அஷானின் சகலதுறை ஆட்டத்தால் கொழும்பு அணிக்கு மூன்றாவது வெற்றி

SLC Major League Tournament 2022

69

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் ஏழாவது வாரத்துக்கான 12 போட்டிகளின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று (02) நிறைவுக்கு வந்தன.

BRC கழகத்துக்கு எதிரான போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகம் 9 விக்கெட்டுகளால் அபார வெற்றியீட்டியது. இதில் கொழும்பு அணிக்காக பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட அதன் தலைவர் அஷான் ப்ரியன்ஜன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். அத்துடன், துடுப்பாட்டத்திலும் அந்த அணிக்கு வலுச்சேர்த்த அஷான், இரண்டாவது இன்னிங்ஸில் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.

மேலும், இந்த வெற்றியின் மூலம் இம்முறை மேஜர் பிரீமியர் லீக்கில் குழு A இல் கொழும்பு கிரிக்கெட் கழகம் முதலிடத்தைப் பிடித்தது.

பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் கடற்படை விளையாட்டுக் கழகத்தின் ஹஸ்னைன் பொக்ஹாரி (5/38), ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகத்தின் திலீப ஜயலத் (5/51), செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகத்தின் தரிந்து ரத்நாயக (8/138) ஆகியோர் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தனர்.

இதேவேளை, மேஜர் பிரீமியர் லீக் தொடரின் ஏழாவது வாரத்துக்கான போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம், கொழும்பு கிரிக்கெட் கழகம், பாணந்துறை விளையாட்டுக் கழகம், ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் மற்றும் Ace Capital கிரிக்கெட் கழகம் என்பன வெற்றிகளைப் பதிவு செய்தன.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

NCC கழகம் – 475 (119.3) – அஹான் விக்ரமசிங்க 234*, அம்ஷி டி சில்வா 104, சஹன் ஆரச்சிகே 61, லஹிரு உதார 28, துஷான் விமுக்தி 4/176, மொஹமட் டில்ஷாத் 4/92

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 218 (59.4) – நவிந்து விதானகே 44, ப்ரமோத் மதுவன்த 35, சஹன் ஆரச்சிகே 4/34, நிபுன் ரன்சிக 2/38

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 229/7 (79) F/O – ப்ரமோத் மதுவன்த 74*, நிபுன் கருணாநாயக 54, லசித் எம்புல்தெனிய 4/87, அஷைன் டேனியல் 3/25

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

SSC கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

SSC கழகம் – 387 (104.2) – நுவனிது பெர்னாண்டோ 148, லக்ஷித மானசிங்க 55, பிரபாத் ஜயசூரிய 41, சம்மு அஷான் 38, ரொஷேன் சில்வா 34, சஷிக துல்ஷான் 6/135, நிபுன் மாலிங்க 3/63

ராகம கிரிக்கெட் கழகம் – 140 (42.4) – கல்ஹார சேனாரட்ன 35*, நிபுன் மாலிங்க 26, பிரபாத் ஜயசூரிய 7/59

ராகம கிரிக்கெட் கழகம் – 285/7 (95) F/O – அவிஷ்க தரிந்து 81, சமிந்த பெர்னாண்டோ 62, நிபுன் மாலிங்க 34*, யொஹான் லியனகே 31, பிரபாத் ஜயசூரிய 4/114, நிம்னக ஜயதிலக 3/66

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 297 (92.1) – சச்சித ஜயதிலக 52, லொஹான் டி சொய்ஸா 44, சுச்சிர பரணதால 43, ரகு சர்மா 6/88, சந்துன் மதுஷங்க 3/70

காலி கிரிக்கெட் கழகம் – 284 (93.1) – சலித் பெர்னாண்டோ 79, வினுர துல்சர 56, சமீன் கன்தனேஆரச்சி 54, யசோத லங்கா 25, தரிந்து ரத்நாயக 8/138

காலி கிரிக்கெட் கழகம் – 25/0 (3)

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

Ace Capital கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

Ace Capital கிரிக்கெட் கழகம் – 312 (69.2) – லசித் க்ரூஸ்புள்ளே 62, நினாத் காதம் 56, பர்மோத் ஹெட்டிவத்த 49, ஓஷத பெர்னாண்டோ 48, கயான் சிறிசோம 5/56, லசந்த ருக்மால் 2/61

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 80 (31.3) F/O – மொஹமட் இர்பான் 5/43

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 210 (54.1) – மிஷேன் சில்வா 45, மொவின் சுபசிங்க 44, கசுன் ஏகநாயக 39, வனுஜ சஹன் 7/59

முடிவு – Ace Capital கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 22 ஓட்டங்களால் வெற்றி

இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

இராணுவ விளையாட்டுக் கழகம் – 215 (80.2) – லக்ஷான் எதிரிசிங்க 51, கிஹான் கோரளகே 50*, சுமிந்த லக்ஷான் 42, ஷெஹான் பெர்னாண்டோ 24, சனுர பெர்னாண்டோ 3/68, பசிந்து மதுஷான் 2/30

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 284/9d (60) – திமுத் சந்தருவன் 63, ஜடின் சக்ஷேனா 53, அஷேன் சில்வா 46, கெவின் அல்மேதா 42, சுமிந்த லக்ஷான் 3/43, அசங்க மனோஜ் 2/47

இராணுவ விளையாட்டுக் கழகம் – 19/0 (5)

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

BRC கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

BRC கழகம் – 153 (44.2) – லஹிரு சமரகோன் 37, தனால் ஹேமானந்த 25, அஷான் ப்ரியன்ஜன் 8/51, லக்ஷான் சந்தகன் 1/32

