இள வயதினருக்கான புதிய கால்பந்து தொடர் அறிமுகம்

86

இலங்கையின் இள வயதினரிடையே கால்பந்து விளையாட்டினை விருத்தி செய்யும் நோக்குடன் இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) புதிய கால்பந்து தொடர் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.  

Photos – Strategic Partnership for Youth Football Initiative – Press Conference

19 வயதின் கீழ்ப்பட்டோருக்கான இந்த கால்பந்து தொடர் இலங்கையின் 25 மாவட்டங்களிலும், முன்னணி நகரங்களிலும் இள வயதினரிடையே கால்பந்து விளையாட்டினை பிரபல்யப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்படவிருக்கின்றது. 

Y-19 என்னும் Brand இணை மையமாகக் கொண்ட இந்த கால்பந்து தொடரிற்கு தேசிய இளைஞர் லீக் (National Youth League) என பெயரிடப்பட்டுள்ளதோடு தொடரினை ஒழுங்கு செய்ய இலங்கை கால்பந்து சம்மேளத்துடன் லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை (Lyca’s Gnanam Foundation) கைகோர்க்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும் 

இந்த கால்பந்து தொடரினை ஆரம்பிப்பது தொடர்பிலான நிகழ்வு இந்த வார ஆரம்பத்தில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம் பெற்றிருந்தது. குறிப்பிட்ட நிகழ்வில் இலங்கை கால்பந்து சம்மேளன தலைவர் ஜஸ்வர் உமர், லைக்கா நிறுவனத்தின் தலைமை அதிகாரி அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை புதிதாக ஆரம்பிக்கப்படவிருக்கும் கால்பந்து தொடரின் மூலம் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 11,000 இற்கு மேற்பட்ட இளவயது கால்பந்து வீரர்கள் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது 

>>மேலும் கால்பந்து செய்திகளுக்கு<<