இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட் தடுப்பூசி?

166

இலங்கையின் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிர்காலத்தில் கொவிட்-19 வைரஸிற்கான தடுப்பூசியினை வழங்குவது தொடர்பில் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்திருக்கின்றார். 

IPL ஏலத்துக்கு 31 இலங்கை வீரர்கள் பதிவு

கொவிட் தடுப்பூசி வழங்க முன்னர், வீரர்கள் தொடர்பில் தமது வைத்தியக் குழுவிடம் கலந்துரையாடவிருப்பதாகவும் ஏஷ்லி டி சில்வா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

”பேராசியர் அர்ஜுன டி சில்வா தலைமையிலான எமது வைத்தியக் குழுவிடம் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம். அவர்கள் எமது வீரர்களின் உடல்நிலை தொடர்பில் தற்போது அவதானம் எடுத்திருக்கின்றனர்” 

மேலும் பேசிய டி சில்வா, தடுப்பூசி தொடர்பான இறுதித் தீர்மானம் இலங்கை அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கின்றார். 

”இலங்கை அரசாங்கத்தின் உத்தரவின் படி, முதல்நிலை ஊழியர்களுக்கும் முக்கியமான பிரதிநிதிகளுக்குமே முதலில் தடுப்பூசி வழங்கப்படவிருக்கின்றது. எனவே, நாம் அரசாங்கத்துடன் பேச வேண்டும். இதனால், நாம் இன்னும் தடுப்பூசி தொடர்பில் இறுதி முடிவு எடுக்கவில்லை.” 

முதல்முறையாக இலங்கை கிரிக்கெட் அணியில் சாமிக்க கருணாரத்ன மற்றும் பினுர பெர்னாந்து போன்றோர் கொவிட் – 19 தொற்று ஏற்பட்டிருப்பதாக கடந்த மாதம்  இணங்காணப்பட்டிருந்தனர்.  

Video – தேர்வுக் குழுவின் அடுத்த தலைவர் யார்? Sri Lanka Cricket பரிந்துரை…!

அதேவேளை, அண்மையில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆத்தர் மற்றும் முன்வரிசை துடுப்பாட்டவீரர் லஹிரு திரிமான்ன ஆகியோருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருந்தது. 

இதனால், இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையில் இம்மாதம் நடைபெறவிருந்த இருதரப்பு கிரிக்கெட் தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<