ஜப்பானிடம் தோல்வியுற்ற இலங்கை ஹொக்கி அணி

32

ஆசிய விளையாட்டு விழாவில் பங்குகொள்ளும் இலங்கை ஹொக்கி அணி, தனது முதலாவது குழு மட்ட போட்டிகளில் ஜப்பான் அணியுடன் பலப் பரீட்சை நடாத்தியதுடன், அதில் 11-0 என்ற கோல்கள் அடிப்படையில் தோல்வியை தழுவியது.

உலக ஹொக்கி தரவரிசையில் 16 ஆவது இடத்தில் மற்றும் ஆசிய தரவரிசையில் 5 ஆவது இடத்தில் இருக்கும் ஜப்பான் அணியுடன், ஆசியாவில் 9 ஆவது இடத்தை பிடித்துள்ள இலங்கை அணி களத்தில் சற்று தடுமாறியது.

இலங்கை மகளிர் கபடி அணிக்கு அடுத்தடுத்த வெற்றிகள்

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் மிகவும் கோலகலமாக நடைபெற்று வருகின்ற 18 ஆவது ஆசிய விளை…

முதலாம் கால்

ஆதிக்கம் செலுத்திய ஜப்பான் அணியானது, 2 ஆவது நிமிடத்தில் ஹிரோடகா செண்டாநா மூலமாக தனது முதலாவது கோலை அடித்தது.தொடர்ந்து 9 ஆவது நிமிடத்தில் கெண்டா 2 ஆவது கோலை அடிக்க ,ஜப்பான் அணி குறுகிய இடைவேளையில், 10 ஆம், 13 ஆம், 14 ஆம் நிமிடங்களில் மேலும் 3 கோல்கள் அடித்து அசத்தியது.

இரண்டாம் கால்

இரண்டாம் காலிலும் ஜப்பான் அணி ஆதிக்கம் செலுத்திய பொழுதும்,சிறப்பாக தடுப்பாட்டத்தை வெளிக்காட்டிய இலங்கை அணி, இவ் காலில் வெறும் இரண்டு கோல்களையே விட்டுக்கொடுத்தது. 18 ஆம் நிமிடத்தில் கெண்டா மற்றும் 27 ஆம் நிமிடத்தில் கோஜி கோல் அடித்தனர். இரண்டாம் கால் முடிவின் பொழுது ஜப்பான் அணி 7-0 என முன்னிலையில் காணப்பட்டது

மூன்றாம் கால்

இரண்டாம் கால் போலவே 3ஆம் காலிலும் சிறந்த தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 2 கோல்களை மட்டுமே விட்டது. சிறப்பாக விளையாடிய கசூமா முராட்டா 32 ஆம் மற்றும் 33 ஆம் நிமிடங்களில் அதிரடி கோல்களை அடித்து, தமது அணியை மேலும் முன்னிலைக்கு அழைத்து சென்றார்.

நான்காம் கால்

இலங்கை அணியினால் ஜப்பான் அணிக்கு எதிராக எந்த ஒரு கோல்களையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இலங்கை அணி முழுப்போட்டியிலும் கோல் அடிப்பதற்கு ஒரே ஒரு முயற்சியை மாத்திரமே செய்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 52 ஆம் நிமிடத்தில் யோஷிகி கிரிஷிடா கோல் அடித்தார். சந்தருவன் சுதுசிங்கவிற்கு நடுவர் பச்சை அட்டை கொடுத்து எச்சரித்தமையை தொடர்ந்து 55ஆம் நிமிடத்தில் கசூமா தனது ஹெட்ரிக் கோல் அடித்து ஜப்பான் அணி 11 கோல்களை அடைவதற்கு உதவினார்.

முழு நேரம்: 11 – 00 இலங்கை

தாய்லாந்து அணியிடம் போராடி தோல்வியை தழுவிய இலங்கை

இந்தோனேசியாவின் ஜகர்த்தா – பலேம்பேங்கில் நடைபெற்று வரும் 18வது ஆசிய விளையாட்டு விழாவில்…

இலங்கை அணி குழு மட்டத்தில் மேலும் 4 போட்டிகளில் பங்குகொள்ளவுள்ளது. 22 ஆம் திகதி கொரியா அணியுடன் மற்றும் 24 ஆம் திகதி ஹொங் கொங் அணி, 26 ஆம் திகதி இந்தோனேசியா அணியுடன் மோதவுள்ளதோடு, ஆசிய ஜாம்பவானான இந்தியாவுடன்  28 ஆம் திகதி மோதவுள்ளது.