இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் மாவட்ட அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரின் 5 போட்டிகள் இன்று நிறைவடைந்துள்ளன.
காலி எதிர் ஹம்பாந்தோட்டை
மக்கோன சர்ரே மைதானத்தில் நடைபெற்றிருந்த இப்போட்டியில் 218 ஓட்டங்களால் காலி மாவட்டம் வெற்றிபெற்று ஹம்பாந்தோட்டை மாவட்ட அணிக்கு அதிர்ச்சி அளித்தது.
இப்போட்டியில் காலி அணிக்காக 133 பந்துகளினை எதிர்கொண்டு 17 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 139 ஓட்டங்களை விளாசிய தில்ஹான் கூரே குவித்திருந்ததோடு, எரங்க ரத்நாயக்க ஆட்டமிழப்பின்றி 84 ஓட்டங்களை விளாசியிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
காலி மாவட்டம் – 354/5 (50) – தில்ஹான் கூரே 139, எரங்க ரத்னாயக்க 84*, ஷாலிக கருணாநாயக்க 43, ஷெஹான் ஹெட்டியராச்சி 2/43, செனால் டி சில்வா 2/54
ஹம்பாந்தோட்டை மாவட்டம் – 136 (32.1) – துலிப் கயான் 34, செனால் டி சில்வா 25, ஷாலிக கருணாநாயக்க 3/28, ருவான் ஹேரத் 2/21
போட்டி முடிவு – காலி மாவட்டம் 218 ஓட்டங்களால் வெற்றி
அனுராதபுரம் எதிர் பொலன்னறுவை
வெலிசரை கடற்படை மைதானத்தில் நடைபெற்றிருந்த இப்போட்டியில், அனுராதபுர அணித்தலைவர் நிப்புன் கருணாநாயக்கவின் சிறப்பான சகல துறை ஆட்டத்தினாலும், அதீஷ நாணயக்காரவின் பெறுமதி வாய்ந்த அரைச்சதத்தினாலும் பொலன்னறுவை மாவட்ட அணியை அனுராதபுர மாவட்டம் வீழ்த்தியது.
போட்டியின் சுருக்கம்
அனுராதபுர மாவட்டம் – 249 (49.5) – நிப்புன் கருணாநாயக்க 43, அதீஷ நாணயக்கார 51, சந்துன் ரனதுங்க 33, சச்சின் ஜயவர்தன 38, திரான் தனபால 16, யொஹான் டி சில்வா 3/19, மங்கள குமார 3/39, ஹசித்த நிர்மல் 2/43
பொலன்னறுவை மாவட்டம் – 110 (34.4) – சங்க விமர்ஷ 24, யொஹான் டி சில்வா 29*, மங்கல குமார 12, சச்சின் ஜயவர்தன 3/24, நிப்புன் கருணாநாயக்க 3/19
போட்டி முடிவு – அனுராதபுர மாவட்டம் 139 ஓட்டங்களால் வெற்றி
இரத்தினபுரி எதிர் மொனராகலை
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சிக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய ரஜீவ வீரசிங்க தலைமையிலான இரத்தினபுரி மாவட்ட அணி 151 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றது. இதில் பந்து வீச்சில் சிறப்பித்திருந்த இடது கை சுழல் பந்துவீச்சாளர் சமிகர எதிரிசிங்க அதி சிறப்பாக செயற்பட்டு 42 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுகளை சுருட்டி இருந்தார்.
பதிலுக்கு வெற்றி இலக்கினை அடைய ஆடியிருந்த மொனராகலை மாவட்ட அணி ஹர்ஷ ராஜபக்ச ஆரம்ப வீரராக வந்து பெற்ற அரைச்சதத்துடன் வெற்றி இலக்கினை எட்டியது.
போட்டியின் சுருக்கம்
இரத்தினபுரி மாவட்டம் – 151 (36.5) – மதுரங்க சொய்ஸா 38, தமித் பிரியதர்ஷன 35, சஞ்சுல அபேவிக்ரம 28, சமிக்கர எதிரிசிங்க 4/42
மொனராகலை மாவட்டம் – 157/6 (33.2) – ஹர்ஷ ராஜபக்ஷ 51, சமிக்கர எதிரிசிங்க 23, இவங்க சஞ்சுல 2/21, சாணக்க ருவன்சிரி 2/39
போட்டி முடிவு – மொனராகலை மாவட்டம் 4 விக்கெட்டுகளால் வெற்றி
களுத்துறை எதிர் கம்பஹா
பனாகொட மைதானத்தில் முடிவுற்ற இப்போட்டியில், சஞ்சய சத்துரங்க மற்றும் மாதவ நிமேஷ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்துடன் 274 ஓட்டங்களினை பெற்றிருந்தது.
இதனையடுத்து வெற்றி இலக்கினை அடைய மைதானம் விரைந்த கம்பஹா மாவட்ட இளம் அணி நிப்புன தேஷான் மற்றும் கயான் மனிஷன் ஆகியோரின் சிறப்பு பந்து வீச்சினால் 202 ஓட்டங்களுடன் சுருண்டது.
முன்னர் திறமையான ஆட்டத்தினை வெளிக்காட்டியிருந்த நிப்புன தேஷான் மற்றும் கயான் மனிஷன் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
களுத்துறை மாவட்டம் – 274 (49.2) – சஞ்சய சத்துரங்க 52, மாதவ நிமேஷ் 48, தனுர பெர்னாந்து 3/36, பசிந்து லக்ஷான் 4/47
கம்பஹா மாவட்டம் – 202 (45.2) – உதித் பெர்னாந்து 47, லஹிரு விக்கிரமசிங்க 39, ருக்ஷான் விஜயசிங்க 33, நிப்புன தேஷான் 4/38, கயான் மனிஷன் 4/25
போட்டி முடிவு – களுத்துறை மாவட்டம் 72 ஓட்டங்களால் வெற்றி
மட்டக்களப்பு எதிர் திருகோணமலை
திருகோணமலை மாவட்ட அணியின் தலைவர் முதலில் இப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணிக்கு துடுப்பாட சந்தர்ப்பம் வழங்கியிருந்தார்.
முதலில் துடுப்பாடிய மட்டக்களப்பு அணியில், பானுக்க ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட 65 ஓட்டங்களுடன் அவ்வணி பிரகாசித்திருப்பினும், பின்னர் திருகோணமலை அணியின் புத்திக்க சந்தருவன் கைப்பற்றிய விக்கெட்டுகள் காரணமாக 200 இற்கும் குறைவான ஓட்டங்களிற்குள் அவ்வணி மடங்கியது.
இதனையடுத்து வெற்றி இலக்கினை தொடுவதற்கு பதிலுக்கு ஆடிய, திருகோணமலை மாவட்ட அணி திமுத் வராப்பிட்டிய, லஹிரு சிறி லக்மால் மற்றும் ராஜூ கயாஷன் ஆகியோரின் சிறப்பாட்டத்துடன் வெற்றி பெற்றது
போட்டியின் சுருக்கம்
மட்டக்களப்பு மாவட்டம் – 196 (47.4) – பானுக்க ராஜபக்ஸ 65, லசித் லக்ஷான் 37, புத்திக்க சந்தருவன் 4/32, சுமிந்த லக்ஷான் 3/25
திருகோணமலை மாவட்டம் – 202/7 (47.3) – திமுத் வராப்பிடிய 52, ராஜூ கயாஷன் 44, லஹிரு சிறி லக்மால் 42, தினுக ஹெட்டியராச்சி 4/28
போட்டி முடிவு – திருகோணமலை மாவட்டம் 3 விக்கெட்டுகளால் வெற்றி