வனிந்து ஹசரங்கவின் சகலதுறை ஆட்டத்தால் கொழும்பு கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் வெற்றி

220
 

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆண்டுக்கான உள்ளூர் பருவத்திற்கான ப்ரிமியர் லீக் A நிலை கழகங்கள் பங்குபெறும் கிரிக்கெட் தொடரின் ஐந்து போட்டிகள் இன்று நிறைவடைந்தன.

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

வனிந்து ஹசரங்கவின் சகலதுறை ஆட்டத்தால் கோல்ஸ்ட் கிரிக்கெட் கழகத்துடனான போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 158 ஓட்டங்களால் இலகு வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் சதம் பெற்ற ஹசரங்க இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட்டுகளை சுருட்டினார்.

கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கும் நெருக்கடியுடன் இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்த கோல்ட்ஸ் அணி 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

முன்னதாக கோல்ட்ஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 89 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. எனினும் கொழும்பு கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்சில் 385 ஓட்டங்களை பெற்றது.

திமுத் கருணாரத்ன, கௌஷால் சில்வா ஆகியோரினால் முச்சத இணைப்பாட்டம்

எனினும் கோல்ட்ஸ் அணி பிரிமியர் லீக் A குழுவில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி ஒரு சமநிலையுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.  

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 89 (31.5) – பிரியமால் பெரேரா 26, கவீஷ்க அஞ்சுல 24, மனல்கர் டி சில்வா 3/13,  லஹிரு கமகே 3/29, அஷான் பிரியஞ்சன் 2/01, லக்ஷான் சதகன் 2/05  

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 385/9d (96.4) – வனிந்து ஹசரங்க 120, மாதவ வர்ணபுர 111*, லஹிரு மதுஷங்க 31, மனல்கர் டி சில்வா 30, கவீஷ்க அஞ்சுல 5/60

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 138 (55) – பசிந்து லக்ஷங்க 45, சங்கீத் குரே 34, கவீஷ்க அஞ்சுல 22, வனிந்து ஹசரங்க 8/26

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 158 ஓட்டங்களால் வெற்றி


ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் SSC

கௌஷால் சில்வாவின் இரட்டைச் சதத்துடன் முதல் இன்னிங்சில் இமாலய ஓட்டங்களை குவித்த நிலையில் ப்ளூம்பீல்ட் அணியுடனான போட்டியை SSC கழகம் சமநிலையில் முடித்துக் கொண்டது.

கொழும்பு, ப்ளூம்பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கடைசி நாளான இன்று தனது முதல் இன்னிங்சைத் தொடர்ந்த SSC அணிக்காக இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கௌஷால் சில்வா இரட்டை சதம் பெற்றார். முன்னதாக அவர் மற்றைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்னவுடன் சேர்ந்து ஆரம்ப விக்கெட்டுக்காக முச்சத இணைப்பாட்டம் ஒன்றைப் பெற்றார்.

இதன்படி SSC அணி 3 விக்கெட்டுகளை இழந்து 464 ஓட்டங்களை பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டது. கௌஷால் சில்வா ஆட்டமிழக்காது 202 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 201 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ப்ளூம்பீல்ட் அணிக்கு அதன் தலைவர் நிபுன் கருணாநாயக்க சதம் பெற்று (122) கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் ப்ளூம்பீல்ட் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 277 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் சுருக்கம்

ப்ளூம்பீல்ட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 263 (83.4) – லஹிரு ஜயகொடி 86, லஹிரு சமரகோன் 34, நிபுன் ஹக்கல்ல 25, சச்சித்ர சேனநாயக்க 7/82, கசுன் மதுஷங்க 2/43

SSC (முதல் இன்னிங்ஸ்) – 464/3d (96) – திமுத் கருணாரத்ன 143, கௌஷால் சில்வா 202*, சம்மு அஷான் 66, நிபுன் கருணநாயக்க 2/59

ப்ளூம்பீல்ட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 277/4 (74) – நிபுன் கருணநாயக்க 122, நிசல் பிரான்சிஸ்கோ 61, அதீஷ நாணயக்கார 57*, சச்சித்ர சேனநாயக்க 2/79

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவு


BRC எதிர் NCC

கொழும்பு NCC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் BRC அணி நிர்ணயித்த 103 ஓட்ட வெற்றி இலக்கை எட்டி NCC அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