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 210 (60.1) – லசித் அபேரட்ன 56, பவன் ரத்நாயக 35, அஷான் ப்ரியன்ஜன் 34, துஷான் ஹேமன்த 4/76, துவிந்து திலகரட்ன 3/49

BRC கழகம் – 258 (69.3) – டிலான் ஜயலத் 93, லஹிரு சமரகோன் 57, தனால் ஹேமன்த 38, அஷான் ப்ரியன்ஜன் 5/101, லக்ஷான் சந்தகன் 4/93

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 202/1 (34.2) – நிமேஷ குணசிங்க 86*, அஷான் ப்ரியன்ஜன் 55, மினோத் பானுக 52*

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 9 விக்கெட்டுகளால் வெற்றி

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம்

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 407 (123.1) – சமீர சந்தமால் 118, தமித் பெரேரா 92, கயான் மனீஷான் 48, சச்சித்ர பெரேரா 4/90, சம்பத் பெரேரா 2/60

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 314 (114.2) – ரஷ்மிக மதுஷங்க 91, இரோஷ் சமரசூரிய 74, இமேஷ் உதயங்க 61, நவீன் குணவர்தன 4/73, தினுக மாலன் 2/39

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 36/1 (9)

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் நுகேகொட விளையாட்டுக் கழகம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 392 (85.1) – ரமிந்த விஜேசூரிய 125, கோஷான் தனுஷ்க 78, நிமேஷ் விமுக்தி 65, தரிந்து கௌஷால் 31, சஹன் நாணயக்கார 4/84, கைசர் அஷ்ரப் 3/98

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 75 (29.5) – முர்தசா ட்ரன்க்வாலா 23, நிமேஷ் விமுக்தி 7/43, கோஷான் தனுஷ்க 2/13

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 289 (57.1) F/O – அபிஷேக் லியனாரச்சி 89, முர்தசா ட்ரன்க்வாலா 55, சுவத் மெண்டிஸ் 50*, இவன்க சன்ஜுல 4/62, நிமேஷ் விமுக்தி 4/98

முடிவு – பாணந்துறை விளையாட்டுக் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 28 ஓட்டங்களால் வெற்றி

களுத்துறை நகர கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

களுத்துறை நகர கழகம் – 269 (93) – சுகித மனோஜ் 60, யெசித் ரூபசிங்க 42, நிபுன் கமகே 23, நுவன் பிரதீப் 3/67, சதுர ரன்துனு 2/26

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 206/5 (61) – நதீர பாலசூரிய 91, சதுரங்க குமார 46, துலாஷ் உதயங்க 28

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 126 (38.5) – பசிந்து சூரியபண்டார 46, அதீஷ திலன்சன 19, துனித் வெல்லாலகே 4/32, ஜெஹான் டேனியல் 3/33,

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 468/9d (104.2) – சங்கீத் குரே 145, ப்ரியமால் பெரேரா 81, துனித் வெல்லாலகே 78*, விஷாத் ரன்திக 54, ரமேஷ் மெண்டிஸ் 3/137, திலங்க உதேஷன 2/72, மிலான் ரத்நாயக 2/106

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 334/5 (101) – ஜனிஷ்க பெரேரா 135*, கவிந்து குலசேகர 80, ரமேஷ் மெண்டிஸ் 42, பபசர வதுகே 23, மொஹமட் சமாஸ் 22*, தனன்ஜய லக்ஷான் 2/35, அகில தனன்ஜய 2/129

முடிவு – போட்டி சமநிலையில் நிறைவு

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 191 (58.1) – விஷ்வ சதுரங்க 58, தசுன் செனவிரட்ன 28, கசுன் விதுர 24, திலும் சுதீர 6/71, ரவிந்து பெர்னாண்டோ 3/76

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 155 (36.3) – கமேஷ் நிர்மால் 61*, நவோத் பரணவிதான 24, ரவிந்து பெர்னாண்டோ 20, லசித் லக்ஷான் 6/57, ஸ்வப்னில் கூகலே 3/55

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 317 (92.1) – கௌரவ் ஜாதர் 81, புலின தரங்க 62, லசித் லக்ஷான் 49, விஷ்வ சதுரங்க 25, ரவிந்து பெர்னாண்டோ 4/38, திலும் சுதீர 3/116, ரவீன் டி சில்வா 2/33

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 150 (43.1) – ரொன் சந்த்ரகுப்த 37, திலும் சுதீர 23, லசித் லக்ஷான் 5/66, ஸ்வப்னில் கூகளே 3/70, புலின தரங்க 2/14

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 203 ஓட்டங்களால் வெற்றி

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 342 (98.1) – ஹஸ்னைன் பொக்ஹாரி 117, லஹிரு மதுஷங்க 71, யொஹான் டி சில்வா 61, நவின் கவிகார 7/84, அசன்த சிங்கப்புலி 2/75

கடற்படை விளையாட்டுக் கழகம் – 185 (54) – வினோத் பெரேரா 41*, அதீஷ நாணயக்கார 32, ரஷ்மிக மேவன் 30, சஹன் கோசல 27, திலீப ஜயலத் 5/51, சானக கோமசாரு 2/63

கடற்படை விளையாட்டுக் கழகம் – 157 (49.5) F/O – கவிந்து ரணசிங்க 35, சுபுன் லீலாரட்ன 35, சஹன் கோசல 23, ஹஸ்னைன் பொக்ஹாரி 5/38, சானக கோமசாரு 3/54

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 1/0 (0.1)

முடிவு – ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் 10 விக்கெட்டுகளால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<