தந்தையின் மறைவால் நாடு திரும்பும் ஹைதராபாத் வீரர்!

Indian Premier League 2021

430
IPLT20.COM

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL), சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இணைக்கப்பட்டிருந்த ஷேர்பன் ரதபோர்ட், அணியிலிருந்து விலகி மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

IPL தொடரின் இந்த ஆண்டுக்கான முதல் கட்ட போட்டிகளில் விளையாடிய, இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜொனி பெயார்ஸ்டோவுக்கு பதிலாக, ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமான இரண்டாவது கட்ட போட்டிகளுக்காக ஷேர்பன் ரதபோர்ட் இணைக்கப்பட்டிருந்தார்.

மீண்டும் பயிற்சிகளை ஆரம்பித்த அஞ்செலோ மெதிவ்ஸ்!

மேற்கிந்திய தீவுகள் வீரரான 23 வயதான ஷேர்பன் ரதபோர்ட், அவருடைய தந்தை உயிரிழந்த காரணத்தால், மீண்டும் நாட்டுக்கு திரும்பியுள்ளதாக சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில், தந்தையின் மறைவுக்காக ஷேர்பன் ரதபோர்ட் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இதயப்பூர்வமான இரங்கலை சன்ரைஸர்ஸ் குடும்பம் தெரிவிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் ஷேர்பன் ரதபோர்ட், தனது குடும்பத்துடன் இருப்பதற்காக IPL உயிரியல் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறுகிறார் என பதிவிடப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுமுடிந்த CPL தொடரில் சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பெட்ரியோர்ஸ் அணி கிண்ணத்தை வெற்றிக்கொண்டிருந்தது. குறித்த அணிக்காக, இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களை பெற்றிருந்த இவர், 262 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இம்முறை IPL தொடரில், ஹைதராபாத் அணி ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. தற்போதைய நிலையில், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மேலதிகமாக ஜேசன் ரோய் மாத்திரம் அணியில் உள்ளார். அத்துடன், T நடராஜன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் கொவிட்-19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…