3-0 என்ற ரீதியில் இங்கிலாந்தை வென்றது இலங்கை

194
sl u19 v eng u19

இலங்கை 19 வயதிற்கு உட்பட்டோர் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே நடைபெற்று முடிவடைந்த டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய நிலையில் அதன் பின் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி வெற்றியைப் பெற்று இருந்த நிலையில் நேற்று 3ஆவதும் இறுதியுமான போட்டி கெண்டபரி மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.

இதன் படி முதலில் ஆடிய இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி 49.1 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி சார்பாக 2ஆவது போட்டியில் சதம் விளாசிய அவிஷ்க பெர்னாண்டோ இந்தப் போட்டியிலும் அபாரமாக ஆடி சதம் அடித்து அசத்தினார்.

அவர் 138 ஓட்டங்களையும், டிலான் ஜயலத் 67 ஓட்டங்களையும், தலைவர் சரித் அசலன்க 30  ஓட்டங்களையும் பெற்றனர். இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணியின் பந்துவீச்சில் பென் க்ரீன் 3 விக்கட்டுகளையும் பணயி மற்றும் டுஹிக் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்கள்.

பின்னர் 301 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 276 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இவர்களது துடுப்பாட்டத்தில் பொப் 87 ஓட்டங்களையும், ஹன்கின்ஸ் 79 ஓட்டங்களையும், பெஸ் ஆட்டம் இழக்காமல் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி சார்பில் பந்து வீச்சில் வணிந்து ஹசரங்க டி சில்வா 3 விக்கட்டுகளையும், தமித் சில்வா மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் கைப்பற்றி இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.

இதன் மூலம் இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி இந்த இறுதி ஒருநாள் போட்டியில் 24 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்து 3-0 என்ற அடிப்டையில் தொடரை வென்றது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை U19 – 300/10 (49.1)

அவிஷ்க பெர்னாண்டோ 138, டிலான் ஜயலத் 67, சரித் அசலன்க 30  

பென் க்ரீன் 59/3, பணயி 50/2, டுஹிக் 58/2

இங்கிலாந்து U19 – 276/9 (50)

பொப் 87, ஹன்கின்ஸ் 79, பெஸ் 34*

வணிந்து ஹசரங்க டி சில்வா 39/3, தமித் சில்வா 47/2, லஹிரு குமார 70/2

இங்கிலாந்து U19 அணி 24 ஓட்டங்களால் வெற்றி