இந்திய கிரிக்கெட் அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஸ்ரேயாஸ் அய்யர், டெஸ்ட் மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து குறுகிய கால ஓய்வு ஒன்றினை எதிர்பார்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>சஞ்சனாவின் அதிரடியில் இலங்கை மகளிருக்கு ஹெட்ரிக் வெற்றி<<
தனது உடல்நிலையினைக் கருத்திற் கொண்டு அய்யர் இந்த தீர்மானத்தினை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அய்யர் தனது இந்த முடிவினை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (BCCI) அறிவித்துள்ளதாகவும் கூறப்பட்டிருக்கின்றது.
அவுஸ்திரேலிய A அணியுடனான இரண்டாவது நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டியில் இந்திய தரப்பின் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருந்த அய்யர் குறிப்பிட்ட போட்டியில் இருந்து விலகியதனை அடுத்தே, அவரது குறுகிய கால ஓய்வு முடிவும் வெளியாகியிருக்கின்றது.
அதேவேளை தனது ஓய்வு காலத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் இந்திய அணி அடுத்ததாக அவுஸ்திரேலிய அணியுடன் பங்கேற்கவுள்ள ஒருநாள் தொடரில் இந்திய அணியின் வீரர் தெரிவில் உள்ளடங்குவார் எனக் கூறப்பட்டுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<