DRS சர்ச்சையை தில்ருவான் பெரேராவுக்காக தெளிவுபடுத்த விரும்பும் ஹேரத்

988
SLC, Herath offer clarity on controversial DRS appeal

இலங்கை அணியின் முன்னணி சுழல் வீரரான ரங்கன ஹேரத், தில்ருவான் பெரேராவின் சர்சைக்குரிய DRS (தீர்ப்பு மாற்றும் வாய்ப்பு) விடயத்தில் புதிய கருத்துக்களை வெளியிட்டு தனது சக அணி வீரருக்கு ஆதரவு தரும் விதமாக செயற்பட்டிருக்கின்றார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்துக்கு பிறகு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஹேரத், குறிப்பிட்ட ஆட்டமிழப்பு வழங்கப்பட்ட போது கள நடுவராக நின்ற நைகல் லோங் இடம் தான் இன்னும் எத்தனை தீர்ப்பு மாற்றும் (Reviews) வாய்ப்புக்கள் இலங்கை அணிக்கு இருப்பதாக கேள்வியெழுப்பி இருந்தாக தெரிவித்திருந்தார்.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் கொழும்பில்

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள்…

மொஹமட் சமி, பெரேராவின் விக்கெட்டினை கைப்பற்ற முன்னர் போட்டியின் 57 ஆவது ஓவரில் பெரேராவுக்கு LBW முறையில் ஆட்டமிழப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஓய்வறை நோக்கி நடையை கட்ட தயாராகியிருந்த பெரேரா சடுதியான முறையில் தனது ஆட்டமிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மூன்றாம் நடுவரின் உதவியினை நாடியிருந்தார். இந்த நிகழ்வே சர்சைக்குரிய விடயமாக மாறியிருந்தது.

மூன்றாம் நடுவருக்கு விடுத்த வேண்டுகோள் வெற்றியினை தர ஆட்டமிழப்பில் இருந்து தப்பிக்கொண்ட பெரேரா, ஹேரத்துடன் சேர்ந்து இலங்கை அணியின் 8ஆம் விக்கெட்டுக்காக 43 ஓட்டங்களினை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த இணைப்பாட்டத்தின் உதவியினால் இலங்கை அணி தமது முதல் இன்னிங்சில் இந்திய அணிக்கெதிராகப் பெற்ற ஓட்ட முன்னிலையினை அதிகரித்துக் கொண்டது.

இந்திய வீரர்கள் இந்நிகழ்வு பற்றி எந்தவித முறைப்பாடுகளையும் தெரிவிக்காத நிலையில், பெரேரா இலங்கை வீரர்களின் ஓய்வறையில் இருந்து சமிக்ஞைகளை பெற்ற பின்னரே மூன்றாம் நடுவரின் உதவியினை நாடியதாக தற்போது குற்றம் சுமத்தப்படுகின்றது.

இது மிகவும் சிறிய விடயம். உண்மையில் என்ன நடந்தது என்றால் நான் களநடுவராக பணியாற்றிய நைகல் லோங் இடம், எமது அணிக்கு இந்த தீர்ப்பை மாற்றும் வாய்ப்பு (Reviews) ஏதும் எஞ்சியிருக்கின்றதா என கேட்டிருந்தேன். ஒரு வாய்ப்பு எஞ்சியிருந்தது எனத் தெரியவந்தது. தில்ருவான் பெரேரா இதைக்கேட்ட பின்னர் மூன்றாம் நடுவரின் உதவியினை நாடியிருக்க வேண்டும். “  என ஹேரத் கூறியிருந்தார்.

துடுப்பாட்டத்தில் ஜொலித்த ஹேரத்; நேர்த்தியான ஆரம்பத்துடன் இந்தியா

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில்…

இன்னும் இந்த விடயத்தினை மேலும் தெளிவுபடுத்திய ஹேரத், “ நான் நடுவருடன் அவதானித்த காரணத்தினால் வீரர்களின் ஓய்வறையிலிருந்து யாரும் சமிக்ஞைகள் விடுத்ததை பார்க்கவில்லை. அதோடு நான் அவரை (ஓய்வறை நோக்கி செல்ல வேண்டாம்) என மீண்டும் கூப்பிடவில்லை. அவர் நான் போட்டி நடுவருடன் பேசியதை கேட்டிருக்க வேண்டும். அதன் பின்னரே அவர் மூன்றாம் நடுவரின் உதவியை பெற முனைந்திருக்க வேண்டும்.” என்றார்.

அதோடு இலங்கை கிரிக்கெட் வாரியமும் (SLC) இந்த தீர்ப்பு மாற்ற முறை (DRS) விடயம் தொடர்பாக அறிக்கைகளை விட்டிருக்கின்றது. அந்த அறிக்கையில் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கை கிரிக்கெட் (வாரியம்) இலங்கைஇந்திய அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் இன்று (17) மதியம் நடைபெற்றதாக கூறப்படும் தில்ருவான் பெரேராவின் DRS சர்ச்சை விடயத்தினை  தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகின்றது. “

“ (இவ்விடயத்தில்) எமக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்களின் கூற்றுப்படி  “ தகவல்கள் ஓய்வறையில் இருந்து வந்தன. “ என்னும் விடயம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. “

இலங்கை அணிக்குரிய தீர்ப்பு மாற்றும் வாய்ப்புக்கள் (Reviews) முடிந்து விட்டதாக தவறாக எண்ணிய தில்ருவான் பெரேரா மைதானத்தினை விட்டு வெளியேற முனைந்திருந்தார். ஆனால், ரங்கன ஹேரத் கள நடுவருடன்  தீர்ப்பு மாற்றும் வாய்ப்புக்கள் இலங்கை அணிக்கு எஞ்சியிருக்கின்றதா? என்கிற விடயத்தினை கேட்க அதற்கு நடுவர் இருக்கின்றது என்று பதில் சொல்லியிருந்தார்.

இதனை அடுத்தே தில்ருவான் மூன்றாம் நடுவரின் உதவியினை நாடியிருந்தார். “

அதோடு இன்னுமொரு விடயத்தினையும் எடுத்து வைக்க விரும்புகின்றோம். இலங்கை வீரரோ அல்லது கிரிக்கெட் சார்ந்த உத்தியோகத்தர் ஒருவரோ .சி.சி இன் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பதோடு மட்டுமின்றி  விளையாட்டின் நேர்மை தன்மையினை பேணி நடக்கும் குணம் கொண்டவர்கள், அவர்கள் கிரிக்கெட் விளையாட்டின் புனித தன்மையினையும் மதிப்பவர்கள்

<

இன்னும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், அபார அரைச்சதம் (67) ஒன்றுடன் இந்தியாவை விட 122 ஓட்டங்களால் இலங்கை முன்னிலை வகிக்க பிரதான காரணமாக இருந்தவருமான ஹேரத் தனது கருத்துக்களை மேலும் பகிர்ந்திருந்தார்.

துடுப்பாட்ட வீரராக நல்ல முறையில் விளையாட நினைத்ததோடு நேர்மனப்பாங்கோடும்  நான் இருந்தேன். இரண்டு அணிகளதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கே அனைத்து சிறப்புக்களும் சேரும். போட்டியின் முதல் இரண்டு நாட்களினையும் ஒப்பிடும் போது இன்றைய நாள் எமக்கு துடுப்பாட மிகவும் இலகுவாக அமைந்திருந்தது. இதனாலேயே, நாங்கள் இந்திய அணியினை விட அதிக ஓட்டங்களில் முன்னிலை பெற்றிருந்தோம். “

இந்தப போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டிருப்பினும், இரண்டு அணிகளதும் சுழல் வீரர்கள் சிறியதொரு பங்கினையே பந்துவீச்சில் வழங்கினர்.

ஒரு சுழல் வீரராக என்னால் இந்த மைதானத்தின் (பந்து வீசப்படும்) நடுப்பகுதி சிறந்தது எனக் கூற முடியவில்லை. நான் பந்து சுழலை காட்டும் என எதிர்பார்த்திருந்தேன். நான் எதிர்பார்த்த சுழலுக்கு இந்த மைதானம் சிறிதேனும் ஒத்து உதவவில்லை. போட்டியின் நான்காம் இன்னிங்சில் சுழல் வீரர்கள் சாதக நிலைமையினைப் பெற்றுக் கொள்வர். “ என ஹேரத் பேசியிருந்தார்.