இலங்கை – அயர்லாந்து போட்டி அட்டவணையில் மாற்றம்

Ireland tour of Sri Lanka 2023

150

சுற்றுலா அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (14) அறிவித்துள்ளது.

அதன்படி அயர்லாந்து அணி ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதுடன், டெஸ்ட் தொடருடன் இந்த போட்டித்தொடர் ஆரம்பிக்கவுள்ளது.

முன்னதாக இரு அணிகளுக்கும் இடையில் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது.

எவ்வாறாயினும், இரு நாடுகளின் கிரிக்கெட் சபைகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இரண்டு ஒருநாள் போட்டிகளும் நீக்கப்பட்டு, ஒரு டெஸ்ட் போட்டிக்குப் பதிலாக இரண்டு டெஸ்ட் போட்டிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஏப்ரல் 16ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் ஏப்ரல் 24ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், இரண்டு டெஸ்ட் போட்டிகளும் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை

  • முதல் டெஸ்ட் போட்டி – ஏப்ரல் 9 – காலி
  • 2ஆவது டெஸ்ட் போட்டி – ஏப்ரல் 24 – காலி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<