BRC அணி முதல் இன்னிங்சுக்கா 244 ஓட்டங்களைப் பெற்றதோடு, அஞ்செலோ பெரேராவின் சதத்தின் உதவியோடு NCC அணி முதல் இன்னிங்சில் 322 ஓட்டங்களை பெற்றது. எனினும் BRC அணி தமது இரண்டாவது இன்னிங்சுக்காக 180 ஓட்டங்களுக்கே சுருண்டதால் NCC அணிக்கு இலகுவான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பங்களாதேஷ் தொடருக்கான உத்தேச இலங்கை குழாம் அறிவிப்பு

NCC அணி ப்ரீமியர் லீக் B குழுவில் 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

BRC (முதல் இன்னிங்ஸ்) – 244 (77.4) – டேஷான் டயஸ் 105, ருமேஷ் புத்திக்க 38, சுராஜ் ரந்தீவ் 24, லசித் அம்புல்தெனிய 6/59, லஹிரு குமார 2/34, தரிந்து கௌஷால் 2/64

NCC (முதல் இன்னிங்ஸ்) – 322 (64.1) – அஞ்செலோ பேரேரா 104, லஹிரு உதார 49, தரிந்து கௌஷால் 44, சுராஜ் ரந்தீவ் 3/83, ஹிமேஷ் ராமநாயக்க 2/33

BRC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 180 (56.2) – லிசுல லக்ஷான் 80, ருமேஷ் புத்திக 50, லசித் அம்புல்தெனிய 4/70, லஹிரு குமார 3/27

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 103/5 (23.1) – மஹேல உடவத்த 50, லஹிரு உதார 32, TN சம்பத் 2/39

முடிவு – NCC அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி


தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் இராணுவப்படை கிரிக்கெட் கழகம்

பனாகொடை இராணுவப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இரண்டு அணிகளும் சிறப்பாக துடுப்பெடுத்தாடியதால் இந்த ஆட்டம் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது.   

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்சில் 331 ஓட்டங்களை குவித்ததோடு, அதற்கு ஈடுகொடுத்து சளைக்காமல் ஆடிய தமிழ் யூனியன் மனோஜ் சரத்சந்திரவின் சதத்தின் உதவியோடு 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 435 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் முதல் இன்னிங்சை இடைநிறுத்தியது.

104 ஓட்டங்களால் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இராணுவப்படை கிரிக்கெட் கழகம் கடைசி நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 331 (111.2) – லக்ஷித மதுஷான் 87, கசுன் டி சில்வா 72, ஜனித் சில்வா 54, தமித சில்வா 5/82, ஜீவன் மெண்டிஸ் 3/60  

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 435/9d (114.5) – மனோஜ் சரத்சந்திர 119*, சிதார கிம்ஹான் 96, கித்ருவன் விதானகே 46, தமித சில்வா 44, ரமித் ரம்புக்வெல்ல 30, நுவன் லியனபதிரன 3/75, விராஜ் புஷ்பகுமார 2/61, லக்ஷான் மதுஷங்க 2/121

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 170/5 (45) – நவோத் இலுக்வத்த 69, சன்ஜிக்க ரித்ம 29*, லக்ஷான் எதிரிசிங்க 23, ஜீவன் மெண்டிஸ் 2/41, தமித சில்வா 2/47

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவு


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

ராகம கிரிக்கெட் கழகம் நிர்ணயித்த 257 ஓட்ட வெற்றி இலக்கை நெருங்கிய நிலையில் ஆட்ட நேரம் முடிவுற்றதால் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டது.

விமானப்படை அணிக்கெதிராக இலகு வெற்றியினை சுவீகரித்த லங்கன் கிரிக்கெட் கழகம்

கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் கடைசி நாளான இன்று வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த சரசென்ஸ் அணி 5 விக்கெட்டுகள் கைவசம் இருக்க வெற்றி பெற மேலும் 35 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க வேண்டிய நிலையில் ஆட்டநேரம் முடிவுற்றது. சரசென்ஸ் அணிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ருவின்து குணசேகர 70 ஓட்டங்களைக் குவித்தார்.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 266 (77.4) – ஜனித் லியனகே 130, லஹிரு திரிமான்ன 80, மொஹமட் டில்ஷாட் 5/75, சாலிய சமன் 2/56

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 221 (63.4) – ஹர்ஷ குரே 52, பிரமோத் மதுவந்த 44, அன்டி சொலமன்ஸ் 36, சஹான் நாணயக்கார 5/51, அமில பொன்சோ 3/51

ராகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 211/8d (63.1) – உதார ஜயசுந்தர 97, இஷான் ஜயரத்ன 34, ரொஷான் ஜயதிஸ்ஸ 3/64, சாலிய சமன் 2/37

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 222/5 (30) – ருவிந்து குணசேகர 70, மின்ஹாஜ் ஜலீல் 51, சாலிய சமன் 36*, அண்டி சொலமன்ஸ் 30

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவு