கட்டார் கிரிக்கெட் அணியின் தலைவராக இலங்கையின் ரிஸ்லான் இக்பால்

361

கட்டார் ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைவராக இலங்கையினைப் பிறப்பிடமாகக் கொண்ட ரிஸ்லான் இக்பார் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். 

கண்டி மாவட்டத்தினைப் பிறப்பிடமாகக் கொண்ட ரிஸ்லான் இக்பார், முத்தையா முரளிதரனின் பாடசாலையான கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியர் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணிக்கு மோசமான தோல்வி

தற்போது 36 வயதாகும் ரிஸ்லான் இக்பார், 2000 இன் ஆரம்ப காலங்களில் கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியர் கல்லூரியின் சிரேஷ்ட கிரிக்கெட் அணியினை வழிநடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கண்டி கிரிக்கெட் கழகத்தின் முன்னாள் வீரராகவும் காணப்படுகின்ற ரிஸ்லான் இக்பார், இலங்கை 19 வயது கிரிக்கெட் அணிக்காக தெரிவாகியிருந்தாகவும் குறிப்பிடப்படுகின்றது.

விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான ரிஸ்லான் இக்பார் 2010ஆம் ஆண்டிலிருந்து கட்டாரின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்திருந்ததோடு, பின்னர் 2019ஆம் ஆண்டு சவூதி அரேபிய அணிக்கு எதிரான T20I போட்டி மூலம் கட்டார் அணிக்காக சர்வதேச அறிமுகம் பெற்றிருந்தார்.

 இலங்கை தொடருக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் கொவிட்-19

மத்தியவரிசையில் அதிரடியான முறையில் துடுப்பாடி ஓட்டங்கள் குவிக்கும் ரிஸ்லான், உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் கட்டார் கிரிக்கெட் அணியின் பிரதி தலைவராகவும் இதற்கு முன்னர் செயற்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<