இலங்கை துடுப்பாட்டத்தை சரி செய்ய வேண்டும் – குமார் சங்கக்கார

1503

உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணி தமது துடுப்பாட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட ஜாம்பவனுமான குமார் சங்கக்கார குறிப்பிட்டிருக்கின்றார்.

பாபர் அசாம், ஹஸரங்கவுடன் இணையும் மதீஷ!

கிரிக்கெட் போட்டியொன்றுக்கு வர்ணனை வழங்கும் போது இலங்கை அணி பற்றிப் பேசியிருந்த குமார் சங்கக்கார, இலங்கை அணி அண்மைக்காலமாக கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதனை பாராட்டி இருந்தார்.

இதேநேரம் இலங்கை அணி தொடர்பில் மேலும் பேசியிருந்த அவர் இலங்கை தமது துடுப்பாட்டத்தில் சில மாற்றங்களை செய்வது உலகக் கிண்ணத்திற்கு முன்னர் இடம்பெற வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது இலங்கை அணி தமது ஆரம்பத் துடுப்பாட்டம் தொடர்பில் அதிக கவனம் எடுக்க வேண்டுமென குமார் சங்கக்கார சுட்டிக்காட்டியிருந்தார். அதில் இலங்கை வீரர்கள் உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக சிறப்பான முறையில் தமது ஆரம்பத் துடுப்பாட்டத்தினை அமைத்துக்கொள்ள வேண்டும் என குமார் சங்கக்கார குறிப்பிட்டிருக்கின்றார்.

“போட்டிகளில் முன்னேற இலங்கை அணியானது எப்போதும் போட்டித் தன்மையுடன் காணப்பட வேண்டும்.”

இலங்கை அணி தாம் இறுதியாக விளையாடிய 14 ஒருநாள் போட்டிகளிலும் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்ததோடு, எதிரணிகளின் அனைத்து விக்கெட்டுக்களையும் குறிப்பிட்ட போட்டிகளில் கைப்பற்றி புதிய உலக சாதனையை நிலைநாட்டியிருந்தது. குமார் சங்கக்கார இலங்கை அணியின் பந்துவீச்சினை இவ்வாறு பாராட்டியிருந்தார்.

“நிலைமைகள் மைதானச் சொந்தக்கார அணிக்கு சாதகமாக இருந்த போதிலும் (இலங்கை அணியின்) பந்துவீச்சு பிரமாதமாக அமைந்திருந்தது. பந்துவீச்சு தொகுதி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்ததோடு, அது மிகச் சிறந்த முறையில் தொழிற்பட்டு வருகின்றது.” என்றார்.

உலகக் கிண்ணத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

இதேநேரம் உலகக் கிண்ணம் நடைபெறும் இந்திய மைதானங்கள் சுழலுக்கு எந்தளவிற்கு சாதகமாக இருக்கும் என்பது தொடர்பில் அறிந்து இலங்கை அணி செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<