மேஜர் பிரீமியர் லீக்கில் ஓட்டக் குவிப்பில் சாதனை படைத்த நிஷான்

SLC Major League Tournament 2022

929

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் ஆறாவது வாரத்துக்கான 12 போட்டிகள் இன்று (25) நிறைவுக்கு வந்தன.

இதில் ராகம கிரிக்கெட் கழகத்தின் 23 வயது இளம் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான நிஷான் மதுஷ்க, இம்முறை மேஜர் பிரீமியர் லீக்கில் 1000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரராக இடம்பிடித்தார். அத்துடன், கடந்த 22 ஆண்டுகளில் முதல்தர உள்ளுர் போட்டித் தொடரொன்றில் 1000 ஓட்டங்களைக் கடந்த 10ஆவது இலங்கை வீரராகவும், குறித்த மைல்கல்லை அதிவேகமாகக் கடந்த முதல் இலங்கையராகவும் இடம்பிடித்தார்.

இம்முறை மேஜர் பிரீமியர் லீக்கில் 9 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர், 1025 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் ஒரு முச்சதம் உட்பட 4 சதங்கள் மற்றும் 3 அரைச் சதங்களும் அடங்கும்.

இதனிடையே, முவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 29 வயது வலதுகை துடுப்பாட்ட வீரரான பபசர வதுகே, முதல்தரப் போட்டியில் 5 ஆயிரம் ஓட்டங்கள் மைல்கல்லை எட்டினார். இதுவரை 83 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 8 சதங்கள் மற்றும் 35 அரைச் சதங்களைக் குவித்துள்ளார்.

இது தவிர, போட்டியின் கடைசி நாளான்று பத்து சதங்கள் குவிக்கப்பட்டன. விமானப்படை விளையாட்டுக் கழகத்தின் உதயவங்க பராக்கிரம (103), ப்ளும்பீல்ட் கழகத்தின் மாதவ வர்ணபுர (123) மற்றும் லஹிரு மதுஷங்க (132), குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்தின் கயான் மனீஷான் (117), பொலிஸ் விளையாட்டுக் கழகத்தின் ஹேஷான் தனுஷ்க (101), களுத்துறை நகர கிரிக்கெட் கழகத்தின் சவன் கன்கானம்கே (139), செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் லொஹான் டி சொய்ஸா (129), நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் ஜீவக சஷிக (139), SSC கழகத்தின் ரொஷேன் சில்வா (103) மற்றும் முவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ரமேஷ் மெண்டிஸ் (119) ஆகியோர் சதங்களைக் குவித்தனர்.

பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 21 வயது இளம் சுழல் பந்துவீச்சாளரான சந்துன் மெண்டிஸ், 6 விக்கெட்டுகளைப் பதிவுசெய்ய, பொலிஸ் விளையாட்டுக் கழகத்தின் நளின் ப்ரியதர்ஷன 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இது இவ்வாறிருக்க, மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் ஆறாவது வாரத்தில் லங்கன் கிரிக்கெட் கழகம், பொலிஸ் விளையாட்டுக் கழகம், கண்டி சுங்க விளையாட்டுக் கழகம், NCC கழகம் மற்றும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் ஆகியன வெற்றிகளைப் பதிவுசெய்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் Ace Capital கிரிக்கெட் கழகம்

இராணுவ விளையாட்டுக் கழகம் – 133 (47.4) – செஹாத சொய்ஸா 39, மஹேஷ் குமார 21, லக்ஷான் ரொட்றிகோ 18, லசித் க்ரூஸ்புள்ளே 3/13, வனுஜ சஹன் 2/23, நிம்சர அத்தரகல்ல 2/33

Ace Capital கிரிக்கெட் கழகம் – 82 (23.3) – ஓசத பெர்னாண்டோ 22, கௌமால் நாணயக்கார 6/33, ஹஷான் சந்தீப 3/30

இராணுவ விளையாட்டுக் கழகம் – 249 (76.4) – ஷெஹான் பெர்னாண்டோ 93, மஹேஷ் குமார 67, துலின டில்ஷான் 47, வனுஜ சஹன் 6/56, லசித் க்ரூஸ்புள்ளே 2/25

Ace Capital கிரிக்கெட் கழகம் – 105 (24.3) – ஓஷத பெர்னாண்டோ 43, ப்ரமோத் மதுவன்த 22, கௌமால் நாணயக்கார 6/39, ஹஷான் சந்தீப 4/54

முடிவு – இராணுவ விளையாட்டுக் கழகம் 195 ஓட்டங்களால் வெற்றி


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 552 (143.3) – விஷ்வ சதுரங்க 172, ரவீன் யசஸ் 117, கசுன் விதுர 113, கௌரவ் ஜாதர் 75, மதுக லியனபத்திரனகே 5/177, ஹஸ்னைன் பொக்ஹரி 2/50

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 374/4 (126) – லஹிரு மதுஷங்க 132*, மாதவ வர்ணபுர 123*, சரித குமாரசிங்க 35, புலின தரங்க 2/75

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 404 (101.4) – மினோத் பானுக 105, கமிந்து மெண்டிஸ் 82, நிமேஷ குணசிங்க 61, லசித் அபேரட்ன 48, அசித வன்னிநாயகே 3/71, சகிந்து விஜேரட்ன 3/115

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் –  244 (77.5) – தமித் பெரேரா 49, தினுஷ்க மாலன் 49, கயான் மனீஷான் 46, அசித பெர்னாண்டோ 3/38, லக்ஷான் சந்தகென் 4/51

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் –  318/6d (86) F/O – கயான் மனீஷன் 117, சனோஜ் தர்ஷிக 54*, தினுஷ்க மாலன் 46*, அசித பெர்னாண்டோ 2/15

முடிவு – போட்டி சமநிலையில் முடிவு


BRC கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

லங்கன் கிரிக்கெட் கழகம் – 457 (121.2) – ப்ரசன்ன ஜயமான்ன 167, தேஷான் டயஸ் 130, துவிந்து திலகரட்ன 5/113, திலகரட்ன சம்பத் 3/70

BRC கழகம் – 81 (23.4) – உமேஷ்க மொராய்ஸ் 22, ரஜீவ வீரசிங்க 6/41, தமித சில்வா 2/22

BRC கழகம் – 290 (61.1) F/O – திலகரட்ன சம்பத் 63, லஹிரு சமரகோன் 54, டிலான் ஜயலத் 35, கீத் குமார 4/61, தமித சில்வா 3/62

முடிவு – லங்கன் கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 86 ஓட்டங்களால் வெற்றி


விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் நுகேகொட விளையாட்டுக் கழகம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 356 (80.2) – மிஷேன் சில்வா 102, ரொஸ்கோ தட்டில் 71, சுபேஷல ஜயதிலக 57, ரனித லியனாரச்சி 3/33, கைசர் அஷ்ரப் 2/59

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 229 (102.4) – கைசர் அஷ்ரப் 70, சுவத் மெண்டிஸ் 58, கயான் சிறிசோம 5/45, மதுஷான் ரவிச்சந்த்ரகுமார 2/35

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 173/4d (33) – உதயவன்ச பராக்ரம 103*, ரொஸ்கோ தட்டில் 63*, கைசர் அஷ்ரப் 3/53

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 101/9 (49) – நயன பெர்னாண்டோ 20, கயான் சிறிசோம 4/37, துலன்ஜன மெண்டிஸ் 2/09

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 342 (93.2) – தனன்ஜய லக்ஷான் 78, ஹஷான் துமிந்து 75, அவிஷ்க பெரேரா 53, துனித் வெல்லாலகே 34, நளின் ப்ரியதர்ஷன 5/125, சுபுன் மதுஷங்க 2/60

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 224 (76.4) – மஞ்சுல ஜயவர்தன 44, துலாஷ் உதயங்க 35, ரன்துனு கங்கனாத் 32, துனித் வெல்லாலகே 6/86, ருவின் செனவிரட்ன 2/34

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 145/7d (43) – ஹஷான் துமிந்து 72, விஷாட் ரன்திக 35, அவிஷ்க பெரேரா 21, நளின் ப்ரிதயதர்ஷன 5/66

பொலிஸ் விளையாட்டுக் கழகம – 265/4 (49.2) – ஹேஷான் தனுஷ்க 101*, மதுரங்க சொய்ஸா 55, சுபுன் மதுஷ்க 37*

முடிவு – பொலிஸ் விளையாட்டுக் கழகம் 6 விக்கெட்டுகளால் வெற்றி


கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 321 (87.3) – விஷ்வ விஜேரட்ன 102*, இமேஷ் உதயங்க 67, இரோஷ் சமரசூரிய 39, ஜனித் லியனகே 3/54, ஹரீன் ரத்னமுதலி 2/39

ராகம கிரிக்கெட் கழகம் – 92 (35) – நிஷான் மதுஷ்க 30, இமேஷ் உதயங்க 4/36, மெதுஷான் திலின 3/10, சஹன் அதீஷ 2/26

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 131 (47) – ரஷ்மிக மதுஷங்க 40, இரோஷ் சமரசூரிய 27, எஷான் மாலிங்க 3/19, சஷிக துல்ஷான் 3/59

ராகம கிரிக்கெட் கழகம் – 293 (92) – தினெத் திமோத்ய 80, நிஷான் மதுஷ்க 70, துலாஜ் பண்டார 31, சஹன் அதீஷ 3/50, இமேஷ் உதயங்க 3/89

முடிவு – கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் 67 ஓட்டங்களால் வெற்றி


கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் NCC கழகம்

கடற்படை விளையாட்டுக் கழகம் – 129 (54.2) – சுபுன் லீலாரத்ன 45, வினோத் பெரேரா 20, சஹன் ஆரச்சிகே 3/26, லசித் எம்புல்தெனிய 3/45, அஷைன் டேனியல் 2/14

NCC கழகம் – 296 (80.4) – வினுக ரூபசிங்க 70, சஹன் ஆரச்சிகே 67, அசேல் சிகேரா 47, அசன்த சிங்கப்புலி 3/49, மதுர மதுஷங்க 3/57

கடற்படை விளையாட்டுக் கழகம் – 272 (78) – ரஷ்மிக மெவான் 56, அதீஷ நாணயக்கார 53, கவிந்து ரணசிங்க 41, அஷைன் டேனியல் 3/87, அசேல் சிகேரா 2/21, சஹன் ஆரச்சிகே 2/43

NCC கழகம் – 108/0 (15.2) – லஹிரு உதார 53*, கெவின் பண்டார 53*

முடிவு – NCC கழகம் 10 விக்கெட்டுகளால் வெற்றி


சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 340 (126.1) – மிலிந்த சிறிவர்தன 107, சிதார கிம்ஹான் 82*, நவிந்து விதானகே 34, துஷான் விமுக்தி 20, அனுக் பெர்னாண்டோ 3/41, லஹிரு கமகே 3/67

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 372/9d (118) – சாஹிட் மன்சூர் 100, அனுக் பெர்னாண்டோ 86, அலங்கார அசங்க சில்வா 73, கிஹான் ரூபசிங்க 53*, சந்துன் மெண்டிஸ் 6/124, துஷான் விமுக்தி 2/126

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 80/2d (19) – நிபுன் கருணாநாயக 35*, சிதார கிம்ஹான் 23

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


களுத்துறை நகர கழகம் எதிர் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம்

களுத்துறை நகர கழகம் – 210 (63.2) – சுகித மனோஜ் 49, தினெத் முனசிங்க 30, சவன் கங்கானம்கே 28, தரிந்து ரத்நாயக 6/78

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 173 (52.3) – விமுத் சப்னக 33, லொஹான் டி சொய்ஸா 28, தரிந்து சிறிவர்தன 4/23, இஷான் அபேசேகர 4/36, தேமால் பண்டார 2/58

களுத்துறை நகர கழகம் – 400/7d (96.4) – சவன் கங்கானம்கே 139, சதுர பீரிஸ் 65*, நிபுன் கமகே 62, யொஹான் மெண்டிஸ் 48, சாமிக எதிரிசிங்க 3/109

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 271/8 (63) – லொஹான் டி சொய்ஸா 129, சச்சித ஜயதிலக 53*, இஷான் அபேசேகர 3/111, தரிந்து சிறிவர்தன 2/26, தேமால் பண்டார 2/60

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


முவர்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் SSC கழகம்

முவர்ஸ் கிரிக்கெட் கழகம் – 355 (96.2) – பசிந்து சூரியபண்டார 123, சொஹான் டி லிவேரா 70, கவிந்து குலசேகர 39, பபசர வதுகே 38, பிரபாத் ஜயசூரிய 5/93, நிசல தாரக 4/76

SCC கழகம் – 273 (100.2) – ரொஷேன் சில்வா 103, நிபுன் தனன்ஜய 37, க்ரிஷான் சன்ஜுல 35, தீசன் விதுஷன் 6/109, திலங்க உதேஷன 2/36

முவர்ஸ் கிரிக்கெட் கழகம் – 301/7d (67.5) – ரமேஷ் மெண்டிஸ் 119*, பசிந்து சூரியபண்டார 79, பபசர வதுகே 56, பிரபாத் ஜயசூரிய 3/110, ஹிமேஷ் ராமநாயக 2/57

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு


தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 375 (99) – ரவிந்து பெர்னாண்டோ 105, ரொன் சந்திரகுப்த 70, திலும் சுதீர 55, நவோத் பரணவிதான 46, கமேஷ் நிர்மால் 40, உபுல் இந்திரசிறி 5/109, சனுர பெர்னாண்டோ 2/92

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 147 (38.4) – கெவின் அல்மேதா 51, ஜடின் சக்ஷேனா 34, அஞ்சலோ ஜயசிங்க 29, ரவிந்து பெர்னாண்டோ 3/28, திலும் சுதீர 3/36, ஷிரான் பெர்னாண்டோ 2/35

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 361 (105) F/O – ஜீவக சஷின் 130, திமுத் சந்தருவன் 76, பசிந்து லக்ஷங்க 35, திலும் சுதீர 5/123, ரவீன் டி சில்வா 2/43

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 136/5 (21.1) – நவோத் பரணவிதான 36, கவிந்து பதிரன 25*

முடிவு – தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<