 7.38
Alzarri Joseph 10 0 57 3 5.70
Fabian Allen 6 0 37 0 6.17
Keemo Paul 7 0 62 0 8.86
Roston Chase 6 0 31 0 5.17
Kieron Pollard 3 0 29 0 9.67


Batsmen R B 4s 6s SR
Shai Hope c Dimuth Karunaratne b Angelo Mathews 51 65 5 0 78.46
SW Ambris run out (Angelo Mathews) 17 24 1 0 70.83
Darren Bravo, c Dhananjaya de Silva b Wanindu Hasaranga 16 23 1 0 69.57
Roston Chase b Lakshan Sandakan 20 30 1 0 66.67
Nicholas Pooran c Angelo Mathews b Lakshan Sandakan 31 41 3 0 75.61
Kieron Pollard b Wanindu Hasaranga 0 1 0 0 0.00
Jason Holder b Wanindu Hasaranga 3 8 0 0 37.50
Keemo Paul b Nuwan Pradeep 21 27 3 0 77.78
Fabian Allen c Thisara Perera b Lakshan Sandakan 17 14 2 1 121.43
Alzarri Joseph b Nuwan Pradeep 0 3 0 0 0.00
Sheldon Cottrell, not out 0 0 0 0 0.00


Extras 8 (b 0 , lb 1 , nb 1, w 6, pen 0)
Total 184/10 (39.1 Overs, RR: 4.7)
Fall of Wickets 1-64 (12.2) SW Ambris, 2-83 (17.1) Shai Hope, 3-93 (20.1) Darren Bravo,, 4-131 (24.2) Kieron Pollard, 5-130 (27.6) Roston Chase, 6-137 (30.2) Jason Holder, 7-159 (35.1) Nicholas Pooran, 8-184 (38.3) Keemo Paul, 9-184 (38.6) Alzarri Joseph, 10-184 (39.1) Fabian Allen,

Bowling O M R W Econ
Nuwan Pradeep 6 0 37 2 6.17
Thisara Perera 5 0 18 0 3.60
Isuru Udana 4 0 21 0 5.25
Angelo Mathews 5 0 20 1 4.00
Wanindu Hasaranga 10 0 30 3 3.00
Lakshan Sandakan 9.1 0 57 3 6.26



முடிவு – இலங்கை 161 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<