தமிழ் யூனியன் கழகத்துக்காக பந்துவீச்சில் அசத்திய வியாஸ்காந்த்

SLC Major Clubs T20 Tournament 2023

2014

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு பிரதான கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற மேஜர் லீக் T20 தொடரில் இன்று (07) நான்கு போட்டிகளில் நடைபெற்றன.

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகமும், பதுரெலிய கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் SSC கழகமும், ராகம கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் நுகேகொட விளையாட்டுக் கழகமும், தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் Ace Capital கிரிக்கெட் கழகமும் வெற்றிகளைப் பதிவு செய்தன.

இந்த நிலையில், SSC கழகத்துக்கு எதிரான போட்டியில் பதுரெலிய கிரிக்கெட் கழகத்தின் ரனேஷ் சில்வாவும், நுகேகொட விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் ராகம கிரிக்கெட் கழகத்தின் பினுர பெர்னாண்டோவும், தமிழ் யூனியன் கழகத்துக்கு எதிரான போட்டியில் Ace Capital கிரிக்கெட் கழகத்தின் தனுக தாபரேவும் அரைச் சதங்களைக் குவித்து அசத்தியிருந்தனர்.

பந்துவீச்சை பொறுத்தமட்டில் செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் அகில தனன்ஜய 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரள வைத்தார்.

அதேபோல, Ace Capital கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தின் விஜயகாந்த் வியாஸ்காந்த் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதனிடையே, லீக் போட்டிகள் அனைத்தும் இன்று நிறைவடைந்த நிலையில், அரை இறுதிப் போட்டிகள் எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் முதலாவது அரை இறுதியில் என்சிசி எதிர் முவர்ஸ் விளையாட்டுக் கழகமும், 2ஆவது அரை இறுதியில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் Ace Capital கிரிக்கெட் கழகமும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

போட்டியின் சுருக்கம்

SSC எதிர்பதுரெலியகிரிக்கெட்கழகம்

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 175/5 (20) – ரனேஷ் சில்வா 93*, ரொஹான் சன்ஜய 28, யெசித் ரூபசிங்க 21, கவிந்து நதீஷான் 2/32, ஷெஹான் ஹஸரங்க 1/16

SSC கழகம் – 150/8 (16.5) – ரனுது சோமரத்ன 35, ஷெவோன் டெனியல் 30, அவிஷ்க பெர்னாண்டோ 30, அனுக் பெர்னாண்டோ 3/22

முடிவு – SSC கழகம் டக்வர்த் லூயிஸ் முறைப்படி 2 விக்கெட்டுகளால் வெற்றி 

ராகமகிரிக்கெட்கழகம்எதிர்நுகேகொடவிளையாட்டுக்கழகம்

ராகம கிரிக்கெட் கழகம் – 133 (20) – பினுர பெர்னாண்டோ 54, சன்ஜய சதுரங்க 33, சலன டி சில்வா 3/16, ராகுல் குணசேகர 2/36

நுகேகொட விளையாட்டுக் கழகம் – 137/5 (19.2) – தரிந்து கௌஷால் 35, ராகுல் குணசேகர 24, பெதும் டில்ஷான் 23, சஷிக துல்ஷான் 2/28

முடிவு – நுகெகொட விளையாட்டுக் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி 

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் ஏஸ் கெபிடல் கிரிக்கெட் கழகம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 163/8 (20) – லசித் அபேரட்ன 30, சலிந்து பத்திரன 29, ரவிந்து பெர்னாண்டோ 27, வனுஜ சஹன் குமார 2/18, ரொஷான் ஜயதிஸ்ஸ 2/40

Ace Capital கிரிக்கெட் கழகம் – 125/7 (14.3) – தனுக தாபரே 59, சிதார கிம்ஹான 30, விஜயகாந்த் வியாஸ்காந்த் 3/13, கவிந்து பத்திரத்ன 2/16

முடிவு – Ace Capital கிரிக்கெட் கழகம் டக்வர்த் லூயிஸ் முறைப்படி 3 விக்கெட்டுகளால் வெற்றி 

செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம் – 142/9 (20) – லொஹான் டி சொய்ஸா 35, அபிஷேக் லியனாரச்சி 23, அகில தனன்ஜய 4/30, மல்க மதுஷங்க 2/8

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 117/9 (19.5) – ஷெரான் பொன்சேகா 45, முதித லக்ஷான் 31, சாமிகர எதிரிசிங்க 2/22, சஷ்ரீக புஸ்ஸேகொல்ல 2/23

முடிவு – செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம் 27 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<