செரசன்ஸ் அணிக்காக சகலதுறைகளிலும் அசத்திய மிலிந்த சிறிவர்தன

85

இலங்கை கிரிக்கெட் சபை உள்ளூர் கிரிக்கெட் அணிகள் இடையில் நடாத்தும் அழைப்பு T20 தொடரின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (6) நிறைவுக்கு வந்தது. 

இன்றைய நாளில் 12 போட்டிகள் நடைபெற்றதோடு, இன்றைய போட்டிகளில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்களும், இளம் வீர்ரகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். 

நியூசிலாந்தை 3-0 என வைட்வொஷ் செய்த அவுஸ்திரேலியா!

சுற்றுலா நியூசிலாந்துக்கு எதிராக சிட்னி……….

இதில் செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்காக ஆடியிருந்த மிலிந்த சிறிவர்தன சகலதுறைகளிலும் பிரகாசித்திருந்தார். மிலிந்த சிறிவர்தன செரசன்ஸ் அணிக்காக 72 ஓட்டங்கள் பெற்றதோடு, 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. மிலிந்த சிறிவர்தனவின் சிறப்பான ஆட்டத்தோடு செரசன்ஸ் அணி பொலிஸ் விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் 69 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது. 

அதேநேரம், இந்த கிரிக்கெட் தொடரின் முதல் நாளில் சதம் பெற்ற ஷெஹான் ஜயசூரிய சிலாபம் மேரியன்ஸ் அணிக்காக அரைச்சதம் (54) பெற்று தொடர்ச்சியாக தனது திறமையினை வெளிப்படுத்தியிருந்தார். இதேவேளை, சிலாபம் மேரியன்ஸ் அணியினைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான திக்ஷில டி சில்வா 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தனது அணி விமானப்படைக்கு எதிராக 34 ஓட்டங்களால் வெற்றி பெறுவதற்கு உதவியிருந்தார். 

இவர்கள் தவிர வளர்ந்துவரும் இளம் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான அகீல் இன்ஹாம் மற்றும் நிஷான் மதுஷ்க ஆகியோரும் அரைச்சதங்கள் பெற்று ஜொலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் நாள் போட்டிகளின் சுருக்கம்

குழு A

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

இடம் – BRC மைதானம்

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் -149/7 (20) – நிபுன கமகே 41, மிஷேன் சில்வா 32*, சத்துர லக்‌ஷான் 2/44

காலி கிரிக்கெட் கழகம் – 147 (20) –  ரவிஷ்க விஜயசிறி 33, கயான் சிறிசோம 3/23

முடிவு – புளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் 2 ஓட்டங்களால் வெற்றி

Photos: Galle CC vs Bloomfield C & AC | SLC Invitation T20 Tournament 2019/20


கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

இடம் – டிசொய்ஸா மைதானம், மொரட்டுவ

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 127/8 (20) – பிரியமல் பெரேரா 30, ஷெஹான் மதுசங்க 2/23

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 122/6 (20) – லஹிரு மிலன்த 39, லஹிரு சமரக்கோன் 26, பிரபாத் ஜயசூரிய 2/15, நிசால தாரக 2/23

முடிவு – கோல்ட்ஸ் கழகம் 5 ஓட்டங்களால் வெற்றி


சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் யுனிச்செலா விளையாட்டுக் கழகம்

இடம் – BRC மைதானம்

சோனகர் விளையாட்டுக் கழகம் – 154 (19.5) – அயன சிறிவர்தன 35, இஷார அமரசிங்க 3/30, தனுஷ்க மதுஷங்க 2/19

யுனிச்செலா விளையாட்டுக் கழகம் – 63 (18.5) – கவிஷ்க அஞ்சுல 3/14, ரமேஷ் மெண்டிஸ் 3/19

முடிவு – சோனகர் விளையாட்டுக் கழகம் 91 ஓட்டங்களால் வெற்றி 

குழு B

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் SSC

இடம் – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 121 (18.3) – கமேஷ் நிர்மால் 39, சுரங்க லக்மால் 33, தரிந்து ரத்னாயக்க 2/14, சச்சித்ர சேனநாயக்க 2/22, தம்மிக்க பிரசாத் 2/29

SSC – 124/2 (16.3) – கிரிஷான் சஞ்சுல 51*, ஆகாஷ் சேனாரத்ன 37, தரிந்து ரத்னாயக்க 20

முடிவு – SSC அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி

Photos: Tamil Union C & AC Vs SSC | SLC Invitation T20 Tournament 2019/20


செரசன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

இடம் – கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 192/5 (20) – மிலிந்த சிறிவர்தன 72, ரனித லியனராச்சி 41, நிஸார் அஹ்மட் 2/53

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 123 (18.2) – லக்ஷான் ரொட்ரிகோ 26, சாலிய சமன் 4/21, மொஹமட் டில்ஷாட் 2/16, மிலிந்த சிறிவர்தன 2/24

முடிவு – செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 69 ஓட்டங்களால் வெற்றி

SLCயிடம் மிகப்பெரிய நஷ்டயீட்டுத் தொகையை கோரும் ஹதுருசிங்க

பதவி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை…………..

கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் NCC

இடம் – டி சொய்ஸா சர்வதேச மைதானம், மொரட்டுவ

கடற்படை விளையாட்டுக் கழகம் – 88 (19.2) – சமித ரங்க 25, சச்சிந்து கொலம்பகே 3/24, சத்துரங்க டி சில்வா 2/06

NCC – 91/7 (16.4) – மஹேல உடவத்த 31, அஞ்செலோ பெரேரா 24*, டிலங்க அவ்வார்ட் 2/17, சுதார தக்ஷீன 2/17

முடிவு – NCC 3 விக்கெட்டுக்களால் வெற்றி  

குழு C

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்

இடம் – பி. சரவணமுத்து மைதானம் கொழும்பு

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் – 149 (20) –  அஷான் ரன்திக்க 57, நவீன் கவிகார 4/16

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் – 96 (16.1) – அரவிந்த அகுரெகொட 45, துஷான் விமுக்தி 3/29, ஹன்ஷ ப்ரமோத் 3/31

முடிவு – இராணுவப்படை கிரிக்கெட் கழகம் 53 ஓட்டங்களால் வெற்றி


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

இடம் – பி.சரவணமுத்து மைதானம், கொழும்பு

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 191/8 (20) – ஷெஹான் ஜயசூரிய 54, கமிந்து மெண்டிஸ் 42, சஞ்சய ரனவீர 3/35

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 157/8 (20) – உதயவன்ஷ பராக்ரம 47, திக்ஷில டி சில்வா 5/30, நிமேஷ் விமுக்தி 2/29

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் அணி 34 ஓட்டங்களால் வெற்றி


களுத்துறை நகர கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

இடம் – மேரியன்ஸ் கிரிக்கெட் கழக மைதானம், கட்டுநாயக்க

களுத்துறை நகர கழகம் – 103 (17.4) – அனுஷ்க பெரேரா 38, உபுல் இந்திரசிறி 3/19, ரொஷேன் பெர்னாந்து 3/27

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 106/2 (15.2) – மாதவ வர்ணபுர 44*, டில்ஷான் முனவீர 30

முடிவு – நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 8 விக்கெட்டுக்களால் வெற்றி

குழு D

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம்

இடம் – CCC மைதானம்

லங்கன் கிரிக்கெட் கழகம் – 120 (19.5) – சானக ருவன்சிரி 28, சுபுன் கவிந்த 3/15, ஹர்ஷான் விமர்ஷன 3/29

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் – 109/8 (20) – கயான் மனீஷன் 56*, உதித் மதுஷன் 3/27

முடிவு – லங்கன் கிரிக்கெட் கழகம் 11 ஓட்டங்களால் வெற்றி

Photos: Lankan CC vs SLPA SC | SLC Invitation T20 Tournament 2019/20

U19 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

தென்னாபிரிக்காவில் இம்மாதம் 17ம்………….

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் நுகேகொட கிரிக்கெட் கழகம்

இடம் – மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 132/7 (20) – லசித் அபேரத்ன 34, லஹிரு மதுசங்க 34, நிமன்த குணசிரி 3/37

நுகேகொட கிரிக்கெட் கழகம் – 121/9 (20) – இரோஷ் சமரசூரிய 21, மலிந்த புஷ்பகுமார 3/28

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 11 ஓட்டங்களால் வெற்றி


கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் எதிர் றாகம கிரிக்கெட் கழகம்

இடம் – CCC மைதானம்

Photos: Ragama CC vs Kandy Customs CC | SLC Invitation T20 Tournament 2019/20

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 108/7 (20)  – அகீல் இன்ஹாம் 58, இஷான் ஜயரத்ன 4/10

றாகம கிரிக்கெட் கழகம் – 112/3 (19.5) – நிஷான் மதுஷ்க 62*, லஹிரு திரிமான்ன 30

முடிவு – றாகம கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<